நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் அல்ட்ராவைலட் (Ultraviolette). இது ஓர் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இதுவே எஃப்77 மேக் 2 (F77 Mach 2) எனும் எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்கக் கிடைக்கும். ஸ்டாண்டர்டு (Standard) மற்றும் ரெகான் (Recon) என்பதே அவை ஆகும். அல்ட்ராவைலட் எஃப்77 பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய எலெக்ட்ரிக் பைக் ஆகும். உதாரணமாக உலகின் முதல் நட்டுகள் மற்றும் போல்டுகள் தெரியாத வண்ணம் தயாரிக்கப்பட்ட பைக்காக இது காட்சியளிக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் முன்னர் பலகட்ட பலபரீட்சைக்கு உட்படுத்தி இருக்கின்றது, அல்ட்ராவைலட். அந்தவகையில், 20 நாட்களில் 7 ஆயிரம் கிமீட்டர்கள் பயணத்திற்கு இந்த பைக் உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், 15 செல்சியஸ் முதல் 47 செல்சியஸ் வரையிலான காலநிலையைக் கொண்ட பகுதிகளிலும் இந்த பைக் இயக்கப்பட்டு இருக்கின்றது.
இங்கு எங்குமே இந்த பைக் தோல்வியைக் காணவில்லை என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே அப்பைக் தற்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. எஃப்77 மேக்2 எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. அந்தவகையில், ஐரோப்பியா நடுகளில் இதை விற்பனைச் செய்ய அல்ட்ராவைலட் தற்போது திட்டமிட்டு இருக்கின்றது.

இந்த இந்திய தயாரிப்பிற்கு அங்கும் நல்ல வரவேற்பேக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக்கால் 15 ஆயிரம் கிலோ எடையைத் தாங்க முடியும் என அல்ட்ராவைலட் தெரிவித்து இருக்கின்றது. இது அந்த பைக்கின் எடையைக் காட்டிலும் 7 மடங்கு அதிகம் ஆகும்.
ஜெட் விமானங்களின் டிசைனைத் தழுவியே இந்த எலெக்ட்ரிக் பைக்கை அல்ட்ராவைலட் உருவாக்கி இருக்கின்றது. இந்த பைக்கை ஓட்டும்போதும்கூட ஜெட் விமானங்களில் உள்ள டர்பைனில் இருந்து வெளிவருவதைப் போன்ற சத்தமே அதிலும் வெளி வரும். நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் இரண்டு தேர்வகளும் வெவ்வேறு விதமான திறன் வெளிப்பாட்டு வசதியைத் தாங்கியவையாக இருக்கின்றன.

எஃப்77 மேக் 2-வின் சிறப்புகள்: அதிகபட்சமாக 27 kW பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இது 36.2 எச்பி திறனுக்கு இணையானது ஆகும். 90 என்எம் டார்க் வரை இது வெளியேற்றும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 155 கிமீ ஆகும்.
அதேவேளையில், வெறும் 2.9 செகண்டுகளிலேயே இது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டிவிடும். தேவேளையில், இது மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட 7.8 செகண்டுகளை எடுத்துக் கொள்ளும். மேலும், மூன்று விதமான ரைடிங் மோட்கள் இந்த பைக்கில் வழங்கப்ப்டடு இருக்கும். கிளைட், காம்பேட் மற்றும் பாலிஸ்டிக் ஆகியவையே அவை ஆகும்.
இதில் ஓர் முழு சார்ஜில் 211 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த வசதிகளுடன் சேர்த்து பிரத்யேக டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் விதமாக 5 அங்குல டிஎஃப்டி திரை இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அல்ட்ராவைல்ட்டின் ஆட்டோமேட்டிக் லினெக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால் இயங்கும்.
