அல்ட்ராவைல்ட் பைக் வச்சிருக்கீங்களா? நீங்க இனி லாங் டிரைவ் போறத பத்தி கவலைப்படவே வேணாம்!

அல்ட்ராவைலட் நிறுவனம் தனது முதல் கட்ட சூப்பர் நோவா டிசி பாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சார்ஜிங் ஸ்டேஷனில் அல்ட்ராவைலட் பைக்குகளை மிக வேகமாக சார்ஜ் செய்ய முடியும். அதன்படி மகாராஷ்டிரா கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகளில் இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைந்துள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அல்ட்ராவைலட் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும் மிக முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் பைக் செக்மெண்டில் தனது வாகனங்களை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது.

ultraviolette supernova charging station

இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி மற்றும் அதற்கான சார்ஜிங் கட்டுமானங்களையும் தயாரித்து வருகிறது. இதன் முக்கிய படியாக தற்போது பொது இடங்களில் சார்ஜிங் மையங்களை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நிறுவனம் சூப்பர்நோவா என்ற சார்ஜிங் ஸ்டேஷனை முதற்கட்டமாக அமைத்துள்ளது.

இந்த சூப்பர் நோவா சார்ஜிங் ஸ்டேஷனில் டிசி பாஸ்ட் சார்ஜர்களை பொருத்தி, இந்நிறுவனம் தனது அல்ட்ராவைலட் பைக்குகளை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு பொது இடத்தில் வேகமாக சார்ஜ் ஏற்றும் ஆப்ஷன்களை வழங்குகிறது. தமிழகம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் முதற்கட்டமாக 100க்கும் அதிகமான சார்ஜிங் ஸ்டேஷன்களை தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

ultraviolette supernova charging station

இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களை அந்நிறுவனம் ஒரு சோதனை முயற்சியாகவே மேற்கொண்டுள்ளது. இது வெற்றி பெறும் பட்சத்தில் நாடு முழுவதும் இது போன்ற சார்ஜிங் ஸ்டேஷனுக்கு அமைக்க நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்த சார்ஜிங் ஸ்டேஷனுக்கு 12 கிலோ வாட் மற்றும் 6 கிலோ வாட் ஆகிய 2 விதமான சார்ஜர்கள் இடம் பெறுகின்றன.

இதில் 12 கிலோ வாட் சார்ஜர் இரண்டு 6 கிலோ வாட் சார்ஜராகவும் 6 கிலோ வாட் சார்ஜர் இரண்டு, 3 கிலோ வாட் சார்ஜராகவும் இடம்பெறுகிறது. இந்த சார்ஜர்கள் எல்லாம் டைப் 6 கனெக்டர் முறையில் இருக்கும் படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த சார்ஜர்கள் மூலம் அல்ட்ரா வைலட் எஃப் 77 பைக்குகளை மிக சுலபமாக சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும்.

ultraviolette supernova charging station

அல்ட்ராவைலட் எஃப்77 பைக்குகள் இந்த சார்ஜர் மூலம் சார்ஜ் ஏற்றினால் 20-80 சதவீத சார்ஜை வெறும் 40-60 நிமிடத்தில் ஏற்றி விடும். இதன் மூலம் ஒரு நபர் விட்டு மற்றொரு நகருக்கு பயணிக்க இந்த அல்ட்ரா வைலட் எஃப்77 பைக்குகள் பயன்படும். இதற்காக அந்நிறுவனம் இந்த குறிப்பிட்ட மூன்று மாநிலங்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் தேசிய நெடுஞ்சாலைகள் பிரபலமான கப்பைகள் ஆகிய இடங்களில் இந்த சார்ஜிங் மையங்களை அமைத்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ நாராயன் சுப்பிரமணியம் கூறும்போது: " அல்ட்ராவைலட் நிறுவனத்தின் சூப்பர் நோவா சார்ஜிங் ஸ்டேஷன்கள் எங்களுக்கு ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. இதன் மூலம் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள எளிதான சார்ஜிங் மையங்களை வழங்குகிறோம். இந்த சார்ஜிங் மையங்களில் முக்கிய நோக்கமே ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு எங்கள் எஃப்77 வாடிக்கையாளர்கள் பயணிக்க எந்தவித தடையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான்." என கூறினார்.

இது குறித்து அந்நிறுவனத்தின் சிடிஓ நீரஜ் ராஜமோகன் கூறும்போது: " அல்ட்ராவைலட் நிறுவனம் சூப்பர் நோவா மற்றும் சூப்பர் நோவா பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷனுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். 6 கிலோ வாட் மற்றும் 12 கிலோ வாட் சார்ஜர்களில் இரண்டு கன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறோம். இது இந்தியாவில் உள்ள சிறந்த தொழில்நுட்பமாக இருக்கும். எஃப் 77 ரைடிங் கம்யூனிட்டிக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என கூறினார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் ஏற்றுக் கொள்வதில் இருக்கும் ஒரே தயக்கம் நீண்ட தூரம் அதில் பயணிக்க முடியாது என்பதுதான். அதற்கு ஆங்காங்கே சார்ஜிங் ஸ்டேஷனுக்கு அமைப்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. அதை புரிந்து கொண்டு அல்ட்ராவைலட் நிறுவனம் இந்த சூப்பர் நோவா சார்ஜிங் ஸ்டேஷன் அமைந்துள்ளது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 14, 2024, 18:40 [IST]
English summary
Ultraviolette supernova dc fast charging stations phase 1 launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X