ஊரு முழுக்க இப்ப இந்த பைக்கை பற்றிதான் பேச்சு.. ஏப்ரல் 24க்காக ஒட்டுமொத்த இந்தியாவே காத்து கெடக்குது!

பிரபல மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two-Wheeler) உற்பத்தி நிறுவனமான அல்ட்ராவைலைட் (Ultraviolette), இந்தியாவில் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் பைக் (Electric Bike) மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாத இறுதிக்குள்ளேயே அது அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

இந்த புதுமுக இ-பைக் தற்போது விற்பனையில் இருக்கும் அனைத்து எலெக்ட்ரிக் பைக்குகளைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எப்போது அறிமுகமாக இருக்கின்றது? அந்த எலெக்ட்ரிக் பைக்கில் என்ன மாதிரியான சிறப்பு வசதிகளை எதிர்பார்க்கலாம்? என்பது பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

Ultraviolette ebike

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் அல்ட்ராவைலட். இந்த நிறுவனத்தின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் பைக் மாடலாக எஃப்77 (F77) இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கே தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதி வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட மின்சார பைக் ஆகும்.

இந்த எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளைவிட அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட மற்றுமொரு புதுமுக இ-பைக்கையே நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஏப்ரல் 24லேயே அது அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கானது நிறுவனம் ஏற்கனவே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் எஃப்77 மாடலின் அதிக வேகத்தில் செல்லும் வெர்ஷனாக இருக்கலாம் ஆட்டோத்துறை வல்லுநர்கள் யூகிக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் அந்த புதிய வாகனம் நிறுவனத்தின் புகழ்பெற்ற கான்செப்ட் மாடலான எஃப்99 (F99 prototype)-ஐ தழுவியதாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த பைக்கை நிறுவனம் இஐசிஎம்ஏ 2023-லேயே காட்சிப்படுத்தப்பட்டது என்து குறிப்பிடத்தகுந்தது.

ஏற்கனவே கூறியதைப் போல இந்தியாவின் அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் பைக்காக எஃப்77 இ-பைக் காட்சியளிக்கின்றது. இதில் 27 kW திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது 85 என்எம் டார்க் வரை வெளியேற்றும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 140 கிமீ வேகம் ஆகும்.

இதைவிட அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட இ-பைக்கையே அல்ட்ராவைலட் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஆனால் அதன் துள்ளியமான டாப் ஸ்பீடு என்ன என்பதை அல்ட்ராவைலட் வெளியிடவில்லை. ஏப்ரல் 24 அறிமுக நாளின்போது அதுபற்றிய தகவலை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்பாக எஃப்77 இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 307 கிலோ மீட்டர் ரேஞ்ஜை வழங்கும். மேலும், இது வெறும் 2.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், அல்ட்ராவைலட் நிறுவனம் இந்த பைக்கை எஃப்77 ரெகோன் (F77 Recon) மற்றும் எஃப்77 ஸ்பேஸ் எடிசன் (F77 Space Edition) என்கிற சிறப்பு பதிப்புகளிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தயாரிக்கப்படும் உலக தரம் வாய்ந்த எலெக்ட்ரிக் பைக் மாடலாக அல்ட்ராவைலட் எஃப்77 இருக்கின்றது. இதற்கு பிரீமியம் டூ-வீலர் காதலர்கள் மத்தியிலேயே வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ரூ. 3.80 லட்சத்திற்கும் அதிகமான விலையில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த உச்சபட்ச விலை காரணமாகவே பணக்கார இளைஞர்களால் மட்டுமே புசிக்கும் கனியாக எஃப்77 எலெக்ட்ரிக் பைக் இருக்கின்றது. ஆனால், இதன் கவர்ச்சியான தோற்றம் பார்வையாளர்களைக் கவர சற்றும் தவறவில்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, April 6, 2024, 11:45 [IST]
English summary
Ultraviolette to launch new electric motorcycle on 24 april here is nore details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+