மேட்-இன்-இந்தியா பைக்குகளை இனி உலகமே சொல்லும் - மேலும் ஒரு வெளிநாட்டில்!!

அல்ட்ராவொய்லெட் (Ultraviolette), பெங்களூரை சேர்ந்த இந்தியாவின் எலக்ட்ரிக் சூப்பர்பைக் உற்பத்தி நிறுவனம். சமீப காலமாக, ஐரோப்பா வரையில் மார்க்கெட்டை விரிவுப்படுத்தி உள்ள அல்ட்ராவொய்லெட் நிறுவனம் தற்போது புதியதாக நேபாளத்திலும் தனது பைக்குகளை விற்பனை செய்ய தயாராகி வருகிறது. மேலும், இதற்காக அந்த நாட்டில் தனது ஷோரூமை துவங்கியுள்ள அல்ட்ராவொய்லெட் நிறுவனம் அங்கு என்னென்ன மாதிரியான எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்ய உள்ளது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர்பைக் உற்பத்தி நிறுவனமான அல்ட்ராவொய்லெட் பெங்களூருக்கு வெளியே தொழிற்சாலையை கொண்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் பைக்குகள் தற்போதைக்கு இந்தியாவில் 5 நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது, 5 நகரங்களில் மட்டுமே அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூம்கள் உள்ளன.

ultraviolette s first nepal showroom

ஆனால், அதற்குள்ளாகவே வெளிநாடுகளில் தனது எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்ய இந்த நிறுவனம் தயாராகி விட்டது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் ஐரோப்பாவில் அல்ட்ராவொய்லெட்டின் எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எலக்ட்ரிக் பைக்குகள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

இந்த நிலையில், இந்தியாவை தாண்டி மற்றுமொரு வெளிநாடாக நேபாளத்தில் அல்ட்ராவொய்லெட் தனது வணிகத்தை துவங்கியுள்ளது. நேபாளத்தில் அல்ட்ராவொய்லெட் களம் காண உள்ள விஷயம் ஏற்கனவே நமக்கு தெரியவந்திருந்தது. தற்போது, நேபாளத்தில் தனது முதல் ஷோரூமை அல்ட்ராவொய்லெட் திறந்துள்ளது. நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் திறக்கப்பட்டுள்ள இந்த ஷோரூமின் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ultraviolette s first nepal showroom

காத்மண்டுவில் நாராயண் சாவுர் என்கிற பகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்த ஷோரூம் வாயிலாக அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் பைக்குகளை வாங்குவது மற்றும் அவற்றிற்கான சர்வீஸ்களை பெறுவது மட்டுமில்லாமல், பைக்கிற்கான ஆக்ஸஸரீகளையும் பெறலாம் என அல்ட்ராவொய்லெட் தெரிவித்துள்ளது. பைக்கில் உள்ள பழுதுகளை கண்டறிய அதிநவீன கருவிகள் பெங்களூரில் உள்ள அல்ட்ராவொய்லெட்டின் தலைமையகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும், பைக்குகளை சர்வீஸ் செய்வதற்கான உதவிகளையும் பெங்களூரில் இருந்து வழங்க அல்ட்ராவொய்லெட் திட்டமிட்டுள்ளது. நேபாளத்தில் வணிகத்தை மேற்கொள்வதற்காக அங்குள்ள கேடியா க்ரூப் உடன் அல்ட்ராவொய்லெட் நிறுவனம் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த 2024ஆம் ஆண்டு முடிவதற்குள் உலகம் முழுவதும் 50 ஷோரூம்களை நிறுவ வேண்டும் என்கிற கொள்கை உடன் அல்ட்ராவொய்லெட் செயல்பட்டு வருகிறது.

ultraviolette s first nepal showroom

அதாவது, தன்னை ஒரு உலகளாவிய நிறுவனமாக காட்ட அல்ட்ராவொய்லெட் விரும்புகிறது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது நேபாளத்தில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதை போல், நேபாளத்திலும் 2 விதமான வேரியண்ட்களில் அல்ட்ராவொய்லெட் எஃப்77 மேக் 2 எலக்ட்ரிக் பைக் விற்பனை செய்யப்பட உள்ளது.

பேஸ் மற்றும் ரெகான் என்பன அல்ட்ராவொய்லெட் எஃப்77 மேக் 2 பைக்கின் அந்த 2 வேரியண்ட்கள் ஆகும். இதில் பேஸ் வேரியண்ட்டில் 7.1kWh பேட்டரியும், ரெகான் வேரியண்ட்டில் 10.3kWh பேட்டரியும் பொருத்தப்படுகிறது. இதில், பேஸ் வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 211கிமீ வரையிலான ரேஞ்சையும், ரெகான் வேரியண்ட்டில் 323மிமீ வரையிலான ரேஞ்சையும் பெறலாம் என அல்ட்ராவொய்லெட் நிறுவனம் தெரிவிக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் பைக்குகள் இந்திய மார்க்கெட்டை காட்டிலும் அமெரிக்க, ஐரோப்பிய மார்க்கெட்களுக்கு இன்னும் ஏற்றதாக இருக்கும் என ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் கூறி வருகிறோம். ஆனால், பொருளாதாரத்தில் நம்மை விட கீழ்தங்கி உள்ள நேபாளத்தில் அல்ட்ராவொய்லெட்டின் சூப்பர் பைக்குகளுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 9, 2024, 19:39 [IST]
English summary
Ultraviolette opened first showroom in nepal with partnership of kedia group
மேலும்... #ultraviolette #electric bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X