100கிமீ மைலேஜ் கிடைத்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்ல!! உலகளவில் தரமான செய்கையை செய்ய தயாராகும் பஜாஜ்!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் அதன் முதல் சிஎன்ஜி பைக்கை இன்னும் 3 மாதங்களில் அறிமுகம் செய்துவிடும் என சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த சிஎன்ஜி பைக்கின் அறிமுகம் குறித்த புதியதொரு தகவல் வெளியாகி உள்ளது. அது என்ன என்பதையும், பஜாஜின் இந்த சிஎன்ஜி பைக் எவ்வாறு இருக்கும் என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.

சிஎன்ஜி (CNG), அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயு. இந்த வகை எரிவாயுவில் இயங்கும் வாகனங்களில் பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்த தேவை இருக்காது. பஜாஜ் நிறுவனத்துக்கு மட்டுமில்லை, சிஎன்ஜி வாகனங்கள் ஒட்டுமொத்த உலகத்திற்கும் புதியவை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இந்தியாவில் சிஎன்ஜி-இல் இயங்கக்கூடிய பேருந்துகளையும், கனரக வாகனங்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம்.

bajaj cng bike launch date

சிஎன்ஜி கார்களும் நம் நாட்டில் விற்பனையில் உள்ளன. மாருதி சுஸுகி, டாடா போன்ற முன்னணி கார் நிறுவனங்கள் கூட சிஎன்ஜி கார்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகின்றன. ஆனால், சிஎன்ஜி பைக் என்று ஒன்றுகூட விற்பனையில் இல்லை. இந்த நிலை நம் இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் உள்ளது. ஆதலால், பஜாஜ் ஆட்டோ உருவாக்கி கொண்டிருக்கும் சிஎன்ஜி பைக் தான் உலகின் முதல் சிஎன்ஜி பைக்காக விளங்கவுள்ளது.

இந்த பஜாஜ் சிஎன்ஜி பைக் அடுத்த காலாண்டில், அதாவது 2024 ஜூன் மாதம் முடிவதற்குள் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருந்தார். இதனால், இந்த புதிய பஜாஜ் பைக் அடுத்த 3 மாதங்களில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஜாஜின் இந்த முதல் சிஎன்ஜி பைக் வருட இறுதியில் வரும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால சமயத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தற்போது மற்றொரு செய்தி வெளியாகி உள்ளது.

bajaj cng bike launch date

அதாவது, நாம் இப்போது எதிர்பார்த்திருப்பதை காட்டிலும் 2 - 3 மாதங்கள் தாமதமாக இந்த சிஎன்ஜி பைக் அறிமுகம் செய்யப்படலாம். பஜாஜின் இந்த சிஎன்ஜி பைக்கின் காப்புரிமை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகிவிட்டன. அவற்றின் மூலம் பார்க்கும்போது, இந்த பஜாஜ் சிஎன்ஜி பைக் 'ப்ரூஸர் 125' என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம். ஆம், இது ஒரு 125சிசி பைக்காக உருவாக்கப்படுகிறது.

நகர்புறங்களை காட்டிலும், இந்த சிஎன்ஜி பைக்கை கிராம மற்றும் குறு நகர வாடிக்கையாளர்களை டார்க்கெட் செய்து பஜாஜ் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதனால், இந்த 125சிசி பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.80,000இல் இருந்து எதிர்பார்க்கலாம். அதாவது, அனைவராலும் வாங்கக்கூடிய வகையில் குறைவான விலையில் தனது முதல் சிஎன்ஜி பைக்கை பஜாஜ் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.

பொதுவாகவே, பெட்ரோல்/ டீசல் வாகனங்களை காட்டிலும் சற்று குறைவாகவே இயக்க ஆற்றல் சிஎன்ஜி வாகனங்களில் கிடைக்கும். இதன் காரணமாக, மைலேஜ் அதிகமாக கிடைக்கும். பஜாஜின் இந்த புதிய சிஎன்ஜி பைக்கையும் சிறந்த மைலேஜ் பைக்காக எதிர்பார்க்கலாம். சிஎன்ஜி வாகனங்களில் இயற்கை எரிவாயுவை நிரப்ப டேங்க் தேவை. அப்படியென்றால், பைக்கில் எவ்வாறு டேங்கை பொருத்துவது என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம்.

bajaj cng bike launch date

இதற்காகவே, இந்த சிஎன்ஜி பைக்கின் முழு நீளத்திற்கு டேங்கை வழங்க பஜாஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், இது ஒரு விசித்திரமான தோற்றம் கொண்ட பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், வெளியாகியுள்ள டிசைன் காப்புரிமை படங்களில் பைக்கில் பெட்ரோல் டேங்க் என்கிற ஒரு பகுதியே கிடையாது. வழக்கமாக பெட்ரோல் டேங்க் கொடுக்கப்படும் பகுதியில் காற்று சுத்திகரிப்பான், பேட்டரி போன்றவற்றை வழங்க பஜாஜ் திட்டமிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜி கார்களில் பெட்ரோல் டேங்க்கும் இருக்கும். ஏனெனில், சிஎன்ஜி கிடைக்கவில்லை எனில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு காரை ஓட்டுவதற்காக. ஆனால், இந்த பஜாஜ் சிஎன்ஜி பைக்கில் அவ்வாறு ட்யூயல்-ஃப்யுல் ஆப்ஷன் இல்லாதது எந்த அளவிற்கு சரிப்பட்டு வரும் என்பது தெரியவில்லை. ஏனெனில், அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆனது இந்தியாவில் முக்கிய நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது.

Source: AckoDrive

More from DriveSpark

Article Published On: Thursday, March 7, 2024, 8:00 [IST]
English summary
Worlds first cng bike comes from bajaj auto in this 2024 diwali time
மேலும்... #Bajaj CNG Bike #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X