நேத்துதான் இ-லூனா அறிமுகமாச்சு அதுக்குள்ள போட்டியா!.. ரூ.70,000 விலையில் புதுமுக பிராண்டின் இ-ஸ்கூட்டர்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கைனெட்டிக் கிரீன் (Kinetic Green) நிறுவனத்தின் இ-லூனா (eLuna) இந்தியாவில் நேற்றைய தினம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ. 69,990 தொடங்கி 74,990 ரூபாய் வரையிலான விலையில் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைக்கும். இதனை லோடு வாகனமாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும், அதேவேளையில், ஃபேமிலிக்கான வாகனமாகவும் பயன்படுத்திக்க முடியும்.
இத்தகைய சூப்பரான வாகனமாகவே இ-லூனா இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே இதன் வருகை நேற்றைய தினமே அரங்கேறிய நிலையில், இன்று அதற்கு போட்டியாக இந்தியாவில் மற்றுமொரு எலெக்ட்ரிக் டூ-வீலர் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன வாகனம்? அதன் விலை எவ்வளவு? மற்றும் சிறப்பு வசதிகள் என்ன? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

வேக் ஆட்டோ (Vegh Auto) எனும் நிறுவனமே கைனெட்டிக் கிரீன் நிறுவனத்தின் இ-லூனாவிற்கு போட்டியாக புதுமுக எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. டிஆர்!இவி (DR!EV) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. (இதனை டிரைவ் என்றும் உச்சரிக்கலாம்.) இது பன்முக பயன்பாட்டு வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும்.
அதேவேளையில், இரண்டு பேர் தனிப்பட்ட பயணங்களுக்காகவும் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், வேக் ஆட்டோ இதனை முற்றிலும் பிசினஸ் -டூ- பிசினஸ் பயன்பாட்டை கருத்தில் கொண்டே தயார் செய்திருக்கின்றது. அதாவது, வர்த்தக பயன்பாட்டிற்கான வாகனமாக மட்டுமே டிரைவ் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
ஆகையால், டெலிவரி மற்றும் லோடு ஏற்றிச் செல்வதற்கு ஏற்ற வாகனமாக மட்டுமே அது காட்சியளிக்கின்றது. இந்த வாகனம் தற்போது அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டு இருக்கின்றது. விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றது. வருகின்ற மார்ச் மாதத்தில் இருந்து டிரைவ் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைன் வாயிலாக வாங்கிக் கொள்ள முடியும். நிறுவனங்கள் மட்டுமே இதனை வாங்கிக் கொள்ள முடியும். இதற்கு அறிமுக விலையாக ரூ. 70 ஆயிரம் - ரூ. 80 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. வேக் டிரைவ் அறிமுகத்தால் நிறுவனத்தின் கால் தடம் தற்போது வர்த்தக வாகனங்கள் பிரிவிலும் பதிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த வாகனத்தை சமீபத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024இல் காட்சிப்படுத்திய நிலையில், இப்போது மீண்டும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த வாகனம் அதிகம் லாபத்தை வழங்கக் கூடியது என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. சுமார் 15 சதவீதம் தொடங்கி 20 சதவீதம் வரை அதிக லாபத்தை இந்த வாகனம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான எலெக்ட்ரிக் டூ-வீலர்களைப் போலவே இந்த வாகனத்தையும் வேக் வடிவமைத்திருக்கின்றது. ஆனால், டெலிவரி பயன்பாட்டில் இது அதிக பலனை வழங்கும் வகையில் சில சிறப்பு வசதிகளையும் தாங்கி இருக்கின்றது. உதாரணமாக பொருட்களை வைத்துக் கொள்வதற்கென தனி ரேக் மற்றும் முன் பக்கத்தில் கூடுதல் இட வசதி ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஈகோ, பவர் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்கள் டிரைவ்-இல் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ மட்டுமே ஆகும். ஆகையால், இதை இயக்க டிரைவிங் லைசென்ஸோ அல்லது பதிவு சான்றோ தேவைப்படாது.
அதேவேளையில், டிரைவால் இந்தியாவின் அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. மேலும், ஓர் முழு சார்ஜில் 120 கிமீ தொடங்கி 140 கிமீ வரையில் ரேஞ்ஜைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த அளவு அதிக ரேஞ்ஜை இது வழங்கும் என்பதால் அதிக தூர பயணத்தை மேற்கொண்டு அதிக லாபத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அதாவது, அதிக தூரம் என்றால் அதிக டெலிவரி என்றே அர்த்தம். இதை வைத்தே அதிக லாபம் இந்த வாகனம் வழங்கும் என கூறப்படுகின்றது. இந்த வாகனத்தில் 1.9 kW எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது மிக சிறந்த இயக்க திறனை வழங்கும்.
இதில் வழங்கப்பட்டு இருக்கும் லித்தியம் அயன் பேட்டரி பேக்கை 0-80 சதவீதம் சார்ஜ் செய்ய 3.5 மணி நேரம் முதல் 4 மணி நேரமே போதுமானது. இதே நேர இடைவெளியில் இ-லூனா ஃபுல் சார்ஜாகிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், இ-லூனாவை சரக்கு ஏற்றுச் செல்லும் வாகனமாக மட்டுமல்ல தனிப்பட்ட வாகனமாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதுதவிர தனிநபர்களாலும் இதை வாங்கிக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவின் வர்த்தக இரண்டு சக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக வேக் ஆட்டோ அதன் டிரைவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