இதுதவிர, தானாகவே அட்ஜெஸ்ட் ஆகும் வசதிக் கொண்ட எல்இடி ஹெட்லைட், டூயல் எல்இடி டெயில் லைட் மற்றும் முன் பக்கத்தில் எச்சரிக்கும் லைட்டுகள் ஆகியவை இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை இரண்டு தேர்வுகளுக்குமான பொதுவான அம்சங்கள் ஆகும். ஆமாங்க, எஃப்77 ரெகோன் தேர்விலும் இந்த அம்சத்தை நம்மால் காண முடியும்.
இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் டிஜிட்டல் எல்இடி இணைப்பு வசதிக் கொண்டது ஆகும். இது இ-சிம் வாயிலாக இயங்கும். அதேவேளையில், கூடுதல் அம்சமாக 4 லெவல்கள் கொண்ட டிராக்சன் கன்ட்ரோல் போன்றவை எஃப்77 ரெகோனில் வழங்கப்பட்டு இருக்கும். ஆனால், எஃப்77 மேக்2-வின் வழக்கமான தேர்வில் நீங்கள் விருப்பப்பட்டால் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.
இத்துடன், இரண்டு தேர்வுகளிலும் மோனோ மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ், ரைடு-பை-ஒயர், ப்ரீலோடு அட்ஜெஸ்ட் வசதிக் கொண்ட டெலிஸ்கோபிக் ஃபோர்க் (முன் பக்கம்), ப்ரீ-லோடு அட்ஜஸ்டபிள் மோனோஷாக் (பின் பக்கம்), இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் (முன் வீலில் 320 மிமீட்டரிலும், பின் வீலில் 230 மிமீ அளவிலும் இருக்கும்) என ஏகப்பட்ட வசதிகளையே எஃப்77 மேக் 2 கொண்டிருக்கின்றது.
எஃப்77 மேக் 2 ரெகோன்-இன் சிறப்புகள்: இது ஓர் முழு சார்ஜில் 323 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இதற்காக 10.3 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 155 கிமீ கும். இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 30 kW (40.2 எச்பி) பவர் மற்றும் 100 என்எம் டார்க் வரை வெளியேற்றும்.
இந்த தேர்வு வழக்கமான எஃப்77 மேக்2-வைக் காட்டிலும் சற்று அதிக திறனை வெளியேற்றக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. இது வெறும் 2.8 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தையும், 7.7 செகண்டுகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தையும் இது எட்டிவிடும்.
வாரண்டி திட்டம்: வழக்கமான வாரண்டியாக புதிய இ-பைக்கை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 3 ஆண்டுகள்/ 30 ஆயிரம் கிமீ வாரண்டியை அல்ட்ரா வைலட் வழங்குகின்றது. இதுதவிர, யுவி கேர், யுவி கேர் பிளஸ் மற்றும் யுவி கேர் மேக்ஸ் ஆகிய திட்டங்களையும் கூடுதல் கட்டணத்தின்கீழ் அல்ட்ராவைலட் வழங்குகின்றது.
இந்த திட்டத்தின்கீழ் 3 ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிமீ, 5 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ வாரண்டி மற்றும் 8 ஆண்டுகள் 8 லட்சம் கிமீ வாரண்டி ஆகிய கூட்டப்பட்ட வாரண்டி திட்டங்களையே அல்ட்ராவைலட் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றது.
விலை மற்றும் சிறப்பு சலுகை: அறிமுகமாக இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு ரூ. 2.99 லட்சம் மற்றும் ரூ. 3.99 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த விலை பொருந்தும். 1001வது வாடிக்கையாளருக்கு இதைவிட அதிக விலையிலேயே எஃப்77 மேக்2 விற்கப்பட இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களின் மனம் கவர்ந்த எலெக்ட்ரிக் பைக்காக இது மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் வேறு எந்த பிராண்டும் இந்த அளவிற்கு அதிக திறனை வெளியேற்றும் எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே பலரின் கவனத்தை புதிய எஃப்77 மேக் 2 ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









