அல்டராவைலட் செய்த தரமான சம்பவம்! முழு தகவல் வீடியோவில்!
அல்ட்ராவைலட் நிறுவனம் முதன்முறையாக தமிழகம் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட டிசி பாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அல்ட்ராவைலட் எஃப் 77 பைக் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் பைக்குகளை விரைவாக சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். வீட்டில் உள்ள சார்ஜரை விட இதில் வேகமாக சார்ஜ் ஏறிவிடும்.
தற்போது இந்தியாவில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் வாகனங்களில் மிகப்பெரிய பிரச்சனை நீண்ட தூரம் அதில் பயணிக்க முடியாது என்பது தான். அதற்கு ஆங்காங்கே சார்ஜிங் ஸ்டேஷன் கட்டுமானங்கள் என்பது தேவைப்படுகிறது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தான் அல்ட்ராவைலட் நிறுவனம் முதல் கட்டமாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை வைத்துள்ளது.இது குறித்த விளக்கமான வீடியோவை கீழே காணுங்கள்.
அல்ட்ரா வைலட் நிறுவனம் நிறுவியுள்ள இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களில் 12 கிலோ வாட் மற்றும் 6 கிலோ வாட் ஆகிய இரண்டு விதமான சார்ஜர்கள் இருக்கின்றன. இந்த சார்ஜர்கள் மூலம் சார்ஜ் போடுவதால் 20 முதல் 80 சதவீதமான பேட்டரி 40 முதல் 60 நிமிடத்தில் சார்ஜ் ஏறிவிடும் என நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

தமிழகம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் தேசிய நெடுஞ்சாலைகளாக பார்த்து இந்த சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக நீண்ட தூரம் அந்த பைக்கில் பயணம் செய்பவர்கள் ஆங்காங்கே ரெஸ்ட் எடுக்கும் சமயத்தில் இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனில் பைக்கை சார்ஜ் போட்டுவிட்டு ரெஸ்ட் எடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications








