ஹீரோ பைக்கிற்கு போட்டியாக இந்தியா வரும் புதிய கவாஸாகி பைக்!! ஹீரோ மோட்டோகார்ப் தரமான பதிலடிக்கு வெயிட்டிங்!

இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையில் புதிய மாற்றம் நடந்துக் கொண்டிருக்கிறது. மக்கள் நிறைய பேர் அட்வென்ச்சர் ரக பைக்குகளை வாங்க ஆரம்பித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம், குறைந்த விலையில் கொண்டுவரப்பட்ட ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் ஆகும். ஹீரோவை பின்பற்றி கவாஸாகி அதன் புதிய பைக்கை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் சில அட்வென்ச்சர் பைக்குகளும் அடுத்ததாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 (Hero Xpulse 210): ஹீரோ மோட்டோகார்பில் இருந்து தற்போதைக்கு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் பைக்குகளுள் ஒன்று எக்ஸ்பல்ஸ் 200 ஆகும். ஹீரோவின் அட்வென்ச்சர் ரக பைக்கான இது இந்தியாவின் விலை குறைவான அட்வென்ச்சர் பைக்காக விளங்குகிறது. இதன் காரணமாகவும், எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் கவர்ச்சிக்கரமான தோற்றத்தினாலும் நிறைய பேர் இந்த பைக்கை வாங்குகின்றனர்.

upcoming adventure bikes for india

இந்த நிலையில், எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் புதிய ஜென்ரேஷன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எக்ஸ்பல்ஸ் 210 என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்படும் இந்த புதிய அட்வென்ச்சர் பைக் பெயருக்கேற்ப புதிய 210சிசி லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜினை பெற்றுவர உள்ளது. இவ்வாறான 210சிசி என்ஜினை கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கில் ஏற்கனவே ஹீரோ மோட்டோகார்ப் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

கவாஸாகி கே.எல்.எக்ஸ்230எஸ் (Kawasaki KLX230 S): மேலே குறிப்பிடப்பட்ட ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு போட்டியாக இந்தியாவில் கவாஸாகி களமிறக்கும் புதிய அட்வென்ச்சர் பைக். இன்னும் பைக் அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும், சமீபத்தில் கே.எல்.எக்ஸ்230 எஸ் பைக்கிற்கான முன்பதிவுகள் ரூ.5,000 என்கிற டோக்கன் தொகை உடன் துவங்கப்பட்டன.

upcoming adventure bikes for india

வெளிநாட்டில் இருந்து பாகங்களாக கொண்டுவரப்பட்டு, இந்தியாவில் வைத்து அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதால், கவாஸாகி கே.எல்.எக்ஸ்230 எஸ் பைக்கின் விலையை சற்று அதிகமாக எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு தெரிந்தவரையில், ரூ.3 லட்சம் வரையில் இதன் விலை நிர்ணயிக்கப்படலாம். எக்ஸ்பல்ஸ் பைக்கை விட பவர்ஃபுல்லான 233சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் உடன் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ராலி (Royal Enfield Himalayan Rally): விற்பனையில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கை மேலும் ரக்டான தோற்றத்தில், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மேலும் ஏற்றதாக ராயல் என்ஃபீல்டு கொண்டுவர உள்ளது. அதற்கு ஹிமாலயன் ராலி என பெயர் சூட்டப்பட உள்ளது.

upcoming adventure bikes for india

புதிய ஹிமாலயன் ராலி பைக் ஏற்கனவே சாலைகளில் சிலமுறை சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டது. அப்போது, பைக்கில் ராலி-ஸ்பெக் டெயில் கவுல், கிராஸ்-ஸ்போக் ட்யூப்லெஸ் சக்கரங்கள், உயரத்தில் பொருத்தப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய், க்னகிள் கார்ட்ஸ் உள்ளிட்டவற்றை பார்க்க முடிந்தது. மற்றப்படி, ஹிமாலயன் 450 பைக்கில் தற்சமயம் பொருத்தப்படும் அதே 452சிசி என்ஜின் தான் இந்த பைக்கிலும் வழங்கப்பட உள்ளது.

upcoming adventure bikes for india

புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஆர் (KTM 390 Adventure R): தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த கேடிஎம் பைக்குகளுள் ஒன்றான 390 அட்வென்ச்சர் ஆர் விரைவில் இந்தியாவில் அப்கிரேட் செய்யப்பட உள்ளது. இதன்படி, முற்றிலும் புதிய டிரெல்லிஸ் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள புதிய 390 அட்வென்ச்சர் ஆர் பைக்கில் புதிய தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் எலக்ட்ரானிக் பார்ட்ஸை கேடிஎம் வழங்கலாம் என எதிர்பார்க்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான அட்வென்ச்சர் பைக்குகள் தான் இன்றைய கால டிரெண்ட்களாக உள்ளன. குறிப்பாக, ஹீரோ மோட்டோகார்பின் எக்ஸ்பல்ஸ் 210 பைக் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கவாஸாகி கே.எல்.எக்ஸ்230 பைக்கின் விலை ரூ.3 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்பட்டால், மார்க்கெட்டில் தாக்குப்பிடிப்பது கடினம். அதை தவிர்க்க வேண்டுமெனில், இந்தியாவிலேயே கே.எல்.எக்ஸ்230 பைக்குகளை உற்பத்தி செய்ய கவாஸாகி துவங்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 25, 2024, 18:58 [IST]
English summary
Upcoming adventure bikes that on cards for india hero xpulse 210 to ktm 390 adventure r
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X