யமஹா ஆர்டி 350 பைக்கை இப்படி கூட மாற்றலாமா? ரொம்ப கூப்பரா மாடிஃபிகேஷன் பண்ணிட்டாங்க!
யமஹா நிறுவனத்தின் ஆர்டி 350 என்ற பைக் பிரபலமான பைக்காக இருக்கிறது. இந்த பைக்கை வைத்திருக்கும் பலர் இதை தனது பெருமையான பைக்காக வைத்திருக்கிறார்கள். இந்த பைக்கை பலர் மாடிஃபிகேஷன் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பைக்கை மாடிஃபிகேஷன் செய்யும்போது அது இந்த பைக்குக்கு சிறப்பான நுக்கையும் அதே நேரம் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் செய்யும் வழங்குகிறது.
இப்படியாக பெங்களூருவைச் சேர்ந்த என்எம்டபிள்யூ ரேஸிங் என்ற நிறுவனம் யமஹா ஆர்டி 350 பைக் ஒன்றை வித்தியாசமாக மாடிஃபிகேஷன் செய்துள்ளது. இது இதில் இந்த பைக்கின் லுக் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் எல்லாம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஸ்போர்ட்டி லுக்காக இந்த பைக் காட்சியளிக்கிறது. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களை நாங்கள் வீடியோவாக வெளியிட்டுள்ளோம் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த பைக்கின் முன் பக்கம் டுகாட்டி பைக் போல ஹெட்லைட் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் சஸ்பென்ஷன் சிஸ்டத்திற்காக யூஎஸ்டி ஃபோர்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள டிஸ்க் பிரேக் வித்தியாசமான வடிவமைப்பில் இருக்கிறது. டயர்களை பொருத்தவரை அப்பல்லோ நிறுவனத்தின் டயர்கள் இரு வீல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன.

இதுபோக அலாய் வீல்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கின் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சிறப்பு அம்சமே இதில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸாஸ்ட் சிஸ்டம் தான். இந்த பைக்கின் எக்ஸாஸ்ட் சிஸ்டம் பின்பக்கம் மேல் பகுதியில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பைக்கில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும்.


Click it and Unblock the Notifications








