பஜாஜால மட்டும்தான் இது முடியும்.. 1.50 லட்ச ரூபாக்கு அட்டகாசமான பைக் மாடலை பல்சரில் அறிமுகம் செஞ்சிருக்காங்க!
பஜாஜ் (Bajaj) நிறுவனத்தின் புகழ்பெற்ற பைக் மாடலாக பல்சர் (Pulsar) இருக்கின்றது. இந்த பல்சர் வரிசையில் சமீபத்திலேயே அதிக சிசி (CC) திறன் கொண்ட புதிய பல்சர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பல்சர் என்எஸ்400இசட் (Pulsar NS400Z) மாடலே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த பைக் மாடல் விற்பனைக்கு வந்து சில நாட்களே ஆகின்றன. இந்த நிலையில், தற்போது இதே பல்சர் வரிசையில் புதிய மாடல் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. பல்சர் எஃப்250 (Pulsar F250) மாடலே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் ஆகும்.

இதற்கு முன்னதாக பஜாஜ் நிறுவனம் பல்சர் என்250 (Pulsar N250) மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதில் யுஎஸ்டி ஃபோர்க் உட்பட நிறைய அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டன. இந்த மாடலில் புதுப்பித்தலின்கீழ் வழங்கப்பட்ட அனைத்து அம்சங்களும் தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் புதிய எஃப்250 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஆனால், யுஎஸ்டி ஃபோர்க்கிற்கு பதிலாக வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க்கே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், புதிய எல்சிடி திரை வழங்கப்பட்டு இருக்கின்றது. மூன்று விதமான ஏபிஎஸ் மோட்களையும் இந்த பைக் தாங்கி இருக்கின்றது. ரோட் (Road), ரெயின் (Rain) மற்றும் ஆஃப்-ரோடு (Off Road) ஆகியவையே அவை ஆகும்.

இத்துடன், ப்ளூடூத் இணைப்பு, திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி ஆகியவையும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், பஜாஜ் என்250 மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் அதே சுவிட்ச் கியரே எஃப்250 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதைத்தவிர, வேறு எந்த மாற்றத்தையும் எஃப்250 மாடலில் பஜாஜ் செய்யவில்லை. எனவே, லுக் மற்றும் பிற விஷயங்களில் அப்படியே எஃப்250 மாடல் இருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை 249 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 24.1 எச்பி பவரையும், 21.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்த பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 1.51 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த பைக்கின் வருகை சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250, யமஹா ஆர்15 வி4 மற்றும் கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக அமைந்திருக்கின்றது.
ஏற்கனவே இந்த பைக் மாடல் மிகப் பெரிய போட்டியை வழங்கி வந்த நிலையிலேயே புதிய திரை சேர்த்தல் உள்ளிட்ட அப்டேட்டுகளை வழங்கி மேலும் பலமடங்கு போட்டியை அதிகரித்து இருக்கின்றது பஜாஜ் நிறுவனம். இந்த பைக்கில் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக டிஸ்க் பிரேக் மற்றும் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் நோக்கில் டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் அகலமான 140 செக்சன் வகை டயர்களே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த பைக் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பல்சர் பைக் மாடல்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே பல்சர் வரிசையில் புதிய மாடல்களை சேர்த்தல் மற்றும் ஏற்கனவே விற்பனையில் உள்ள பைக் மாடல்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை பஜாஜ் நிறுவனம் செய்துக் கொண்டிருக்கின்றது. இதன் வாயிலாக வரும் நாட்களில் இரட்டிப்பான விற்பனை விகிதத்தை அந்நிறுவனம் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









