இந்தியர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஹீரோ பைக் இங்கிலாந்துக்கும் போகபோகுதா! உலகையே ஆள போகுதுனு சொல்லுங்க!

இந்தியர்களுக்காக தயார் செய்யப்பட்ட ஹீரோ பைக் மாடல் ஒன்று இங்கிலாந்து நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன பைக் மாடல்? அது தற்போது இந்தியாவில் என்ன விலையில் விற்கப்படுகின்றது மற்றும் அதன் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம், இந்தியர்களுக்காக பார்த்து பார்த்து தயாரித்த பைக் மாடல்களில் மேவ்ரிக் 440 (Hero Mavrick 440)-ம் ஒன்றாகும். இந்த பைக் மாடலையே ஹீரோ நிறுவனம் இங்கிலாந்து நாட்டில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Hero mavrick 440

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறிய நிலையில், மீண்டும் ஹீரோ மோட்டகார்ப் நிறுவனத்துடன் கூட்டணியை அமைத்து, இதன் வாயிலாக மீண்டும் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கூட்டணியைத் தொடர்ந்து இரு நிறுவனங்களும் இணைந்து ஹார்லி டேவிட்சனுக்காக ஓர் மோட்டார்சைக்கிளை தயாரித்தன.

அதுதான் எக்ஸ்440 பைக் மாடல் ஆகும். இந்த பைக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டதே ஹீரோவின் இந்த மேவ்ரிக் 440 என்பது குறிப்பிடத்தகுந்தது. இதையே ஏ2 லைசென்ஸ் வாயிலாக இங்கிலாந்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது, ஹீரோ நிறுவனம். இங்கிலாந்தில் 5,000 ஜிபிபி-க்கும் குறைவான விலையில் இது விற்பனைக்குக் களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், துள்ளியமான விலை விபரம் வெளியாகவில்லை. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்குள் இந்த பைக்கை ஹீரோ இங்கிலாந்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்துவிடும் என கூறப்படுகின்றது. மேலும், இந்தியர்களின் மனதைக் கவர்ந்திருப்பதைப் போலவே இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் மனதையும் இந்த பைக் கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போதைய நிலவரப்படி ஹீரோ மேவ்ரிக் 440 இந்தியாவில் மட்டுமே விற்பனையில் இருக்கின்றது. 1.99 லட்சம் ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இது பேஸ் எனும் ஆரம்ப நிலை தேர்வின் விலையாகும்.

இதுதவிர, மிட் (2.24 லட்சம் ரூபாய்) மற்றும் டாப் (2.14 லட்சம் ரூபாய்) என்கிற இரண்டு விதமான தேர்வுகளிலும் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும். பேஸ் வேரியண்டைப் பொருத்தவரை முக்கிய அம்சங்களாக எல்இடி லைட்டுகள், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொணட் நெகட்டீவ் எல்சிடி கிளஸ்டர் மற்றும் ஆட்டோ இலுமினேஷன் ஆகிய அம்சங்களைத் தாங்கி இருக்கும்.

இத்துடன், ஸ்போக் வீல் மற்றும் ஒற்றை நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட ஆப்ஷன் மட்டுமே இதில் வழங்கப்படுகின்றது. அதுவே மிட் தேர்வாக இருப்பின், அலாய் வீல் மற்றும் டூயல் நிற ஆப்ஷன் வழங்கப்படும். குறிப்பாக, டாப் வேரியண்டிலேயே மிக அதிக சிறப்பு வசதிகளை ஹீரோ வாரி வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில், டைமண்ட் கட் ஃப்னிஷிங் கொண்ட அலாய் வீல், 35க்கும் மேற்பட்ட இணைப்பு வசதியை வழங்கக் கூடிய இ-சிம் மற்றும் 3டி பேட்ஜிங் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதனால் மிக சிறந்த தேர்வாக டாப் இருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 440 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது ஓர் ஏர் மற்றும் ஆயில் கூல்டு மோட்டார் ஆகும். 27 பிஎச்பி பவரையும், 36 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டதே இந்த மோட்டார் ஆகும். இத்தகைய சூப்பரான அம்சங்கள் கொண்ட பைக்கையே ஹீரோ இந்தியாவைத் தாண்டி இங்கிலாந்திலும் விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் தற்போது களமிறங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் மிக சிறந்த பைக் மாடல்களில் ஒன்றாக ஹீரோ மேவ்ரிக் 440 காட்சியளிக்கின்றது. ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கும் கனவில் உள்ளவர்களுக்கு எட்டக் கூடிய கனியாக அதன் தயாரிப்புகள் உள்ளன. இந்த நிலையிலேயே எக்ஸ்44 பைக்கை அப்படியே பிரதிபலிக்கும் பைக்காக மேவ்ரிக் 440 விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

எக்ஸ்440 மாடலைக் காட்டிலும் சற்று குறைவான விலைக் கொண்டதே இந்த மேவ்ரிக் 440 ஆகும். இந்த பைக் இங்கிலாந்தைத் தொடர்ந்து உலகையே ஆளும் வகையில் மற்ற சில நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, March 16, 2024, 21:52 [IST]
English summary
Will hero mavrick 440 be launched in uk here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+