லிட்டருக்கு 57 கிமீ மைலேஜ் வழங்கும் யமஹா பைக்கின் விலை இவ்ளோதானா! மொத்த கூட்டமும் ஷோரூம்லதான் இருக்கு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று யமஹா எம்டி15 (Yamaha MT15). இந்த பைக்கின் ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report)வெளியாகியுள்ளது. இதன்படி யமஹா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 15,124 எம்டி15 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 8,738 ஆக மட்டுமே இருந்தது. இது 73.08 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட யமஹா பைக் என்ற பெருமையையும் எம்டி15 பெற்றுள்ளது.

Yamaha MT15

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் யமஹா எம்டி15 பைக்கின் ஆரம்ப விலை 1.69 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1.74 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது குறிப்பிடத்தக்கது.

செயல்திறனை பொறுத்தவரையில் யமஹா எம்டி15 பைக்கில், 155 சிசி லிக்யூட் கூல்டு 4 வால்வு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 18.4 பிஎஸ் பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் அஸிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Yamaha MT15 Side Profile

பிரேக்கிங்கை பொறுத்தவரையில் முன் பகுதியில் 282 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர மல்டி-ஃபங்ஷன் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் யமஹா ஒய்-கனெக்ட் செயலி ஆகிய ஆப்ஷன்களும் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன.

டார்க் மேட் ப்ளூ, மெட்டாலிக் பிளாக், சியான் ஸ்ட்ரோம் டிஎல்எக்ஸ், ஐஸ் ப்ளூயோ-வெர்மில்லியன் டிஎல்எக்ஸ், ரேசிங் ப்ளூ டிஎல்எக்ஸ் மற்றும் மெட்டாலிக் பிளாக் டிஎல்எக்ஸ் ஆகிய கலர் ஆப்ஷன்களில் யமஹா எம்டி15 பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோஜிபி எடிசனும் விற்பனையில் உள்ளது.

இந்த பைக்கின் இன்ஜின் உடன் இணைக்கப்பட்டிருப்பது, 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஆகும். அதே நேரத்தில் இந்த பைக்கில் 10 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இ20 எரிபொருளில் (E20 Fuel) இயங்க கூடிய தன்மையும் இந்த பைக்கிற்கு உண்டு. இந்த எரிபொருள் உமிழ்வை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: யமஹா எம்டி15 பைக் ஒரு லிட்டருக்கு 56.87 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்படும் யமஹா பைக்காக எம்டி15 இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 27, 2024, 22:59 [IST]
English summary
Yamaha mt15 sales report january 2024 all details here
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+