இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்யும் ஜப்பான் நிறுவனம்.. யாரு நம்ம யமஹாவா இத்தன கோடி ரூபாய கொட்டியிருக்கு!!

ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கும் இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா yamaha, இந்தியா நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ய முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எந்த நிறுவனம்? அந்த நிறுவனம் என்ன மாதிரியான வாகனங்களை தயாரித்துக் கொண்டிருக்கின்றது? எவ்வளவு ரூபாய் முதலீடு செய்ய இருக்கின்றது? இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ரிவர் (River). இது ஓர் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்திலேயே யமஹா (Yamaha) தற்போது முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை அது முதலீடு செய்திருக்கின்றது.

River indie

சீரிஸ் பி நிதி வாயிலாகவே இந்த அளவு பெரும் தொகை முதலீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்திய மதிப்பில் ரூ. 332.23 கோடி முதலீட்டையே இந்திய நிறுவனத்தின் மீது ஜப்பான் நிறுவனமான யமஹா செய்திருக்கின்றது. இதுதவிர, ஏஐ ஃபுட்டியம் குழுமம் போன்ற நிறுவனங்களும் இந்த நிறுவனத்தின்மீது முதலீடு செய்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இப்போதைய நிலவரப்படி ரிவர் நிறுவனம் ஒரே ஒரு தயாரிப்பை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. இந்த வாகனத்தை சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே அதிகாரப்பூர்வமாக அது அறிமுகப்படுத்தியது. இன்டீ (Indie) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை (Electric Scooter)-யே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

Yamaha invests bengaluru based ev maker river

இதுவே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் டூ-வீலர் ஆகும். இரண்டு சக்கர வாகன உலகின் எஸ்யூவி ரகம் என கூறும் அளவிற்கு இந்த இன்டீ பெரிய தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது. இந்த உருவாத்தாலேயே பலரின் கவனத்தையும் அந்த வாகனம் கவர்ந்திருக்கின்றது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படுகின்றது.

பெங்களூருவிலேயே அதன் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே திட்ட விரிவாக்கம், வாகன உற்பத்தி மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கை அதிகரிக்கச் செய்ய என பல்வேறு திட்டங்களுக்காக 68 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை இந்த நிறுவனம் கோரியிருந்தது. இந்த நிலையிலேயே முன்னணி நிறுவனங்கள் ரிவர் மீது தங்களது முதலீட்டை மேற்கொண்டு வருகின்றன.

Yamaha invests in river

நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ரிவர் இன்டீ ஏற்கனவே கூறியதைப் போலவே அதிக ஸ்டோரேஜ் மற்றும் இட வசதியைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. இந்த வாகனத்தின் ஒட்டுமொத்த ஸ்டோரேஜ் 55 லிட்டர் ஆகும். இருக்கைக்கு அடியில் 43 லிட்டர் பொருளையும், குளோவ் பாக்ஸ் 12 லிட்டர் பொருளையும் வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1.25 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் 120 கிமீ தூரம் பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 4 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

மோட்டாரை பொருத்த வரை 6.7 kWh திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 26 என்எம் டார்க்கை வெளியேற்றும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும். இத்துடன், வெறும் 3.9 செகண்டுகளிலேயே 0-40 கிமீ வேகத்தை எட்டும் திறனையும் இந்த வாகனம் கொண்டிருக்கின்றது.

இந்த அதிக வேகத்தை விரைந்துக் கட்டுப்படுத்தும் விதமாக 240 மிமீ டிஸ்க் பிரேக் முன் பக்க வீலிலும், 200 மிமீ டிஸ்க் பின் பக்க வீலிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், மிக சிறந்த சஸ்பென்ஷன் செட்-அப்பிற்காக இந்த வாகனத்தின் முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக்கும், பின் பக்கத்தில் ட்வின் ஹைட்ராலிக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக ரிவர் இன்டீ இருக்கின்றது. இதன் டெலிவரி பணிகள் சமீபத்திலேயே தொடங்கின. இந்த நிலையிலேயே பணியையும், சர்வீஸ் மையங்களை விரிவாக்கம் செய்யும் நோக்கிலும் தற்போது முதலீட்டை ஈர்த்துக் கொண்டிருக்கின்றது ரிவர் நிறுவனம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 7, 2024, 11:51 [IST]
English summary
Yamaha invests bengaluru based ev maker river here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X