எல்லா ஊரிலும் ஷோரூம் இருக்கு!! இந்த பிராண்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நம்பி வாங்கலாம்...

ஜாய் இ-பைக் (Joy e-bike) எலக்ட்ரிக் வாகனங்கள் நாடு முழுவதும் 150க்கும் அதிகமான ஷோரூம்களில் கிடைப்பதாக வார்ட்விசார்ட் இன்னோவேஷன்ஸ் & மொபைலிட்டி லிமிடெட் (Wardwizard Innovations & Mobility Limited) நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்த நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, கடந்த சில வருடங்களில் பல்வேறு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதியதாக களமிறங்கி உள்ளன. அந்த வரிசையில், எலக்ட்ரிக் இருசக்கர வாகனமாக மார்க்கெட்டில் களமிறங்கியதே ஜாய் இ-பைக் ஆகும். இந்தியாவின் பிரபலமான வார்ட்விசார்ட் நிறுவனத்தின் இவி பிராண்டாக ஜாய் இ-பைக் விளங்குகிறது.

wardwizard announced remarkable achievement

அதேபோல், எலக்ட்ரிக் 3-வீலர்கள் விற்பனையிலும் வார்ட்விசார்ட் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இதற்காக ஜாய் இ-ரிக் என்கிற பிராண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாகனங்களை விற்பனை செய்வதற்காக கடந்த ஒரு வருடத்தில் சுமார் 156 டீலர்ஷிப் மையங்கள் புதியதாக திறக்கப்பட்டுள்ளதாக வார்ட்விசார்ட் இன்னோவேஷன்ஸ் & மொபைலிட்டி நிறுவனம் மகிழ்ச்சி உடன் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதில் வார்ட்விசார்ட் நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக உள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு வருடத்தில் சேல்ஸ் நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதில் வார்ட்விசார்ட் நிறுவனம் கூடுதல் முனைப்புடன் செயல்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதன் விளைவாகவே, வெறும் 1 வருடத்தில் 156 டீலர்ஷிப் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

wardwizard announced remarkable achievement

இந்த 156 டீலர்ஷிப் மையங்களுடன், நாடு முழுவதும் உள்ள வார்ட்விசார்ட் நிறுவனத்தின் கஸ்டமர் தொடு மையங்கள் (கஸ்டமர் டச் பாயிண்ட்ஸ்)-இன் எண்ணிக்கை 750ஐ கடந்துள்ளது. வார்ட்விசார்ட்டின் டீலர்ஷிப் மையங்கள் இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ளன. தென்னிந்தியாவில் நம் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் இந்த நிறுவனத்தின் ஷோரூம்கள் உள்ளன.

ஒருபக்கம் டீலர்ஷிப் மையங்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்தி வரும் வார்ட்விசார்ட் நிறுவனம் மறுப்பக்கம் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி, குறைவான வேகத்தில் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் 2-வீலர்களில் இருந்து அதிவேகமாக செல்லக்கூடிய 2-வீலர்கள் வரையில் ஜாய் இ-பைக் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.

wardwizard announced remarkable achievement

ஜாய் இ-பைக் நிறுவனத்தில் இருந்து கடைசியாக மிஹோஸ் என்ற பெயரிலான ஹை-ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வார்ட் விசார்ட் நிறுவனத்துக்கு குஜராத்தில் வதோதாரா என்கிற பகுதியில் 15,000 சதுர அடி பரப்பளவில் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இதற்கிடையில், ஜார்காண்ட் மாநிலத்தில் எலக்ட்ரிக் 2-வீலர்களுக்கான புதிய அசெம்பிளி லைனை வார்ட்விசார்ட் நிறுவனம் திறந்துள்ளது.

இந்த புதிய அசெம்பிள் லைனில் வருடத்திற்கு சராசரியாக 20,000 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அசெம்பிள் செய்ய முடியும். ஜாய் இ-பைக்கின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களில் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த தேவையை சமாளிக்க இந்த புதிய அசெம்பிளி லைன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல், நேபாளத்துக்கு ஏற்றுமதி செய்வதற்கும் இந்த அசெம்பிளி லைன் உதவும்.

wardwizard announced remarkable achievement

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டாக ஜாய் இ-பைக் வளர்ந்து வருகிறது. எலக்ட்ரிக் பைக்குகளும் இந்த பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. ஜாய் இ-பைக் பிராண்ட் இந்த அளவிற்கு வேகமாக வளர்வதற்கு, வார்ட்விசார்ட் நிறுவனத்தின் உந்துதல் மிக முக்கிய காரணமாகும். இந்தியா முழுவதும் 750க்கும் அதிகமான கஸ்டமர் டச் பாயிண்ட் என்பது உண்மையில் நல்ல விஷயமே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 21, 2024, 8:00 [IST]
English summary
Wardwizard announced remarkable achievement in network expansion
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X