அங்க இங்க கடன் கொடுத்து வச்சிருக்குற பணத்தை எல்லாம் வசூல் பண்ணுங்க! இந்த மாசம் இத்தனை பைக் வரப்போகுதாம்!

புதிய நிதியாண்டு துவங்கிவிட்ட நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் புதிய வாகனங்களை களம் இறக்க திட்டமிட்டு வருகின்றன. அதன்படி இந்த ஏப்ரல் மாதம் ஏகப்பட்ட டூவீலர்கள் அறிமுகமாக உள்ளன. இப்படியாக இந்த மாதம் அறிமுகமாக உள்ள டூவீலர்களின் விபரங்கள் மற்றும் அம்சங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஏத்தர் ரிஸ்டா: ஏத்தர் நிறுவனம் ரிஸ்டா என்ற புதிய மாடல் ஸ்கூட்டரை இந்த மாதம் 6ம் தேதி அதாவது நாளை அறிமுகப்படுத்துகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே 450 என்ற மாடலில் ஏகப்பட்ட வெர்ஷன் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது புதிய மாடலாக ரிஸ்டா என்ற மாடலை அறிமுகப்படுத்துகிறது. இந்த மாடல் குடும்பத்திற்கு ஏற்ற வாகனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

upcoming two wheelers april 2024

ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டரில் ஏகப்பட்ட வெர்ஷன்கள் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி விட்டது. இதற்கான டீசர்களும் அந்நிறுவனத்தால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்கூட்டரின் வருகைக்காக ஏத்தர் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என கொண்டாடும், இந்த நாளில் தான் இந்த ஸ்கூட்டரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.

பஜாஜ் பல்சர் என்எஸ் 400: பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் என்எஸ் 400 பைக்கை இந்த ஏப்ரல் மாதமே வெளியிடும் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். இந்த பைக் ஏற்கனவே கடந்த மார்ச் மாதமே அறிமுகமாக வேண்டியது, ஆனால் இந்த புதிய நிதியாண்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஏப்ரல் மாதத்தில் இந்த பைக்கை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

upcoming two wheelers april 2024

பல்சர் பைக்கில் 400 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டு ரூபாய் 1.7 லட்சம் என்ற விலையில் இந்த பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் பஜாஜ் டோமினார் பைக்கை விட குறைவான விலையில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதுபோக பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் என் 250 பைக்கை அப்டேட் செய்து இந்த ஆண்டு வெளியிடும் எனவும் எதிர்பார்க்கலாம்.

ஹீரோ ஜூம் 120 ஆர் /160: ஹீரோ நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு இறுதியில் எக்மா 2023 கண்காட்சியில் தனது ஜூம் 125ஆர் மற்றும் ஜூன் 160 ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. இதில் ஜூம் 125 ஆர் என்பது ஏற்கனவே விற்பனையாகி வரும் ஜூம் 110 ஸ்கூட்டரின் ஸ்போர்ட்டியர் வெர்ஷனாக இருக்கிறது. ஜூம் 160 என்பது இந்த ஸ்கூட்டரின் மேக்சி ரேஞ்ச் ஸ்கூட்டராக அட்வென்ச்சர் ஆப்ஷன் உடன் இருக்கிறது.

upcoming two wheelers april 2024

இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் இந்த ஏப்ரல் மாதமே விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஜூம் 125 ஆர் ஸ்கூட்டர் ரூபாய் 1 லட்சம் என்ற விலையிலும் ஜூன் 160 ஸ்கூட்டர் ரூ 1.45 லட்சம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். இந்த இரண்டு ஸ்கூட்டருக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு இருக்கிறது.

ஹஸ்குவெர்னா: ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனமான ஹஸ்குவெர்னா நிறுவனம் இந்தியாவில் காலடித்தடத்தை பதித்து வைத்து தனது வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் 250 ரேஞ்சி இரண்டு வாகனங்களை அறிமுகப்படுத்தியது. இதில் இந்த வாகனங்களை அப்டேட் செய்யும் என நாம் எதிர்பார்த்த நிலையில் இந்நிறுவனம் ஸ்வார்ட்பில்லியன் பைக்கை 401 பைக்காக அப்டேட் செய்து அறிமுகப்படுத்தியது. ஆனால் விட்பில்லியன் பைக்கை 250 பைக்காகவே இருந்தது.

இந்நிலையில் ஸ்வார்ட்பில்லியன் 250 மற்றும் விட்பில்லியன் 40 ஆகிய பைக்குகள் இந்தியாவில் அறிமுகமாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தற்போது ஸ்வார்ட்பில்லியன் 250 பைக் இந்த மாதம் விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த பைக் விற்பனைக்கு அறிமுகமானால் ரூபாய் 2.2 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ: பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது பிளாக்ஷிப் மாடலான பிஎம்டபிள்யூ ஆர் 1300 ஜிஎஸ் அட்வென்சர் பைக்கை அப்டேட் செய்துள்ளது. அதன்படி பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் பைக் புதிய டிசைன், புதிய இன்ஜின் அம்சங்களுடன் விற்பனைக்கு வர உள்ளது. இந்த பைக் மீதான எதிர்பார்ப்பு பிஎம்டபிள்யூ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருக்கிறது.

இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 1300 சிசி லிக்யூட் கூல்டு பாக்ஸர் டைப் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 145 பிஎஸ் பவரையும், 149 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் விற்பனைக்கு வந்தால் ரூபாய் 24 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏப்ரல் மாதம் ஏகப்பட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் டூவீலர்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்துள்ளனர். நிச்சயம் இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த லிஸ்டில் உள்ள பைக்குகளில் நீங்கள் எதிர்பார்க்கும் பைக் எது என கமெண்ட் செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, April 5, 2024, 11:25 [IST]
English summary
Upcoming two wheelers april 2024 launches bajaj to hero
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X