140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!

தனது நிறுவனத்தின் 140 ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் வெஸ்பா ஸ்பெஷல் எடிசன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகியுள்ளது. இது இதற்கு முன்னர் அறிமுகமான வெஸ்பா ஸ்கூட்டர்களை விட அதிக பவர்ஃபுல்லான ஸ்கூட்டராக அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த 1884-ம் ஆண்டு துவங்கப்பட்டது தான் பியாஜியோ என்ற நிறுவனம் இந்நிறுவனம் இத்தாலியை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்டுள்ளது. துணை நிறுவனமாக செயல்படுவது தான் வெஸ்பா . இந்நிறுவனம் தனது 140-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் வெஸ்பா நிறுவனத்திலிருந்து ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

vespa special edition

வெஸ்பா நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு தனித்துவமான இந்த ஸ்கூட்டரை வெறும் 140 எண்ணிக்கையில் மட்டும் தயாரித்து விற்பனைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதுவரை வெஸ்பா நிறுவனம் வெளியிட்ட தனித்துவமான ஸ்கூட்டரிலேயே அதிக தனித்துவ அம்சங்கள் கொண்ட ஸ்கூட்டராக இந்த ஸ்கூட்டர் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெஸ்பா ஸ்கூட்டரை கடந்த 18-ம் தேதி முதல் புக்கிங் செய்யலாம் என அங்நிறுவனம் புக்கிங்கை துவங்கி விட்டது. ஏப்ரல் 21ஆம் தேதியுடன் புக்கிங் முடிகிறது. இந்த நாட்களுக்கு இடையில் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்கூட்டரை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வெஸ்பா ரசிகர்கள் பலர் இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரை பெறுவதற்காக தற்போது ஆன்லைனில் புக்கிங் செய்ய தொடங்கி விட்டார்கள்.

vespa special edition

வெஸ்பா ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரை பொறுத்தவரை வெள்ளை நிற பாடி நீல நிற பெயிண்ட் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பியாஜியோ நிறுவனத்தின் வடிவமைப்புகளும் நிறுவனத்தின் லோகோவும் கொண்டதாக இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இது 140வது ஆண்டு கொண்டாடும் விதமான ஸ்பெஷல் எடிஷன் என்பதால் இந்த ஸ்கூட்டரில் 140 என்ற புதிய லோகோவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் ஸ்டைலிங்கை பொறுத்த வரை ஹெரிடேஜ் மாடல் ஸ்டைலிங்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரில் இரு பக்கத்திலும் உள்ள சென்டர் பேனலில் ஏர் இன்டெக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் நீல நிற கான்ட்ராஸ்ட் கொண்டுவர வேண்டும் என்பதற்காக சீட்டு நிறத்தையும் நீல நிறத்தில் வடிவமைத்துள்ளது. மேலும் சீட் நீல நிறத்திலேயே டபுள் டோனில் இருக்கும் படி அதன் தையல்கள் வழங்கப்பட்டுள்ளன.

vespa special edition

இந்த ஸ்கூட்டரின் பின்பக்க சீட்டில் நீற நிற ஷேடில் கவர் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்டாண்டர்ட் அனைத்து ஸ்கூட்டரிலும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த லுக்கே பார்க்கும்போது கொஞ்சம் ஸ்டைல் லுக் கிடைக்கிறது. இன்னும் கூர்ந்து கவனிக்கும் போது ஸ்கூட்டரின் வீல் ரிம்களிலும் நீல நிற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

என்னதான் ஹெரிடேஜ் லுக்கில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், சில மாடலான டச்களும் இந்த ஸ்கூட்டரில் உள்ள முக்கியமாக எல்இடி லைட் பொருத்தப்பட்டுள்ளது. வட்ட வடிவிலான டிஜிட்டல் டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. இதில் எம்ஐஏ கனெக்டிவிட்டி சிஸ்டம் உள்ளிட்ட அனைத்து ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன. இது ஸ்கூட்டர் கீலெஸ் சிஸ்டத்தில் வேலை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏஎஸ்ஆர் எலெக்ட்ரானிக் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் ஆகிய அம்சங்கள் உள்ளன.

இந்த ஸ்கூட்டரின் இன்ஜினை பொறுத்தவரை 300 எச்பிஇ சிங்கிள் சிலிண்டர் லிக்யூட் கூடுட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 23 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற வெஸ்பா ஸ்கூட்டரை விட இந்த ஸ்கூட்டர் நல்ல பவர்ஃபுல் என்ஜின் கொண்ட ஸ்கூட்டராக இருக்கிறது. இதனால் பலர் இதை விரும்பி வாங்க வாய்ப்புகள் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பியாஜியோ நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் மிக நீண்ட கால அனுபவத்தை பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தனது வெஸ்பா பிராண்டில் உள்ள ஸ்கூட்டரில் தனது 140-வது ஆண்டு எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நிறுவனத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது. இந்த ஸ்கூட்டரை லிமிடெட் எடிசனாக அறிமுகப்படுத்தியுள்ளது பலர் இதை வாங்க தூண்டி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 20, 2024, 7:00 [IST]
English summary
Vespa special edition celebrates piaggio 140th anniversar
மேலும்... #வெஸ்பா #vespa
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X