இந்த ஸ்கூட்டரை வாங்குற விலையில் 3 மாருதி கார்களை வாங்கிடலாம்! இந்தியாவில் அறிமுகமானது வெஸ்பா 946 டிராகன்!
ஹாங்காங்கின் சந்திரப் புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக வெஸ்பா 946 டிராகன் (Vespa 946 Dragon), சிறப்பு பதிப்பு உலக அளவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டரே தற்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான ஸ்கூட்டர் மாடலாக இது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு அறிமுகமாக ரூ. 14 லட்சத்து 27 ஆயிரத்து 999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இந்த விலையில், மூன்று மாருதி சுஸுகி ஆல்டோ கார்களை வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய அதிக விலையிலேயே வெஸ்பா 946 டிராகன் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது. இதன் இத்தகைய உயர்ந்த விலை அது ஓர் சிறப்பு பதிப்பு என்பது மட்டுமல்ல, இந்த ஸ்கூட்டரை சிபியூ வாயிலாகவே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இதனால்தான் ஏற்கனவே காஸ்ட்லியான தயாரிப்பாக இருந்த வெஸ்பா 946 டிராகன் பதிப்பு மேலும் மிகுந்த காஸ்ட்லியானதாக மாறி இருக்கின்றது. இந்த ஸ்கூட்டருக்கான முன் பதிவு பணிகள் நாட்டில் தொடங்கிவிட்டன. நிறுவனம், அதன் மோட்டோபிளக்ஸ் (Motoplex) ஷோரூம்கள் வாயிலாகவே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.
இது பிரீமியம் வகை வாகனங்களுக்கு என்றே நிறுவனத்தால் தொடங்கப்பட்ட தனித்துவமான ஷோரூம் ஆகும். இதை குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனைச் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. ஆனால், இந்தியாவிற்கு வெஸ்பா 946 டிராகன் பதிப்பின் எத்தனை யூனிட்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

அதேவேளையில் உலகளவில் விற்பனை செய்வதற்கே நிறுவனம் 1,888 யூனிட்களை மட்டுமே ஒதுக்கி இருக்கின்றது. இத்தனை யூனிட்டுகளை மட்டுமே தயாரித்தும் இருக்கின்றது. இந்த பிரத்யேக ஸ்கூட்டர் அளவு குறைவாக உள்ளது. வெஸ்பா 946 மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே வெஸ்பா 946 டிராகன் ஆகும்.
இதே மாடலை தழுவியே ஆகஸ்ட் 2023 இல் வெஸ்பா ஜஸ்டின் பீபர் எனும் பதிப்பை உலக சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் 150 சிசி ஸ்கூட்டர் ஆகும். தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வெஸ்பா 946 டிராகன் பதிப்பு ஸ்கூட்டரை வாங்குபவர்களுக்கு வெஸ்பாவின் பிரத்யேக ரைடிங் ஜாக்கெட் இலவசமாக வழங்கப்பட இருக்கின்றது.

ஸ்கூட்டரின் நிறம் மற்றும் அதில் இடம் பெற்றிருக்கும் டிராகனின் சின்னம் ஆகியவை இந்த ஜாக்கெட்டிலும் இடம் பெற்றிருக்கும். இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர் தனித்துவமான பெயிண்டால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், புராண கதைகளில் வரும் டிராகனும் ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றது. ஹெட்லைட்டிற்கு கீழே தலை இருக்கும்படியும், அதன் உடல் மற்றும் வால் பகுதி ஸ்கூட்டரின் பின் பக்கம் வரை நீளும் வகையில் தயார் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
மரகத பச்சை நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இதேபோல், எல்இடி ஹெட்லைட், உடல் நிறத்திலான கண்ணாடிகள், போதுமான கால் இடவசதி மற்றும் ஒற்றை துண்டு இருக்கை அமைப்பு ஆகியழற்றையே இந்த ஸ்கூட்டர் கொண்டிருக்கின்றது. இந்த ஸ்கூட்டரை 125 சிசி மற்றும் 155 சிசி என இரண்டு விதமான விருப்பங்களில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
ஆனால், இந்தியாவில் 155 சிசி வகை மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். 125 சிசி தேர்வு அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த ஸ்கூட்டரின் உருவாக்கத்தில் உலோகத்தாலான மோனோகோக்கே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இத்துடன், 12 அங்குல சக்கரங்கள் மற்றும் முன்பக்கத்தில் ஷாக் அப்சார்பரும் மற்றும் பின் வீலில் அட்ஜஸ்டபிள் ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன் மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்கும் பொருட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் 200 மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய பலதரப்பட்ட சிறப்பு வசதிகளைத் தாங்கிய ஸ்கூட்டராகவே வெஸ்பா 946 டிராகன் பதிப்பு இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரேவற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒற்றை ஸ்கூட்டர் ரூ. 14 லட்சத்திற்கும் அதிகமான விலயைில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருப்பது இரண்டு சக்கர வாகன காதலர்களை அதிர்ச்சியில் மூழ்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேவேளையில், இதற்கு டூ-வீலர் சேகரிப்பாளர்கள் மத்தியில் மிகப் பெரிய டிமாண்ட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









