இந்த பொண்ணு உட்காந்திருக்கற வண்டிதான் வேணும்னு பசங்கலாம் வீட்ல அடம் பிடிக்க போறாங்க! காரணம் இருக்கு!

இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கு என்றே தனி வாடிக்கையாளர்கள் கூட்டம் உள்ளது. அவர்கள் எல்லாம் பைக்குகளை பெரிதாக விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான ஸ்கூட்டர்கள் வழக்கமான வடிவமைப்பை கொண்டவையாக உள்ளன. இந்த வழக்கமான ஸ்கூட்டர்களில் இருந்து மேக்ஸி ஸ்கூட்டர்கள் வேறுபட்டவை. மேக்ஸி ரக ஸ்கூட்டர்கள், வழக்கமான ஸ்கூட்டர்களை விட உருவத்தில் பெரிதாக இருக்கும். இவை ரைடர்களுக்கு சௌகரியமான பயணத்தை வழங்க கூடியவை. இன்னும் தெளிவாக சொல்வதென்றால், தொலை தூர பயணங்களையும் ஸ்கூட்டரில்தான் மேற்கொள்வேன் என்பவர்களுக்கு இவை ஏற்றதாக இருக்கும்.

ஆம், மேக்ஸி ரக ஸ்கூட்டர்களில், பைக்குகளை போலவே, தொலை தூர பயணங்களையும் எளிதாக மேற்கொள்ளலாம். அவ்வளவு எளிதில் சோர்வு ஏற்படாது. பயணம் இனிமையாக இருக்கும். ஆனால் இந்தியாவில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே மேக்ஸி ரக ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன.

Yamaha Nmax 155

இதில், யமஹா (Yamaha) ஒன்றாகும். யமஹா ஏரோக்ஸ் 155 (Yamaha Aerox 155) என்ற மேக்ஸி ஸ்கூட்டரை அந்நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. இதற்கு மேக்ஸி ஸ்கூட்டர் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், மேலும் ஒரு புதிய மேக்ஸி ரக ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய யமஹா நிறுவனம் தயாராகி வருகிறது.

அது யமஹா என்மேக்ஸ் 155 (Yamaha Nmax 155) ஆகும். நடப்பாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற 2024 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ (2024 Bharat Mobility Global Expo) வாகன திருவிழாவிலேயே, இந்த மேக்ஸி ஸ்கூட்டர் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து தற்போது இந்த ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய யமஹா தயாராகி வருகிறது.

Yamaha Nmax 155 Side Design

அனேகமாக 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் யமஹா என்மேக்ஸ் 155 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்னும் சில வாரங்களிலேயே கூட இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த தகவல்களை யமஹா நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை. எனவே யமஹா என்மேக்ஸ் 155 ஸ்கூட்டர் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியாமல் உள்ளது. எனினும் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள், இந்த ஸ்கூட்டருக்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யமஹா என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரில், 155 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூட் கூல்டு இன்ஜின் வழங்கப்படவுள்ளது. யமஹா ஏரோக்ஸ் 155, யமஹா ஆர்15 வி4 (Yamaha R15 V4) மற்றும் யமஹா எம்டி-15 (Yamaha MT-15) ஆகிய வாகனங்களிலும் இதே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

யமஹா என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரில் இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 14.9 பிஹெச்பி மற்றும் 13.5 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சௌகரியமான பயணத்தை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, யமஹா என்மேக்ஸ் 155 மேக்ஸி ஸ்கூட்டர் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் 1.60 - 1.70 லட்ச ரூபாய் என்ற விலையில் யமஹா என்மேக்ஸ் 155 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், அதிகாரப்பூர்வமான விலை தெரியவரும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 24, 2024, 22:56 [IST]
English summary
Yamaha nmax 155 india launch nears full details here
மேலும்... #yamaha #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+