கேர்ள் ஃபிரண்ட நம்பறதுக்கு பதிலா இந்த பைக்க நம்பலாம்! எந்த பக்கம் போகணும்னு சரியா சொல்லும்! விலையும் இவ்ளோதானா
டூ-வீலரில் பயணிக்கும்போது கேர்ள் ஃபிரண்டுக்கும், ஆண் நண்பருக்கும் இடையில் பிரச்னை வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணமே இந்த மேப் (Map) செயலியாகதான் இருக்கும். அது காண்பிக்கும் ரூட்டை சரியாக கேர்ல் ஃபிரண்டிடம் இருந்து பெறுவதற்குள் ஓர் போராட்டமே நடைபெற்றுவிடும். மேப் வருகின்ற வலது பக்கம் திரும்பும்படி காண்பித்தால், அந்த திருப்பம் கடந்த பின்னால், "இந்த பக்கம்தான் திரும்பனும், நீ தாண்டி போயிட்ட" என்கிற குறல் பின்னால் இருந்து வரும். இதனாலேயே பல ஜோடிகளுக்கு சண்டையும், வாக்குவாதமும் வந்திருக்கின்றன.
மேலும், தவறான வழிநடத்தலால் பாதை மாறி போனவர்கள் மற்றும் இன்னும் பல கிமீ தூரம் சென்று மீண்டும் அதே பாதைக்கு வந்து சரியாக திரும்பி சென்ற வாகன ஓட்டிகளும் பலர் இங்கே இருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலை தவிர்க்கும் பொருட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட ஓர் தொழில்நுட்பமே திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை சொல்லும் நேவிகேஷன் வசதி.

இந்த வசதியுடனேயே யமஹா (Yamaha) நிறுவனம் அதன் ஆர்15எம் (R15M) பைக் மாடலை நாட்டில் விற்பனைக்கு களமிறக்கி இருக்கின்றது. மேலும், இதனை கார்பன் ஃபைபர் பேட்டர்னில் அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. நிறுவனத்தின் ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக ஆர்15எம் காட்சியளிக்கின்றது.
இதை தன்னுடைய மற்றுமொரு புகழ்பெற்ற தயாரிப்பான ஆர்1எம் மாடலை தழுவியே யமஹா நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆர்1எம் இந்த பைக்கை பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ-வில் யமஹா நிறுவனம் காட்சிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, கிராஃபிக் மற்றும் கார்பன் ஃபைபர் பேட்டர்ன் ஆகியவை இந்த உயர் தர பைக் மாடலில் இருந்தே பெறப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், துல்லியமான பெயிண்ட் ஃபினிஷிங்கிற்காக வாட்டர்-டிப்பிங் எனும் தொழில்நுட்பத்தை அவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த பைக்கின் ஸ்போர்ட்டி தோற்றத்திற்கு கூடுதல் கவர்ச்சியைக் கொடுக்கும் விதமாக கருப்பு நிற ஃபெண்டர், ஃப்யூவல் டேங்க்-இன் மேல் புதிய வகை ஸ்டிக்கர்கள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், சக்கரங்களுக்கு நீல நிறம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இவையே புதிய ஆர்15எம்-க்கு அதிக கவர்ச்சியான மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்கும் வகையில் உள்ளன. இவற்றுடனேயே இன்றைய கால இளைஞர்களைக் கவரும் பொருட்டு திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன், மியூசிக் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த அம்சங்கள் நிறுவனத்தின் ஒய்-கன்னெக்ட் வாயிலாக வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐ-ஓஎஸ் என இரண்டிலும் இந்த செயலியை பெற்றுக் கொள்ள முடியும். இந்த அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகளுடன் சேர்த்து யமஹா நிறுவனம் இந்த பைக்கின் சுவிட்ச்கியர் அப்டேட் செய்திருக்கின்றது.
தொடர்ந்து, புதிய எல்இடி லைட் போன்றவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. எஞ்சினைப் பொருத்த வரை யமஹா ஆர்15எம் பைக்கில் 155 சிசி திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் லிக்யூடு கூல்டு ஃப்யூவல் இன்ஜெக்ட் வசதிக் கொண்ட மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனத்தைச் செய்யும் திறன் கொண்டது. அத்தோடு 10,000 ஆர்பிஎம்-இல் 18.1 எச்பி-யையும், 7,500 ஆர்பிஎம்-இல் 14.2 என்எம் டார்க்கையும் அது வெளியேற்றும். இதன் மோட்டாரில் கூடுதல் சிறப்பாக விவிஏ (VVA) தொழில்நுட்பம் கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் / அசிஸ்ட் கிளட்ச் வசதிக் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இவற்றுடன் மிக முக்கியமான அம்சமாக இந்த பைக்கில் முழுமையான டிஜிட்டல் வசதிக் கொண்ட வண்ண டிஎஃப்டி (TFT) திரை ஒன்று வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் குயிக்-ஷிஃப்டர் ஆகியவை புதிய ஆர்15எம் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த பைக் நிறுவனத்தின் பிரீமியம் தர வாகனங்களுக்கான ஷோரூமான யமஹா ப்ளூ ஸ்கொயர் வாயிலாகவே விற்பனைக்குக் கிடைக்கும். அறிமுக விலையாக ரூ. 2.08 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த பைக் மாடலின் வழக்கமான வேரியண்ட் ரூ. 1.98 லட்சத்திற்கே விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களைக் கவரும் பொருட்டே யமஹா நிறுவனம் ஆர்15எம் பைக் மாடலை கார்பன் ஃபைபர் பேட்டர்னிலும், திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வசதியுடனும் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








