அடேங்கப்பானு மிரள வைக்குது.. அழகில் வெஸ்பா ஸ்கூட்டர்களையே கதற விடும் இ-ஸ்கூட்டர் அறிமுகம்.. ஓலாக்கு கஷ்ட காலம்

இந்தியர்கள் மத்தியில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலைக் கருத்தில் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் பல தங்களின் வருகையை இந்தியாவில் பதிவு செய்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், இத்தாலியைச் சேர்ந்த ஓர் நிறுவனம் நம் நாட்டில் அதன் அசத்தலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலை விற்பனைக்குக் களமிறக்கி, இந்தியாவில் என்ட்ரீ கொடுத்திருக்கின்றது. வெலாசிஃபெரோ (Velocifero) எனும் பிராண்டே இந்தியாவில் நுழைந்திருக்கும் புதிய நிறுவனம் ஆகும். இத்தாலியின் மிகவும் பிரபலமான டூ-வீலர் உற்பத்தியாளர் இது என்பது கவனிக்கத்தகுந்தது.

வாகன உலகில் இந்த நிறுவனம் விஎல்எஃப் (VLF) என அழைக்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. இந்த பிராண்டு இந்தியாவைச் சேர்ந்த கேஏடபிள்யூ வெலோஸ் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் (KAW Veloce Motors Pvt Ltd) உடன் இணைந்தே இந்திய வர்த்தக பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

VLF tennis 1500w electric scooter launched

டென்னிஸ் (Tennis) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே விஎல்எஃப் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.29 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மேலும், டென்னிஸ் ஓர் அதீத ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும்.

1500 வாட் திறனையே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது. உலக சந்தையில் இந்த டென்னிஸ் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தகுந்தது. மற்றொன்று 4000W திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், இந்தியாவில் ஒற்றை தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.

VLF tennis electric scooter launched

இந்த ஸ்கூட்டர் அதிக ஆற்றலை உருவாக்கக் கூடியது மட்டுமல்ல கணிசமான அளவில் நல்ல ரேஞ்சை வழங்கக் கூடியதாகவம், மிகவும் அழகான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 130 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதற்காக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.5 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்களே போதுமானது. இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டாரானது 157 என்எம் டார்க்கை வெளியேற்றும். விஎல்எஃப் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சிறப்பு சேர்க்கின்ற பல்வேறு சிறப்பம்சங்களை சேர்த்திருக்கின்றது.

மிக முக்கியமாக உயர் அழுத்தத்தைத் தாங்கும் திறன் கொண்ட ஸ்டீல் ஃப்ரேமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, 5 அங்குல டிஎஃப்டி திரை ஒன்றும் டென்னிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டரில் ரைடை சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஈகோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் ஆகியவையே அவை ஆகும். இத்துடன், வாகனத்தின் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், முன் வீலில் டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஃபோர்க் மற்றும் பின் வீலில் ஹைட்ராலிக் மோனோ ஷாக் ஆகிய அம்சங்களே இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

வெலாஸ் டென்னிஸ் முன்னதாக கூறியதைப் போலவே மிகவும் அழகான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாகக் காட்சியளிக்கின்றது. வெஸ்வா ஸ்கூட்டர் மாடல்களுக்கு டஃப் கொடுக்கும் அழகுக் கொண்டதாக அது காட்சியளிக்கின்றது. ஸ்கூட்டரின் ஹெட்லைட், வீல், இருக்க மற்றும் பாடி பேனல் என அனைத்தும் இளைஞர்களின் மனதைக் கவரும் வகையில் இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிகவும் அழகான மின்சார ஸ்கூட்டர் மாடலாக விஎல்எஃப் டென்னிஸ் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்திய சந்தையில் இ-ஸ்கூட்டர் பிரிவில் மிகவும் கடுமையான போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே டென்னிஸ் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இது அதன் அழகிய தோற்றத்தின் வாயிலாக இந்தியர்களைக் கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 19, 2024, 11:15 [IST]
English summary
Vlf tennis 1500w electric scooter launched in india with 130 km range at inr 1 29 lakh
மேலும்... #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+