ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த மாசமே வருதா! 2024 செம மாஸா இருக்கும் போலயே!
2024-ம் புத்தாண்டு புத்துணர்ச்சியுடன் துவங்கி உள்ள நிலையில் ஆட்டோமொபைல் துறை இந்த ஆண்டு அதிக அளவிலான விற்பனையை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் மாதமே அதற்கு வித்திடும் வகையில் 5 புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் அறிமுகமாக உள்ளன. ஹீரோ, ஹோண்டா மற்றும் ராயல் என்ஃபீல்டு நிறுவனங்களிலிருந்து சில முக்கியமான பைக்குகள் வெளியாக உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹீரோ 440cc பைக்: ஹீரோ நிறுவனம் 440 சிசியில் புதிய பைக் ஒன்றை வரும் ஜனவரி 22ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கை அடிப்படையாகக் கொண்ட பைக் ஆகும். ஹார்லி டேவிட்சன் பைக்குகளையெல்லாம் ஹீரோ நிறுவனம் தான் தயாரித்து வரும் நிலையில் அந்நிறுவனத்தின் பைக்கை அடிப்படையாகக் கொண்டு ஹீரோ நிறுவனம் தயாரித்துள்ள பைக் தான் இது.

இது ஒரே சமயத்தில் ஏர் மற்றும் ஆயில் கூல் ஆகியவற்றில் இயங்கும் இன்ஜினை கொண்டதாக இருக்கிறது. இது எக்ஸ் 440 விட சற்று குறைவான விலை கொண்ட பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அக்ரஸிவான நேச்சர் இதை ஓட்டுபவர்களை வசிகரிக்க வைக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோ நிறுவனம் இந்த பைக்கை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தலாம்.
ஏத்தர் அபெக்ஸ் 450: வரும் ஜனவரி 6ஆம் தேதி நிறுவனம் தனது 450 அபெக்ஸ் என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே நிறுவனத்தில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட அதிக பெர்ஃபாமென்ஸ் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் விராப்+ என்ற ரைடு மோடு இருக்கிறது. இதை பயன்படுத்தினால் அதிக வேகத்தில் இந்த ஸ்கூட்டரில் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் இந்த ஸ்கூட்டர் ஒரு திருப்தியான தயாரிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த விரிவான அனைத்து தகவல்களும் நமக்கு கிடைக்கப்பெறும்.
ஹஸ்க்குவெர்னா ஸ்வார்ட்பைல்யன் 401: ஹஸ்க்குவெர்னா ஸ்வார்ட்பைல்யன் 401 புதிய தலைமுறை பைக் இந்தியாவில் இந்த மாதம் வெளியாக உள்ளது. சர்வதேச அரங்கிலும் இந்த பைக் இந்த மாதம் தான் வெளியாகிறது. சர்வதேச அரங்கில் வெளியான உடனேயே இந்த பைக் இந்தியாவிலும் வெளியாகிறது. இந்த பைக்கை இந்தியாவில் பல்வேறு இடங்களில் டெஸ்ட் செய்வதை நம்மால் காண முடிகிறது.

இந்த பைக் கேடிஎம் 390 டியூக் பைக்கில் உள்ள பல அம்சங்கள் கொண்ட பைக்காக தயாரிக்கப்படுகிறது. முக்கியமாக இன்ஜின் முதல் கொண்டு அதே பைக்கில் உள்ள இன்ஜின் போலவே வடிவமைக்கப்படுகிறது. இது 399 சிசி லிக்யூட் கூல்டு இன்ஜினாக வடிவமைக்கப்படுகிறது. ஆஸ்திரியா நாட்டில் உள்ள கேடிஎம் நிறுவனம்தான் இந்த ஹஸ்க்குவெர்னா நிறுவனம் என்பதால் இரு நிறுவனங்களும் ஒரே பைக்கை பகிர்ந்து கொள்கின்றனர்.
ராயல் என்ஃபீல்டு ஷார்ட் கன் 650: ராயல் என்பீல்ட் 650 பைக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த பைக் சிறிய வீல்களைக் கொண்ட வித்தியாசமான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிளாக் ஷீப் பைக்கான சூப்பர் மீட்டர் 650 க்ரூஸர் பைக்கை பிரேமில் சில சப் பிரேம்கள் கொடுக்கப்பட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் விலையை பொறுத்த வரை ரூபாய் 3.3 முதல் 3.4 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரபலமான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 648 சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது சிக்ஸ் ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கிற்க்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் சிறப்பாக இருக்கிறது.
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக்: வரும் 9ம் தேதி ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா ஸ்கூட்டரை அடிப்படையாகக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தப் போகிறது. ஹோண்டா நிறுவனம் ஜீரோ எமிஷன் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருப்பதால் அதன் ஒரு படியாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

ஹோண்டா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவிலேயே தயாரித்து விற்பனைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதுவரை இந்த ஸ்கூட்டர் குறித்த தொழில்நுட்ப தகவல் எதுவும் வெளியாகவில்லை. நமக்கு கிடைத்த தகவலின் படி இது பிக்ஸட் பேக்டரி கொண்ட ஓரளவு ரேஞ்ச் தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான விபரங்கள் 9ம் தேதி தான் தெரிய வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024 ஆம் ஆண்டு முதல் மாதமே 5 டூவீலர்கள் அறிமுகமாகின்றன. இது நிச்சயமாக ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு பாசிட்டிவான விஷயம் தான். இந்த ஆண்டு ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய வளர்ச்சியை பெற உள்ளதற்கு இது ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள டூவீலர்களில் உங்களுக்கு பிடித்த டூவீலர் எது என கமெண்ட் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications









