தாய் நாட்டில் முன்னணி பைக் மாடல்களின் உற்பத்தியை நிறுத்திய யமஹா.. இந்தியாவிலும் இதன் எதிரொலி பாதிக்குமா?

உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் யமஹா (Yamaha)-வும் ஒன்று. இந்த நிறுவனத்தின் பிறந்த வீடு (தாய் நாடு) ஜப்பான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இங்கேயே சில முன்னணி இரண்டு சக்கர வாகன மாடல்களின் உற்பத்தியை யமஹா நிறுவனம் நிறுத்தி இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த பைக் மாடல்கள் என்ன? அவற்றின் உற்பத்தி நிறுத்தத்திற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? மற்றும் இதனால் இந்தியாவில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்கிற விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

யமஹா நிறுவனம் அதன் புகழ்பெற்ற பைக் மாடல்களான ஒய்இசட் ஆர்1 (YZF R1), ஒய்இசட்எஃப் ஆர்3 (YZF R3) மற்றும் டிமேக்ஸ் (Tmax) ஆகியவற்றின் உற்பத்தி பணியையே ஜப்பானில் நிறுத்தி உள்ளது. இவற்றிற்கு ஜப்பானியர்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்பு உண்டு. இருப்பினும், அதன் உற்பத்தி பணிகளை யமஹா நிறுத்தி இருக்கின்றது.

Yamaha halts production of r1 and r3

இந்த முடிவுக்கு பின்னால் முறையற்ற தரவு சமர்பிப்பே காரணம் என கூறப்படுகின்றது. அதாவது, ஜப்பானில் வாகன இரைச்சல் சோதனை விஷயத்தில் தவறான தரவுகளை தயார் செய்து யமஹா நிறுவனம் சமர்ப்பித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட சிக்கலின் விளைவாகவே ஜப்பானில் இந்த பைக்கின் உற்பத்தி தற்போது நிறுத்தப்பட்டு இருக்கின்றது.

விரைவில் விதிகளுக்கு உட்பட்டு தரக்கட்டுப்பாடுகள் மேம்படுத்தப்பட்டு அந்த பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், ஜப்பானில் மட்டுமே விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. சர்வதேச சந்தைகள் அதன் உற்பத்தி மற்றும் விற்பனையில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தியாவில்கூட இப்போதும் யமஹா ஆர்3 விற்பனையில் உள்ளது.

நீங்கள் இந்த பைக்கை வாங்க விரும்பினால், தாராளமாக அருகாமையில் உள்ள யமஹா டீலர்ஷிப்பில் அந்த பைக்கை வாங்கிக் கொள்ள முடியும். இந்தியாவில் இந்த பைக் தற்போது 4 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் மட்டுமே ஆகும்.

இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள கேடிஎம் ஆர்சி 390 (KTM RC 390), அப்ரில்லா ஆர்எஸ் 457 (Aprilia RS 457) மற்றும் கவாஸாகி நிஞ்சா 500 (Kawasaki Ninja 500) ஆகிய மாடல் பைக்குகளுக்கு போட்டியளிக்கும் விதமாக யமஹா ஆர்3 விற்பனையில் உள்ளது.

அதேவேளையில், கேடிஎம் ஆர்சி 390 பைக்கானது யமஹா ஆர்3-ஐ விட குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், நிஞ்ஜா 500 பைக் ஆர்3-யைவிட அதிக திறனை வெளியேற்றக் கூடியதாக உள்ளது. இருப்பினும் இவர்களுக்கு மிகப் பெரிய சவாலை யமஹாவின் தயாரிப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆனால், இந்தியாவில் யமஹா ஆர்1 விற்பனைச் செய்யப்படவில்லை. இருப்பினும், ஆர்3 அது இல்லாத காலி இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றது. மிக திறன் வெளிப்பாட்டை வழங்கக் கூடிய பைக் மாடலாக அது காட்சியளிக்கின்றது. இத்தகைய பைக்கையே சில முறைகேடால் ஜப்பானியர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

ஆனால் இந்த சூழல் இந்திய சந்தையை பாதிக்கவில்லை. இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கான வரவேற்பு மிகப் பெரிய வளர்ச்சியடைந்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாகவே சந்தையில் யமஹா ஆர்3, கேடிஎம் ஆர்சி 390 மற்றும் கவாஸாகி நிஞ்சா 500 போன்ற அதிக திறனை வெளியேற்றக் கூடிய பைக்குகள் விற்பனைக்குக் களமிறங்கிக் கொண்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆர்15, எஃப்இசட் மற்றும் எம்டி15 ஆகிய பைக் மாடல்களுக்கு மிக மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், ஆர்3 மாடலுக்கு ஸ்போர்ட்ஸ் பைக் மற்றும் அதிக திறன் வெளிப்பாட்டை விரும்புவோர் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய பைக் தொடர்ந்து விற்பனைக்குக் கிடைக்கும் என்பது அவர்களுக்கு நிம்மதியை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 20, 2024, 11:30 [IST]
English summary
Yamaha halts r1 r3 production due to noise testing issues
மேலும்... #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+