தங்கம் போல கொண்டு வந்திருக்காங்க.. ஒரு கிமீ ஓட்ட வெறும் 17 பைசா மட்டுமே ஆகும்.. ஓலாவுக்கு மாற்று வந்தாச்சு!!

முன்னணி நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்குக் கொண்டு வருவதில் பெயர்போன நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது, வார்ட்விசார்டு இன்னோவேஷன்ஸ் மற்றும் மொபிலிட்டி லிமிடெட் (Wardwizard Innovations and Mobility Limited). இந்த நிறுவனம் ஜாய் இ-பைக் (Joy e-bike) எனும் பிராண்டின்கீழே எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே தற்போது அது புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. நீமோ (Nemo), இதுவே அந்த புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் ஆகும்.

இதற்கு அறிமுகமாக ரூ. 99 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அறிமுகத்தைத் தொடர்ந்து இப்போது இதற்கான புக்கிங்கை ஏற்கும் பணிகளை ஜாய் இ-பைக் தொடங்கி இருக்கின்றது. ரூ. 999க்கே புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

Joy nemo electric launched

விலை குறைவாக இருக்கின்றதே, சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த நீமோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பின் தங்கி இருக்குமோ என நீங்கள் சந்தேகிக்கலாம். அதுதான் கிடையாது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரேஞ்ச் தருவதி மற்றும் ஆற்றலை வெளியேற்றுவது என அனைத்திலும் மிக சிறந்த ஒன்றாகக் காட்சியளிக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1500W திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இது ஓர் முழு சார்ஜில் 130 கிமீ வரை ரேஞ்ச் தரும். இதற்காக 72V - 40Ah திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது ஓர் லித்தியம் அயன் என்எம்சி வகை பேட்டரி பேக் ஆகும். இது முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் வரை தேவைப்படும். மேலும், இதை முழுமையாக சார்ஜ் செய்யவே வெறும் 2.8 யூனிட்டுகள் மட்டுமே செலவாகும். இதை வைத்தே ஒரு கிமீ தூரம் பயணிக்க வெறும் 17 பைசா மட்டுமே செலவாகும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

ஆமாங்க, ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து இதைவிட வேகமாகவும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இதேபோல், அதிகபட்சமாக 150 கிலோ வரையில் எடையை தாங்கும் வகையில் இதனை ஜாய் இ-பைக் வடிவமைத்திருக்கின்றது. மூன்று விதமான ரைடிங் மோட்களும் நீமோவில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஈகோ (Eco), ஸ்போர்ட் (Sport) மற்றும் ஹைப்பர் (Hyper) ஆகியவையே அவை ஆகும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ ஆகும். அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதியாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஆன்டி தெஃப்ட் அலாரம், வாகனத்தை இடத்தை டிராக் செய்யும் வசதி மற்றும் ஜியோ ஃபென்சிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, 5 அங்குல கலர் டிஎஃப்டி திரை, கிளவுட் கன்னெக்ட், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ரிவர்ஸ் அசிஸ்ட் மற்றும் ரிமோட் மானிட்டரிங் அம்சம் என ஏகப்பட்டவை இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், சிறந்த இயக்க அனுபவத்திற்காக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின் பக்கத்தில் டூயல் ஷாக் அப்சார்-ம் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக சிபிஎஸ் (Combi Brake System) உடன் கூடிய டிஸ்க் பிரேக் அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. நிற தேர்வை பொருத்த வரை இரண்டு விதமான ஆப்ஷன்கள் மட்டுமே நீமோவில் வழங்கப்படுகின்றன. கிரே மற்றும் ஒயிட் ஆகியவையே அவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் மற்றும் டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையிலேயே இந்த விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஜாய் இ-பைக் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, December 16, 2024, 16:05 [IST]
English summary
Wardwizard innovations launches nemo electric scooter in india at inr 99000
மேலும்... #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+