2-வீலர் வாங்க போறீங்களா? பிளானை கொஞ்சம் தள்ளி போடுங்க!! ஏப்ரலில் மார்க்கெட் களைக்கட்ட போகுது!

வழக்கம்போல், வருகிற 2024 ஏப்ரல் மாதத்திலும் இந்தியாவில் சில புதிய இரு சக்கர வாகனங்கள் மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவை என்னென்ன என்பதையும், அவற்றை பற்றிய முக்கிய விபரங்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta): எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் பல வருடங்களுக்கு முன்பே ஈடுப்பட ஆரம்பித்து விட்டாலும், ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து தற்போதைக்கு '450' என்கிற ஒரேயொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில், வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தனது 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய ஏத்தர் எனர்ஜி தயாராகி வருகிறது.

upcoming two-wheeler launches in april

ஏத்தர் 450 செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் நிலையில், புதிய ஏத்தர் ரிஸ்டா பட்ஜெட் விலையிலான ஃபேமலி ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிஸ்டா ஸ்கூட்டரின் விலைகள், தொழிற்நுட்ப அம்சங்கள் உள்ளிட்டவை அனைத்தும் ஏப்ரல் 6ஆம் தேதியே வெளியிடப்படும். ஆனால், ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டன.

புதிய ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டியின் கீழ் இயங்குகின்ற ஆம்பியர் நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படாத இந்த புது இ-ஸ்கூட்டரை காஷ்மீரில் இருந்து கன்னியாக்குமரி வரையில் ஓட்டி ஆம்பியர் நிறுவனம் புதிய சாதனையை படைத்துள்ளது.

upcoming two-wheeler launches in april

இந்த புதிய ஆம்பியர் ஸ்கூட்டரின் செயல்படுதிறனை வெளிக்காட்டும் வகையில் இந்த நீண்ட தூர பயணம் மேற்கொள்ளப்பட்டது. 2023 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் ஆம்பியர் நிறுவனம் சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட என்.எக்ஸ்.ஜி கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கும். ஏப்ரலில் அறிமுகமாகிவிடும் என கூறப்பட்டாலும், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக தேதியை இன்னும் ஆம்பியர் நிறுவனம் வெளியிடவில்லை.

புதிய அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் பைக்: எலக்ட்ரிக் சூப்பர் பைக் உற்பத்தி நிறுவனமாக தன்னை மார்க்கெட்டில் நிலைநிறுத்திக் கொண்டுள்ள அல்ட்ராவொய்லெட் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி புதியதொரு எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால், எந்த மாதிரியான எலக்ட்ரிக் பைக்காக அது இருக்கும்? அதன் விலையை எவ்வளவாக எதிர்பார்க்கலாம்? என்ற கேள்விகளுக்கு அல்ட்ராவொய்லெட் நிறுவனம் இன்னும் மவுனம் காக்கிறது.

upcoming two-wheeler launches in april

எல்லாராலும் வாங்கக்கூடிய வகையில் குறைவான விலையில் எலக்ட்ரிக் பைக்கை அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தில் இருந்து எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், தன்னை ஒரு சூப்பர் பைக் பிராண்டாக காட்டிக்கொள்ளவே அல்ட்ராவொய்லெட் விரும்புகிறது. எங்களுக்கு தெரிந்தவரையில், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எஃப்77 எலக்ட்ரிக் பைக்கின் புதிய வேரியண்ட்டாக இது இருக்கலாம் அல்லது எஃப்77 பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிசனாக இருக்கலாம்.

பி.எம்.டபிள்யூ ஆர்1300 ஜிஎஸ் (BMW R1300 GS): பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் புதிய விலையுயர்ந்த அட்வென்ச்சர் பைக்காக ஆர்1300 ஜிஎஸ் கடந்த ஆண்டில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்தியாவில் வருகிற ஏப்ரல் மாதத்தில் இந்த புத்தம் புதிய பிஎம்டபிள்யூ பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

upcoming two-wheeler launches in april

பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக்கை உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதன் அப்கிரேட் வெர்சனாகவே ஆர்1300 ஜிஎஸ் கொண்டுவரப்படுகிறது. அதாவது, 1250சிசி என்ஜினுக்கு பதிலாக அதனை காட்டிலும் பெரியதாக 1,300சிசி பாக்ஸர் என்ஜின் புதிய ஆர்1300 ஜிஎஸ் பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. என்ஜினின் அளவு பெரியதாக இருந்தாலும், பைக்கின் எடை கிட்டத்தட்ட 12 கிலோ வரையில் குறைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த லிஸ்ட்டின்படி பார்க்கும்போது, வருகிற ஏப்ரல் மாதத்தில் மிக முக்கியமான 2-வீலர் அறிமுகம் எதுவும் இல்லை. அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படும் 4 இருசக்கர வாகனங்களில் 3 எலக்ட்ரிக் வாகனங்களாக உள்ளன. இந்த லிஸ்ட்டில் இருப்பவை மட்டுமே அறிமுகமாகும் என உறுதியாக கூற முடியாது. ஏனெனில், எந்தவொரு அறிவிப்பும் இல்லாமலும் ஏதேனும் ஒரு புதிய பைக்/ ஸ்கூட்டர் வருகிற ஏப்ரலில் அறிமுகம் செய்யப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 30, 2024, 21:41 [IST]
English summary
Upcoming two wheeler launches in april 2024 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X