தோனி இந்த நிறுவனம் மேலதான் பணத்தை வாரி கொட்டியிருக்காரு! சீக்கிரமே ஆலையில் உற்பத்தி விறுவிறுப்பா நடக்கபோகுது!

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவே மையமாகக் கொண்டு இயங்கும் எலெக்ட்ரிக் சைக்கிள் (Electric Cycle) உற்பத்தி நிறுவனம் இ-மோட்டாராட் (E-Motorad). இந்த நிறுவனத்தின் இ-சைக்கிள் உற்பத்தி ஆலையான ஜிகா ஃபேக்டரி (GigaFactory) சீக்கிரமே உற்பத்திக்கு தயாராகிவிடும் என்கிற தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது.

அதாவது, இ-மோட்டாராட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் சைக்கிள் உற்பத்தி ஆலையின் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடையும் தருவாயில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிறுவனத்தின் மீது இந்தியாவைச் சேர்ந்த பெரும் புள்ளிகள் பலர் முதலீடு செய்திருக்கின்றனர். அந்தவகையில், பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரான மஹேந்திர சிங் தோனி-யும் பெரும் தொகையை அது மீது இன்வெஸ்ட் செய்திருக்கின்றார்.

EMotorad electric cycle factory

தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய உற்பத்தி ஆலையாக இ-மோட்டாரட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் சைக்கிள் உற்பத்தி ஆலை தயாராககிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இங்கு 300 அதிகமானோர் பணியமர்த்தப்பட இருக்கின்றனர். இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி ஆகஸ்டு 15 ஆம் தேதி இதன் திறப்பு விழா அரங்கேறும் என தெரிகின்றது.

சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நிறுவனத்தின் இ-சைக்கிள் உற்பத்தி ஆலை உருவாகிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆண்டு ஒன்றிற்கு 5 லட்சம் மில்லியன் இ-சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதே இந்த ஆலை என இ-மோட்டார் நிறுவனத்தின் சிஇஓ-ஆன குணல் குப்தா தெரிவித்து இருக்கின்றார்.

EMotorad electric cycle doodle v3

இந்த நிறுவனத்தில் ஏற்கனவே 50க்கும் மேற்பட்டோர் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் உற்பத்தி ஆலையில் இ-சைக்கிள்கள் மட்டுமின்றி பேட்டரிகள், மோட்டார்கள், எலெக்ட்ரிக் சைக்கிள்களுக்கான திரைகள் மற்றும் சார்ஜிங் கருவிகள் உள்ளிட்டவைகளும் தயாரிக்கப்பட உள்ளன.

இதுதவிர, இந்தியர்களுக்காக புதுமுக தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியிலும் இ-மோட்டாராட் ஈடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய நிறுவனத்தின் மீதே தோனி பெரும் தொகையை முதலீடு செய்திருக்கின்றார். கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்த முதலீட்டை அவர் செய்தார். ஆனால், எவ்வளவு ரூபாய் அவர் முதலீடு செய்திருக்கின்றார் என்பு பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிறுவனம் 2023 நவம்பர் மாதத்தின்படி சுமார் 164 கோடி முதலீட்டைக் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இன்றைய தேதி நிலவரப்படி இ-மோட்டாராட் பிராண்டின்கீழ் 350 டீலர்கள் மையங்களும், 10 அனுபவ மையங்களும் நாட்டில் செயல்பட்டு வருகின்றன. விரைவில் இவற்றின் எண்ணிக்கையையும் இ-மோட்டாராட் அதிகரிக்கச் செய்ய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிறுவனம் தன்னுடைய எலெக்ட்ரிக் சைக்கிள்களை விற்பனை மையங்கள் வாயிலாக மட்டுமின்றி அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்-லைன் வர்த்தக தளங்கள் வாயிலாகவும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்ததது. நிறுவனத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக ஐந்து இ-சைக்கிள் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

டூடுல் வி2 (Doodle V2), இஎம்எக்ஸ் (EMX), டி-ரெக்ஸ் ஏர் (T-Rex Air), டூடுல் வி3 (Doodle V3), இஎம்எக்ஸ் பிளஸ் (EMX+) ஆகியவையே அவை ஆகும். இவை அனைத்தும் டிசையர் ரேஞ்ஜின் கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் சைக்கிள் ஆகும். டூடுல் வி2-தான் ஆரம்ப நிலை இ-சைக்கிளாக உள்ளது.

இதன் விலை ரூ. 49,999 ஆகும். இதேபோல், இஎம்எக்ஸ் மாடலுக்கு ரூ. 58,999 விலையும், டி-ரெக்ஸ் ஏர் மாடலுக்கு ரூ. 34,999 விலையும், டூடுல் வி3 மாடலுக்கு ரூ. 59,999 விலையும் மற்றும் இஎம்எக்ஸ் பிளஸ் மாடலுக்கு ரூ. 64,999 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்த நிறுவனம் எக்ஸ்-ஃபேக்டர் எனும் பிரிவிலும் இ-சைக்கிளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த ரேஞ்ஜில் எக்ஸ்1 (X1), எக்ஸ்1 லிமிடெட் எடிசன் (X1 Limited Edition), லெஜண்ட் 07 எம்எஸ்டி எடிசன் (Legend 07 MSD Edition), எக்ஸ்2 (X2), எக்ஸ்3 (X3) ஆகிய மாடல்கள் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ரூ. 24,999 முதல் 32,999 வரையில் விலைக் கொண்ட எக்ஸ்-ஃபேக்டர் ரேஞ்ஜ் காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்தியர்களின் கவனத்தை இ-சைக்கிள்கள் பக்கம் ஈர்க்கும் பொருட்டு இ-மோட்டாராட் அதன் மிகப் பெரிய சைக்கிள் உற்பத்தி ஆலையை இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 8, 2024, 5:00 [IST]
English summary
When is e motorad s new manufacturing plant opening
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+