புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!

புதிதாக பைக் ஓட்ட பழகுபவர்கள் பலர் செகண்ட் ஹேண்டில் பைக்குளை வாங்கி பைக் ஓட்ட பழகுவார்கள். அப்படியாக இந்தியாவில் புதிதாக பைக் ஓட்ட பழகும் இளைஞர்கள் செகண்ட் ஹேண்டில் எந்த மாடல் பைக்குகளை வாங்கி பழகலாம். எந்தெந்த பைக்குகளில் எப்படியான அனுபவம் கிடைக்கும் என்ற விபரங்களை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

புதிதாக பைக் வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் பலர் பைக் வாங்க வேண்டும் என்ற கனவில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பைக் வாங்குவதற்கு முன்னர் பைக் ஓட்டி பழக வேண்டியது கட்டாயமாகிறது. பைக் ஓட்டி பழகுவதற்காக புதிதாக ஒரு பைக் வாங்கினால் அதன் விலையும் அதிகமாக இருக்கும். அதே நேரம் அந்த பைக் விரைவில் சேதமாக வாய்ப்புகளும் உள்ளன.

Used Bikes for Learners

இதனால் புதிதாக பைக் ஓட்டி பழகுபவர்கள் பலர் செகண்ட் ஹாண்டில் தான் பைக் வாங்கி பயன்படுத்துவார்கள். இப்படியாக நீங்களும் புதிதாக பைக் ஓட்ட பழகுகிறீர்கள் என்றால் இந்த பட்டியலில் உள்ள சில பைக்குகளை தேர்வு செய்து வாங்கினால் உங்களுக்கு நல்ல ரைடிங் அனுபவம் கிடைக்கும். இந்த பட்டியலை விரிவாக காண்போம்.

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்: இந்த பைக் இந்தியாவில் பிரபலமான பைக்குகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த பைக்கை இயக்குவது சுலபமான விஷயம். அதேநேரம் இந்த பைக்கின் மைலேஜ் அதிகமாக இருக்கும். புதிதாக பைக் வாங்கி பயன்படுத்த நினைக்கும் பலர் கியர் பைக்கை ஓட்ட இந்த பைக்கை செகண்ட் ஹேண்டில் வாங்கி பயன்படுத்தலாம். செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் ரூபாய் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் விலையில் இந்த பைக் விற்பனையாகி வருகிறது.

Used Bikes for Learners

பஜாஜ் பல்சர் 200 எஃப்: நீங்கள் ஓரளவு பைக் ஓட்டுவீர்கள் ஆனால் நல்ல பவர்ஃபுல்லான பைக்கை ஓட்ட வேண்டும், அதே நேரம் சாலையில் சிறப்பான ரைடிங் அனுபவத்தை பெற வேண்டும், என்றால் நீங்கள் பஜாஜ் பல்சர் 220 எஃப் என்ற பைக்கை வாங்கி பயன்படுத்தலாம்.

இந்த பைக்கின் பெர்ஃபார்மென்ஸ் சிறப்பாக இருக்கும். முக்கியமாக இதில் பொருத்தப்பட்டுள்ள 220 சிசி டிடிஎஸ்ஐ இன்ஜின் உங்களுக்கு ஒரு பவர்ஃபுல்லான ஃபீலிங்கை தரும். இந்த பைக் ரூபாய் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350: இன்று பல இளைஞர்களின் கனவு இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்க வேண்டும் என்பதுதான் . ராயல் என்ஃபீல்டு பைக்கின் புதிய பைக் அதிக விலை இருப்பதால் இதை வாங்க தடுமாறி வருகிறார்கள். ஆனால் இந்த பைக்கை செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் ரூ90ஆயிரம் முதல் ரூ1.5லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக் நன்றாக பைக் ஓட்ட தெரிந்த பிறகு வாங்கக்கூடிய பைக்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160: ஸ்போர்ட்டியான லுக் கொண்ட பைக்குகளை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த பைக் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக் தெருக்களில் ஓட்டுவதற்கும் சரி, நகர்ப்புற சாலைகளில் ஓட்டுவதற்கும் சரி, ஏன் தேசிய நெடுஞ்சாலைகள் ஓட்டுவதற்கும் நல்ல ரைட்டிங் அனுபவத்தை தரக்கூடிய பைக் தான்.

ஹோண்டா சிபி யூனிகான் 150: புதிதாக பைக் வாங்க நினைக்கும் பலர் இந்த ஹோண்டா சிபி யூனிகான் பைக் வாங்க அதிகம் விரும்புகிறார்கள். இதில் செகன்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த பைக்கை வாங்கினால் அதிக மைலேஜ் கிடைக்கும். அதே நேரம் குறைவான பராமரிப்பு செலவு இருக்கும். நீண்ட தூரம் பயணம் செய்யும் தேவையை கொண்டவர்கள் இந்த பைக்கை தேர்வு செய்யலாம்.

இந்தியா பைக் மார்க்கெட்டில் மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. கோடிக்கணக்கான பைக்குகள் சாலையில் வலம் வந்து கொண்டே இருக்கின்றன. நீங்கள் புதிதாக பைக் ஓட்டும்போது முக்கியமாக சாலை விதிகளை கவனித்து பைக் ஓட்ட வேண்டும். பைக் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய மறந்து விடாதீர்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிதாக பைக் ஓட்டி பழகும் இளைஞர்கள் புதிய பைக்கை வாங்காமல் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் பைக் வாங்குவது தான் சிறந்தது. இதில் மேலே குறிப்பிட்டுள்ள பட்டியலில் உங்களுக்கு தகுந்த பைக் எது என்பதை பார்த்து உங்கள் அருகில் உள்ள செகண்ட் ஹேண்ட் பைக் டீலரிடம் பைக்கை ஓட்டி பார்த்து பைக் வாங்குவது நல்லது.

More from DriveSpark

Article Published On: Monday, April 22, 2024, 7:00 [IST]
English summary
Used bikes for learners start motorcycle journey with these 5 bikes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+