யமஹா பைக் வாங்கினால் ஸ்மார்ட் வாட்ச் இலவசம்!! அட... பைக்கின் விலை இவ்வளவுதானா? வாரி வழங்கும் யமஹா!

யமஹா (Yamaha) நிறுவனம் அதன் எஃப்.இசட்-எக்ஸ் (FZ-X) பைக்கில் புதிய க்ரோம் மற்றும் மெட்டாலிக் பிளாக் எடிசன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எஃப்.இசட் பைக்குகளை பற்றியும், இந்த பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு யமஹா நிறுவனம் வழங்கவுள்ள பரிசு பொருளை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜப்பானை சேர்ந்த யமஹா இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யும் மோட்டார்சைக்கிள் எஃப்.இசட் ஆகும். யமஹா எஃப்.இசட் பைக்குகள் 150சிசி என்ஜின் உடன் பல்வேறு விதமான ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றுதான், எஃப்.இசட்-எக்ஸ் ஆகும். மற்ற எஃப்.இசட் பைக்குகளுடன் ஒப்பிடுகையில், எஃப்.இசட்-எக்ஸ் தோற்றத்தில் சற்று வித்தியாசமானதாக விளங்குகிறது.

yamaha fz-x chrome edition launched

சில வருடங்களுக்கு முன்னர்தான், யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பைக் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஃப்.இசட் பைக்கிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், எஃப்.இசட்-எக்ஸ் பைக்கின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக இந்த பைக்கில் புதிய க்ரோம் மற்றும் மெட்டாலிக் பிளாக் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

புதிய யமஹா எஃப்.இசட்-எக்ஸ் க்ரோம் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.40 லட்சமாகவும், மெட்டாலிக் பிளாக் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,36,200 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள எஃப்.இசட்-எக்ஸ் க்ரோம் மற்றும் மெட்டாலிக் பிளாக் எடிசன் பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு பொருளையும் வழங்க யமஹா திட்டமிட்டுள்ளது.

yamaha fz-x chrome edition launched

கேசியோ ஜி-ஷாக் (Casio G-Shock) வாட்ச் அந்த பரிசு பொருள் ஆகும். ஆனால், இந்த பைக்குகளை வாங்கும் முதல் 100 கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த பரிசு பொருளை வழங்க யமஹா முடிவெடுத்துள்ளது. புதிய எஃப்.இசட்-எக்ஸ் பைக்கின் இந்த ஸ்பெஷல் எடிசன்களை கஸ்டமர்ஸ் டெலிவிரி எடுக்கும்போது, பரிசு பொருளான வாட்ச்சையும் வழங்க யமஹா திட்டமிட்டுள்ளது.

புதிய யமஹா எஃப்.இசட்-எக்ஸ் க்ரோம் மற்றும் மெட்டாலிக் பிளாக் எடிசன்களை பொருத்தவரையில், புதிய பெயிண்ட் ஆப்ஷனை தவிர்த்து பைக்கில் வேறெந்த மாற்றமும் இல்லை. எஃப்.இசட்-எக்ஸ் பைக்கில் 149சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை யமஹா நிறுவனம் பொருத்துகிறது. அதிகப்பட்சமாக 12.4 எச்பி மற்றும் 13.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

yamaha fz-x chrome edition launched

எஃப்.இசட்-எக்ஸ், ஓர் மாடர்ன் யமஹா பைக் ஆகும். இந்த பைக்கில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ரியர் டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ், மல்டி-ஃபங்க்சன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வட்ட வடிவில் எல்இடி ஹெட்லைட், ரியர் மட்கார்ட், தாழ்வான என்ஜின் கார்ட் மற்றும் ப்ளூடூத்-சார்ந்த Y-கனெக்ட் செயலி உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

சஸ்பென்ஷனுக்கு இந்த பைக்கில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 7-ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோகிராஸும் வழங்கப்படுகின்றன. பிரேக் பணியை கவனிக்க முன் சக்கரத்தில் 282மிமீ-இலும், பின் சக்கரத்தில் 220மிமீ-இலும் சிங்கிள் டிஸ்க் பொருத்தப்படுகின்றன. யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பைக் எத்தனால் 20% கலக்கப்பட்ட பெட்ரோலை ஏற்கக்கூடியது என பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போவில் யமஹா தெரிவித்து இருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப்-10 பைக்குகளுள் ஒன்றாக யமஹா எஃப்.இசட் உள்ளதாக ஏற்கனவே கூறிவிட்டோம். இந்த நிலையை மேலும் தொடர இவ்வாறான புது அப்டேட்கள் அவசியமாகின்றன. இருப்பினும், பைக்கை வாங்குபவர்களுக்கு இலவசமாக கேசியோ ஜி-ஷாக் வாட்ச் பரிசாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருப்பது உண்மையில் ஆச்சிரியமான விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 7, 2024, 18:57 [IST]
English summary
Yamaha fz x chrome edition launched special incentive announced
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X