பெட்ரோல் செலவுல பாதி தான் ஆகும்! உலகின் முதல் சிஎன்ஜி பைக் இவ்வளவு மைலேஜ் தருமா?

பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் உலகின் முதல் சிஎன்ஜி பைக் அடுத்த 3 மாதங்களில் விற்பனைக்கு அறிமுகமாகும் என தெரிவித்துள்ளார். இந்த பைக்கை பயன்படுத்துவதன் மூலம் தற்போது பொதுமக்களுக்கு பைக் ஓட்டுவதால் ஆகும் பெட்ரோல் செலவு 50 முதல் 65 சதவீதம் வரை குறையும் என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பஜாஜ் நிறுவனம் குறைந்த விலையில் எளிய மக்களுக்கான வாகனங்களை தயாரிக்கும் சிறந்த நிறுவனமாக இருக்கிறது. பலர் தங்கள் வாழ்நாளில் முதல் பைக்காக பஜாஜ் நிறுவனத்தின் பைக்கை தான் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது.

World s first CNG bike bajaj

இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் தற்போது வாகன விற்பனையில் சிறப்பாக இல்லாவிட்டாலும் மீண்டும் தனது இடத்தை பிடிப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி என் நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை அடுத்த காலாண்டுக்குள் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசும்போது: " ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் செய்ய முடியாத விஷயத்தை தற்போது பஜாஜ் நிறுவனம் செய்து வருகிறது. சிஎன்ஜி பைக்கை தயாரித்துள்ளது. இதன் மூலம் மக்கள் குறைவான எரிபொருள் செலவில் வாகனங்களை இயக்க முடியும். இதை தற்போது பஜாஜ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. அடுத்த காலாண்டில் இது விற்பனைக்கு அறிமுகமாகும்" எனக் கூறியுள்ளார்.

World s first CNG bike bajaj

இந்த பேட்டியில் அவர் குறிப்பிடும் போது 50 முதல் 65% வரை பயணிகளுக்கு எரிபொருள் செலவு மற்றும் வாகனத்தை இயக்குவதற்கான செலவு குறையும் என தெரிவித்துள்ளார் . இது மட்டுமல்லாமல் பெட்ரோல் இன்ஜின் வாகனத்தை விட சிஎன்ஜி பயன்படுத்தும் போது வெளியாகும் மாசு அளவும் பெரும் அளவு குறையும் என தெரிவித்துள்ளார்.

தற்போது பஜாஜ் நிறுவனம் உருவாக்கிய மோட்டார் சைக்கிளில் சிஎன்ஜி பயன்படுத்தும் போது 50 சதவீதம் மாசு குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி எரிபொருளை பயன்படுத்தும் போது வெளியாகும் மாசு என்பது 90 சதவீதம் மீத்தேன் அல்லாத ஹைட்ரோ கார்பன் மாசுகளாக வெளியாகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீத்தேன் உடன் கூடிய ஹைட்ரோ கார்பன் மாசு என்பது சுற்றுச்சூழலுக்கு மிகவும் கேடான விஷயமாகும்.

World s first CNG bike bajaj

இதனால் அடுத்த மூன்று மாதங்களில் சிஎன்ஜி பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விற்பனைக்கு வந்தால் நிச்சயம் பெட்ரோல் பைக்குகளுக்கு மிகப்பெரிய சவாலை வழங்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் இதன் விலையும் குறைவாக இருந்தால் நிச்சயம் மக்கள் மத்தியில் பெரிய அளவிற்கு ரீச் இருக்கும். ஆனால் சிஎன்ஜிக்கான எரிபொருள் நிரப்பும் மையங்கள் என்பது அதிகமாக இல்லை.

அடுத்ததாக பஜாஜ் நிறுவனம் இருப்பதிலேயே அதிக திறன் கொண்ட பல்சர் பைக்கை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. 2025-ம் ஆண்டு இந்த பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பல்சர் பைக் பஜாஜ் நிறுவனம் சூப்பர் பைக் ரேஞ்சுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. இதன் இதில் பிரிமியம் அம்சங்களை சேர்ப்பதை விட சூப்பர் பைக் என்ற அம்சத்தை சேர்க்கவே பஜாஜ் நிறுவனம் விரும்புகிறது.

இருந்தாலும் 125சிசி செக்மென்டிலேயே பஜாஜ் நிறுவனம் அதிகமான பைக்குகளை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. விரைவில் 125சிசி செக்மெண்டில் அதிக எண்ணிக்கையிலான பைக்குகள் அறிமுகமாகி விற்பனைக்கு வரும் எனவும் பஜாஜ் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஒரு சில ஆண்டுகளில் பஜாஜ் நிறுவனம் பைக் விற்பனையில் மிகப்பெரிய புரட்சி செய்யும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் சிஎன்ஜி ஸ்டேஷன்கள் பெரும்பாலான ஊர்களில் இல்லை வெகு சில ஊர்களில் மட்டுமே சேர்ந்து ஸ்டேஷன்கள் உள்ளன. தென் மாவட்டங்களில் சிஎன்ஜி பயன்பாடு என்பது குறைவாக இருக்கிறது. சிஎன்ஜி பயன்பாடு இல்லாத ஊர்களில் சிஎன்ஜி பைக்குகளில் விற்பனை என்பது சாத்தியமில்லாத விஷயம்தான். இருந்தாலும் பஜாஜ் நிறுவனத்தின் இந்த முயற்சியை நிச்சயம் பாராட்டலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 6, 2024, 7:00 [IST]
English summary
Worlds first cng bike bajaj launch next quarter
மேலும்... #Bajaj CNG Bike #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X