சிஎன்ஜி பைக்கை பயன்படுத்தினால் லாபமா நஷ்டமா? பைக்கின் தொழிற்நுட்பம் இது தான்!
உலகின் முதல் சிஎன்ஜி பைக் குறித்த செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் சாதாரண பைக்குக்கும் சிஎன்ஜி பைக்குக்கும், என்ன வித்தியாசம் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சிஎன்ஜி பைக் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதற்கான விரிவான பதில்களை தான் நாம் இங்கே காண போகிறோம்.
தற்போது பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் மத்தியில் சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்கள் மீதான விருப்பம் அதிகமாகியுள்ளது. எரிபொருளின் விலை பெட்ரோலை விலை குறைவாக இருப்பதால் மக்கள் சிஎன்ஜி ரக வாகனங்களை அதிகம் விரும்பி வாங்கி வருகின்றனர். இதன் மூலம் ஏகப்பட்ட பணத்தை மிச்சப்படுத்த முடியும் என கருதுகின்றனர்.

இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக சிஎன்ஜி பொருத்தப்பட்ட வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கார்களில் பொதுவாக சிஎன்ஜி வாகனங்கள் என்பது தற்போது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் உலகில் முதன் முதலாக சிஎன்ஜியில் இயங்கும் பைக்கை அறிமுகப்படுத்த பஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பஜாஜ் நிறுவனம் இந்த சிஎன்ஜி பைக்கை விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து ஆர்வம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 2025-ம் ஆண்டு தான் இந்த சிஎன்ஜி பைக் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் பஜாஜ் நிறுவனத்தின் தலைவர் அளித்த பேட்டியின் மூலம் அதற்கு முன்னதாகவே இந்த பைக் விற்பனைக்கு வர அதிகமான சாத்திய கூறுகள் இருப்பது தெரிகிறது.

பார்ப்பதற்கு சாதாரண பெட்ரோல் இன்ஜின் கொண்ட பைக் போலவே இருக்கும். பெட்ரோல் இன்ஜின் பைக்குகளில் பைப்பு வழியாக பெட்ரோல் இன்ஜின் உள்ளே சென்று உள்ளே இருக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் மூலம் வெடிப்பு ஏற்பட்டு அதன் மூலம் கிடைக்கும் எனர்ஜியை பயன்படுத்தி வாகனம் என்பது இயங்கும். சிஎன்ஜி பைக்கும் கிட்டத்தட்ட அதே சிஸ்டத்தை தான் பயன்படுத்துகிறது.
இங்கே பெட்ரோலுக்கு பதிலாக சிஎன்ஜி எரிவாயு பைப் வழியாக இன்ஜின் உள்ளே செல்கிறது. இன்ஜின் உள்ளே செல்லும் சிஎன்ஜி எரிவாயு அங்குள்ள காற்றை பயன்படுத்தி வெடிப்பை ஏற்படுத்தி பைக்கை இயக்க வைக்கிறது. பெட்ரோல் இன்ஜினியிலேயே சிஎன்ஜி எரிவாயு இயங்கும் வகையில் இது சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் ஆகிறது.

சிஎன்ஜி பைக்கை பொறுத்தவரை பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. வாயு காற்றுடன் கேஸ் லீக்காக அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இதனால் இதன் பாதுகாப்பிற்காக சிறப்பான அம்சங்கள் எல்லாம் இந்த பைக்கில் சேர்க்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெட்ரோல் டேங்க் போல சிஎன்ஜி எரிவாயுவை சேமிக்கவும் சிலிண்டர் டேங்க் என்பது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை பஜாஜ் நிறுவனம் இந்த சிஎன்ஜி பைக் முழுமையாக சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் பைக்கா? அல்லது பெட்ரோல் டேங்க் உடன் சிஎன்ஜி டேங்க்கும் கூடுதலாக இணைக்கப்பட்டு ஒரே நேரத்தில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இணை இரண்டிலும் இயங்கும் பைக்கா? என்பதை தெரிவிக்கவில்லை. இது குறித்து அறிவிப்புகள் எல்லாம் பைக்கின் அதிகாரப்பூர்வ அறிமுகம் ஆகும் போது தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎன்ஜி பைக்கை பொறுத்தவரை பெட்ரோல், டீசல் இன்ஜின் பைக்கை விட கொஞ்சம் குறைவான பவர் தான் இருக்கும். இதனால் சிஎன்ஜி பைக்கின் பிக்கப்பும் கம்மியாக தான் இருக்கும். அதே நேரம் விலையைப் பொறுத்தவரை பெட்ரோல் பைக்கை விட சிஎன்ஜி பைக்கில் சில உதிரி பாகங்கள் அதிகமாக இருப்பதால் இதன் விலை பெட்ரோல் பைக்கை விட கொஞ்சம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜி பைக்குகள் என்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதால் அதிக நேரம் பயன்படுத்துபவர்கள் சிஎன்ஜி பைக்கை விரும்பி வாங்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக டெலிவரி தொழிலில் இருக்கும் நபர்கள் இந்த பைக்குகளை தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. சிஎன்ஜி கேஸ் ஸ்டேஷன் இருக்கும் பகுதிகளில் இந்த பைக்குகளின் விற்பனை அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









