பைக்கோட விலை ரூ.1.5 லட்சம் மட்டும்தான்... யமஹாவில் இளைஞர்கள் நம்பி வாங்கும் பைக், புதிய அப்டேட்டில் அறிமுகம்!!
யமஹா (Yamaha) நிறுவனம் அதன் எஃப்.இசட்-எஸ் ஃப்யுல்-இன்ஜெக்டட் (FZ-S Fi) மோட்டார்சைக்கிளில் புதியதாக 4.0 டீலக்ஸ் வெர்சனை புதிய பெயிண்ட் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய யமஹா எஃப்.இசட்-எஸ் எஃப்.ஐ மோட்டார்சைக்கிளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் இளம் தலைமுறையினர் மிகவும் விரும்பி வாங்கும் மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றாக எஃப்.இசட்-எஸ் எஃப்.ஐ விளங்குகிறது. இதன் காரணமாகவே, இந்த மோட்டார்சைக்கிளை அவ்வப்போது யமஹா நிறுவனம் அப்டேட் செய்துவிடுகிறது. இந்த வகையில் தற்போது எஃப்.இசட்-எஸ் பைக்கில் புதியதாக 4.0 டீலக்ஸ் வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அப்டேட்களின்படி, ஐஸ் ஃப்ளூ-வெர்மிலியன் மற்றும் சைபர் கிரீன் என்கிற இரு பெயிண்ட் ஆப்ஷன்கள் யமஹா எஃப்.இசட்-எஸ் எஃப்.ஐ மோட்டார்சைக்கிளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த பெயிண்ட் ஆப்ஷன்களில் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற 2024 பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ கண்காட்சியில் யமஹா எஃப்.இசட்-எஸ் எஃப்.ஐ பைக் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
ஐஸ் ஃப்ளூ-வெர்மிலியன் பெயிண்ட்டில் எஃப்.இசட்-எஸ் எஃப்.ஐ பைக்கின் பெட்ரோல் டேங்க் வெள்ளை நிறத்திலும், அதன்மீது கருப்பு மற்றும் ஆரஞ்ச் நிறங்களில் ஸ்டிக்கர்களும் கிடைக்கும். இதற்கு ஏற்றப்படி, பைக்கின் சக்கரங்கள் டார்க் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கும். இதனால், இந்த பெயிண்ட் ஆப்ஷனில் எஃப்.இசட்-எஸ் எஃப்.ஐ பைக்கை பார்க்கும்போது உங்களுக்கு யமஹா எம்டி-15 பைக் ஞாபகத்திற்கு வரலாம்.

சைபர் க்ரீன் பெயிண்ட் ஆப்ஷனில் பைக்கின் சக்கர ரிம்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் கிடைக்கும். இதே மஞ்சள் நிறத்தை இந்த பெயிண்ட் ஆப்ஷனில் பைக்கின் பெட்ரோல் டேங்கிலும் காணலாம். ஆனால், சைபர் க்ரீன் பெயிண்ட் ஆப்ஷனில் பைக் முழுவதுமாக இராணுவ பச்சை நிறத்தில் கிடைக்கும். இந்த புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் யமஹா எஃப்.இசட்-எஸ் பைக்கை மேலும் புத்துணர்ச்சியானதாக காட்டுகின்றன.
இந்த புதிய பெயிண்ட் ஆப்ஷன்களுடன் சேர்த்து, இனி யமஹா எஃப்.இசட்-எஸ் எஃப்.ஐ பைக்கை மொத்தம் 6 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் வாங்கலாம். மற்ற 4 பெயிண்ட் ஆப்ஷன்களாவன, மெஜெஸ்டிக் சிவப்பு, ரேசிங் நீலம், மேட் கருப்பு மற்றும் மேட் கிரே என்பன ஆகும். புதிய பெயிண்ட் ஆப்ஷன்களை தவிர்த்து, புதிய எஃப்.இசட்-எஸ் எஃப்.ஐ பைக்கில் வேறெந்த அப்டேட்டும் கிடையாது.

எஃப்.இசட்-எஸ் ஃப்யுல்-இன்ஜெக்டட் பைக்கில் 149சிசி, ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 7,250 ஆர்பிஎம்-இல் 12.4 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 13.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. யமஹா எஃப்.இசட்-எஸ் எஃப்.ஐ பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.29 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக்கின் விற்பனையை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டுமெனில், இவ்வாறான அப்டேட்கள் அவ்வப்போது தேவைப்படுகின்றன. இந்தியாவில் யமஹாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் இரு சக்கர வாகனமாக எஃப்.இசட்-எஸ் விளங்குகிறது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக இந்த பைக்கின் விற்பனை குறைய துவங்கியதை அடுத்து, இந்த அப்டேட்டை யமஹா வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications









