ஆர்எக்ஸ்100 போல ஆர்டபிள்யூ எனும் புதிய சாம்ராஜ்யத்தை உருவாக்கும் யமஹா! மார்கெட்ட முழுசா வளச்சு போட ஸ்கெட்ச்சா!

இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக யமஹா ஆர்எக்ஸ் 100 (Yamaha RX100) பைக்கின் வருகை இருக்கின்றது. இதுகுறித்து வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களும் மிகப் பெரிய நம்பிக்கையை ஊட்டும் வகையிலேயே உள்ளது. அதாவது, சீக்கிரமே இந்த பைக் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அது எப்போது என்பதுதான் இன்றளவும் யாரும் அறியாத தகவலாக உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே சமீபத்தில் யமஹா நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவர் ஈஷின் சிஹானா, யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் பற்றிய முக்கிய விபரங்களை வெளியிட்டார்.

"நிறுவனம் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால், அதில் சில சிக்கல்களை தாங்கள் சந்தித்து வருவதாகவுமே" அவர் கூறியிருந்தார். ஆகையால், யமஹா ஆர்எக்ஸ் 100 விற்பனைக்கு வருமா என்பதே சந்தேகமாகி உள்ளது. இருப்பினும், இந்தியர்கள் தங்களின் ஆர்எக்ஸ் 100 பைக்கின் எதிர்பார்ப்பிற்கு முற்று புள்ளி வைக்கவில்லை.

Yamaha files patents for rw model

Source: motorcycle.com இப்போதும் பலர் இந்த வாகனத்தின் வருகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே கூடுதல் போனஸாக யமஹா நிறுவனம், ஆர்டபிள்யூ (RW) மாடலுக்கான பேடண்ட் (Patent) உரிமத்தைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய சந்தையிலேயே அது இந்த வேலையைப் பார்த்திருக்கின்றது.

இது ஓர் நீண்ட வரிசையைக் கொண்ட சீரிஸ் ஆகும். அதாவது, இதன்கீழ் எண்ணற்ற மாடல்களை யமஹா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அது ஆர்டபிள்யூ 125 (RW125), ஆர்டபிள்யூ 155 (RW155), ஆர்டபிள்யூ 250 (RW250), ஆர்டபிள்யூ 350 (RW350) மற்றும் ஆர்டபிள்யூ 700 (RW700) ஆகியவற்றிற்கான பேடண்ட் உரிமத்தையே அது பெற்றிருக்கின்றது.

மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர், மொபட், மூன்று சக்கரங்கள் கொண்ட பைக், மூன்று சக்கரங்கள் கொண்ட ஸ்கூட்டர் மற்றும் மூன்று சக்கரங்கள் கொண்ட மொபட் உள்ளிட்ட வாகனங்களையே ஆர்டபிள்யூ சீரிஸின் கீழ் யமஹா விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகக் கூறப்படுகின்றது. மேலும், இதில் சில ரெட்ரோ ஸ்டைலைக் கொண்ட டூ-வீலரும் அடங்கும் என கூறப்படுகின்றது.

இப்போதைய நிலவரப்படி 'ஆர்' சீரிஸின்கீழ் ஸ்போர்ட்ஸ் வகை பைக்குகளையும், 'எம்டி' எனும் சீரிஸின்கீழ் நேக்கட் வகை பைக்குகளையே யமஹா நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எனவேதான் ஆர்டபிள்யூ சீரிஸின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் சில பைக் மாடல்கள் தனித்துவமான இருக்கும் என நம்பப்படுகின்றது.

ஆனால், இது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படுமா என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. அதேசமயம், இந்தியர்கள் மத்தியில் ரெட்ரோ லுக் கொண்ட டூ-வீலர்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாக ராயல் என்பீல்டு போன்ற நிறுவனங்கள் உள்ளன. நிறுவனத்தின் ரெட்ரோ ஸ்டைல் கொண்ட வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்பு நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதேபோல், ஹோண்டா மற்றும் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் இந்தியாவின் ரெட்ரோ ஸ்டைல் டூ-வீலர் தாகத்தை தீர்க்கும் விதமாக தன்னுடைய தயாரிப்புகளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே இவர்களின் வரிசையில் இணையும் விதமாக யமஹா நிறுவனம் ஆர்டபிள்யூ வரிசையில் ஏதேனும் சில மாடல்களை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆர்எக்ஸ் போலவே ஆர்டி என்பதும் இந்தியர்களின் பிரியமான யமஹா தயாரிப்பாகக் கடந்த காலங்களில் இருந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதுமட்டுமல்ல ஆர்இசட் எனும் சீரிஸிலும் யமஹா நிறுவனம் நாட்டில் குறிப்பிட்ட சில பைக் மாடல்களை விற்பனைக்கு வழங்கி இருக்கின்றது. ஆகையால், இந்தியர்களைக் கவரும் நோக்கில் மீண்டும் 'ஆர்' என தொடங்கும், அதாவது, ஆர்டபிள்யூ மாடலை யமஹா இந்தியாவிலும் களமிறக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிறுவனத்தின் இப்போதைய செயலின் வாயிலாக ஆர்டபிள்யூ வகை மோட்டார்சைக்கிள் முதலில் ஐரோப்பிய சந்தையிலேயே அறிமுகமாகும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி நிறுவனம் ஸ்கூட்டர், ஸ்போர்ட்ஸ் பைக் மற்றும் நேக்கட் லுக் பைக் ஆகியவற்றையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுதவிர ப்ளூ ஸ்கொயர் ஷோரூம் வாயிலாக பிரீமியம் தர தயாரிப்புகள் சிலவற்றையும் யமஹா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, August 16, 2024, 22:30 [IST]
English summary
Yamaha files patents for the rw model series here is more details
மேலும்... #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+