தமிழக தயாரிப்புக்கு ஐரோப்பிய சந்தையில் இப்படி ஒரு வரவேற்பா! லட்டு மாதிரி எல்லாரும் அள்ளிட்டு போயிட்டிருக்காங்க

இந்தியாவில் தயாரிக்கப்படும் யமஹா (Yamaha) நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்றிற்கு ஐரோப்பிய நாடுகளில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தக் கூடிய தகவலே தற்போது வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் புகழ்பெற்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக ரே இசட்ஆர் 125 (Ray ZR 125) இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது அதிக மைலேஜை வழங்கும். அதேவேளையில், முரட்டுத் தனமான மற்றும் கவர்ச்சியான தோற்றத்தையும் அது கொண்டிருக்கின்றது. இதற்காகவே இந்திய இளைஞர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே ஐரோப்பிய சந்தையிலும் ரே இசட்ஆர் 125 ஸ்கூட்டருக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. அதாவது, அதிக எண்ணிக்கையில் இந்த ஸ்கூட்டர் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரையில் சுமார் 13,400 யூனிட்டுகள் ரே இசட்ஆர் 125 ஸ்கூட்டர்கள் ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன.

Yamaha ray zr 125

இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, துருக்கி, சுவிட்சர்லாந்து, கிரீஸ் மற்றும் போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் வெற்றிகரமான ஸ்கூட்டர் மாடலாக ரே இசட்ஆர் 125 விளங்கிக் கொண்டு இருக்கின்றது. இது ஓர் ஹைபிரிட் தொழில்நுட்ப வசதி தாங்கிய ஸ்கூட்டர் மாடல் ஆகும்.

இந்திய சந்தையில் இந்த ஸ்கூட்டர் ரூ. 85,030 தொடங்கி ரூ. 96,730 வரையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். தமிழ்நாட்டிலேயே யமஹா நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் தயாரிக்கப்படும் வாகனங்களே நாடு முழுவதிற்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்தியாவிற்கு மட்டுமல்ல உலக நாடுகள் சிலவற்றிற்கும் இங்கிருந்தே யமஹா அதன் இரண்டு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்கின்றது. அந்தவகையில், ஐரோப்பாவிற்கும் இங்கிருந்தே வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில், யமஹா ரே இசட்ஆர் 125 பன்முக தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டிரம், டிஸ்க் மற்றும் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி பதிப்பு ஆகிய மூன்று தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

வேரியண்டிற்கு ஏற்ப நிற தேர்வு மற்றும் சிறப்பம்சங்கள் மாறுபட்டுக் காணப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த ஸ்கூட்டரில் 125 சிசி ஏர்-கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.1 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய திறன் கொண்ட ஸ்கூட்டர் மாடலாகவே ரே இசட்ஆர் 125 காட்சியளிக்கின்றது. இதே எஞ்சினே யமஹா ஃபஸ்ஸினோ 125 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இரண்டும் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்டவை ஆகும். இது எரிபொருள் சிக்கனத்திற்கு வழிவகுத்து அதிக மைலேஜை பெற்று தரும்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 71.33 கிமீ வரையில் மைலேஜை தரும். ரே இசட்ஆர் 125 ஸ்கூட்டருக்கு ஐரோப்பிய சந்தையில் கிடைத்திருக்கும் வெற்றி குறித்து யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஈஷின் சிஹானா பெருமிதம் கொண்டு உள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறியாதவது, "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரே இசட்ஆர் 125 ஸ்கூட்டருக்கு ஐரோப்பாவில் அபரிமிதமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது உண்மையிலேயே பெருமைக்குரிய தருணம். உலக தரம் வாய்ந்த ஸ்கூட்டரின் சிறந்த தரத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றது" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மைல்கல் இந்தியாவிற்கு உலகளாவில் பெருமிதம் கொள்ளும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், யமஹா நிறுவனத்தின் தயாரிப்பிற்கு இந்தியாவில் கிடைப்பதைப் போலவே நல்ல வரவேற்பு உலக சந்தையிலும் கிடைத்துக் கொண்டிருப்பதும் தற்போது தெரிய வந்திருக்கின்றது. இதுதவிர இப்போதுக் கிடைத்துக் கொண்டிருக்கும் டிமாண்டை வைத்து பார்க்கையில் விரைவிலேயே இன்னும் பல புதிய சாதனைகளை யமஹா உலக அரங்கில் மேற்கொள்ளும் என தெரிகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 7, 2024, 23:33 [IST]
English summary
Yamaha exports over 13400 ray zr 125 scooters to europe from india
மேலும்... #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+