அமெரிக்கா, இத்தாலினு எல்லா நாட்டையும் வாயை பிளக்க வச்சுட்டாங்க.. இந்திய நிறுவனம் தயாரிச்ச பைக்கா இது!
இந்தியாவைச் சேர்ந்த பிரபல மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று உலக நாடுகளின் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கின்ற அளவிற்கு ஓர் அசத்தலான எலெக்ட்ரிக் பைக்கை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் (Ultraviolette Automotive) நிறுவனமே அந்த உலக தரம் வாய்ந்த மின்சார இரண்டு சக்கர வாகனத்தை உருவாக்கியிருக்கும் பிராண்டு ஆகும். எஃப்99 (F99), எனும் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் (Electric SuperBike)-கையே அது தயார் செய்திருக்கின்றது. இதையே நேற்றைய தினம் அந்த நிறுவனம் வெளியீடு செய்தது.
நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்பாக அல்ட்ராவைலட் எஃப்77 மேக் 2 (Ultraviolette F77 Mach 2) இருக்கின்றது. இது எஃப்77 மாடலின் அப்கிரேட் வெர்ஷன் ஆகும். இதன் அறிமுகமே சமீபத்தில்தான் அரங்கேறியது. இந்த நிலையிலேயே மின்சார இரண்டு சக்கர வாகன உலகை அதிரவைக்கும் தயாரிப்பாக எஃப்99 மாடலை அது வெளியீடு செய்திருக்கின்றது.

வெகு விரைவிலேயே இதையும் அல்ட்ராவைலட் விற்பனைக்குக் கொண்டு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக்கை உலக தரம் வாய்ந்ததாக தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது என்பதற்கு பதிலாக, மிகவும் அதிக அட்வான்ஸ்டு அம்சங்கள் மற்றும் அதீத ஆற்றலை உருவாக்கும் வகையில் அதை அது தயார் செய்திருக்கின்றது என்றே கூறலாம்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இதனை குவார்டர் மைல் (Fastest Quarter Mile) சாதனையில் புதிய சாதனைப் படைக்கும் வகையில் நிறுவனம் தயார் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சோதனை வெகு விரைவிலேயே மேற்கொள்ளப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது நிரூபிக்கப்பட்டால், இந்தியாவின் மிக மிக அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட மோட்டார்சைக்கிளாக இது இருக்கும்.
அந்த அளவிற்கே அதிக திறனை வெளியேற்றக் கூடியதாக அல்ட்ராவைலட் எஃப்99 வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, நவீன யுகத்திற்கே லுக்கைக் கொண்டதாகவும் எஃப்99 எலெக்ட்ரிக் பைக்கை அல்ட்ராவைலட் தயார் செய்திருக்கின்றது. மிகவும் ஷார்ப்பான லுக்கை அது கொண்டிருக்கின்றது. முன் பக்கம் மற்றும் பின் பக்கம் இரண்டும் கூரிய முனைகளைக் கொண்டதாக இருக்கின்றன.
காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லவே இத்தகைய உருவ தோற்றம் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், ஆக்டீவ் ஏரோ மற்றும் கூலிங் டக்டுகளும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை மோட்டாரை கூலாக்கும் விதமாக காற்றை உட்கடத்த பெரும் உதவியாக இருக்கும். இப்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் அல்ட்ராவைலட் எஃப்99 எலெக்ட்ரிக் பைக், ஏலியன்களின் இரண்டு சக்கர வாகனத்தைப் போல காட்சியளிக்கின்றது.
அதனை அலங்கரிக்கும் விதமாக சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவையே முதன்மையான நிறங்கள் ஆகும். இதுதவிர, சிமெண்ட் நிறம் மற்றும் கருப்பு நிறங்களும் இந்த பைக்கை அலங்கரிக்கும் விதமாக பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பைக்கில் அல்ட்ராவைலட் நிறுவனம் 90kW திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரையே பயன்படுத்த இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 265 கிமீ ஆகும். இதுமட்டுமில்லைங்க வெறும் 3 செகண்டுகளில் இந்த இ-பைக் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இத்தகைய ஆற்றல்மிக்க மின்சார பைக்காகவே எஃப்99 தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த பைக்கின் அதிகபட்ச எடையே 178 கிலோ மட்டும்தான் என கூறப்படுகின்றது.
ஆகையால், ஹேண்ட்லிங் செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது என தெரிகின்றது. இத்துடன் இதன் இயக்கத்தை சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு ஓஹ்லின்ஸ் சஸ்பென்ஷன், பிரெம்போ பிரேக்குகள் ட்வின் டிஸ்க் செட்-அப் உடன் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, பைக்கின் கவர்ச்சியான லுக்கிற்கு மதிப்பு கூட்டும் விதமாக இலகு ரக அலாய் வீல்கள் மற்றும் மெல்லிய வகை டயர்களே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
மேலும், இந்த பைக் பற்றிய மற்றுமொரு சுவாரஷ்யமான தகவல் என்னவென்றால் இந்தியர்களுக்காகவும், உலக நாடுகளுக்காகவும், இந்தியாவில் வைத்து தயார் செய்யப்பட்ட ஓர் பைக் மாடலே எஃப்99 ஆகும். நிறுவனத்திற்கு சொந்தமான பெங்களூரு ஆர்-அண்ட்-டி மையத்தில் வைத்தையே இது தயார் செய்யப்பட்டு வருகின்றது. இந்த பைக் பற்றிய இன்னும் பல்வேறு முக்கிய விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் நாட்களில் இதுபற்றிய கூடுதல் விபரங்களை அல்ட்ராவைலட் வெளியிடும் என நம்பப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அல்ட்ராவைலட் எஃப்99 எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவின் அதிக வேகத்தில் இயங்கும் எலெக்ட்ரிக் டூ-வீலராகவே அதுவே இருக்கும். ஆகையால், இதற்கு ஸ்போர்ட்ஸ் பைக்கை விரும்புவோர் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. ஆனால், இது எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








