யமஹா ஆர்எக்ஸ்100 விற்பனைக்கு வரும்ன்ற கனவுல இருக்கீங்களா.. நிறுவனம் பெருத்த இடியை இறக்கியிருக்கு..

நூற்றுக் கணக்கான இரண்டு சக்கர வாகனங்கள் (பைக் மற்றும் ஸ்கூட்டர்கள்) இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், இந்திய இரண்டு சக்கர வாகன காதலர்கள் பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக யமஹா ஆர்எக்ஸ் 100 (Yamaha RX100) மோட்டார்சைக்கிளின் வருகை உள்ளது. இந்த பைக்கை யமஹா நிறுவனம் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓர் தகவல் வெளியாகியது. இந்த தகவல் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கின் வெறி(பிரி)யர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்தது.

இந்த நிலையிலேயே யமஹா ஆர்எக்ஸ்100 விற்பனைக்கு வருமா என்கிற சந்தேகத்தை கிளப்புகின்ற வகையில் ஓர் தகவல் வெளியாகி உள்ளது. இது அந்த பைக்கை வெறிக்கொண்டு எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அது என்ன என்பது பற்றியே விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Yamaha rx100 launch

இன்றளவும் ஆர்எக்ஸ்100 மோட்டார்சைக்கிள் பிரியர்களின் மிகப் பெரிய தேடலாக அதன் அறிமுக தேதி பற்றிய விபரமே உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கின் உருவாக்கத்தில் மிகப் பெரிய சிக்கலை அந்நிறுவனம் சந்தித்துக் கொண்டிருப்பதாக, யமஹா நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவர் ஈஷின் சிஹானா தெரிவித்துள்ளார்.

அவர், இந்த பைக்கை உருவாக்கும் பணியில் யமஹா ஈடுபட்டுக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தினார். அத்துடன், மறு உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க சவால்கள் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆர்எக்ஸ்100 பைக்கிற்கு மிகப் பெரிய டிமாண்ட் இருப்பதை உணர்ந்தே அதன் முறு உருவாக்கத்தில் நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது.

இந்த பைக்கின் தனித்துவமான ஒலி மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்காகவே பலர் அதை விரும்புகின்றனர். ஆனால், 2 ஸ்ட்ரோக் எஞ்சின் வாயிலாகவே ஒலியும், திறன் வெளிப்பாடும் ஆர்எக்ஸ்100 பைக்கிற்கு கிடைக்கின்றது. ஆனால், இந்த எஞ்சின்கள் அதிகளவு மாசை ஏற்படுத்தும் என்பதால் அதைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

2 ஸ்ட்ரோக் எஞ்சின்களுக்கு பதிலாக தற்போது அனைத்து இரண்டு சக்கர வாகனங்களிலும் சுற்றுச் சூழலுக்கு உகந்த 4 ஸ்ட்ரோக் மோட்டார்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த எஞ்சினால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்குகள் வெளியேற்றும் ஒலியையும், அதீத பிக்-அப் திறனையும் வெளியேற்ற முடியாது.

குறிப்பாக, யமஹா ஆர்எக்ஸ்100-க்கே உரித்தான ஒலியை புதிய ஒன்றில் அப்படியே பிரதியெடுப்பது என்பது சாத்தியமற்றதாக இருப்பதாக நிறுவனம் கருத்து தெரிவித்து இருக்கின்றது. எனவே மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கி, ஆர்எக்ஸ்100 பைக்கை அதன் பாரம்பரியத்துடன் பொருந்தும் வகையில் உருவாக்குவதில் யமஹா மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டு வருவது துள்ளியமாக தெரிய வந்திருக்கின்றது.

ஆகையால். இப்போது உள்ளபடியே, அதாவது, கடந்த காலத்தில் விற்பனையில் இருந்ததைப் போலவே ஆர்எக்ஸ் 100 அதே செயல்திறன் மற்றும் ஒலியெழுப்பும் திறனுடன் வருமா என்பதும் சந்தேகமாகியுள்ளது. 200 சிசி எஞ்சினுடனயே யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது மிக சிறந்த செயல்திறன் வெளிப்படுத்தும். அதேவேளையில், சீரான எடை மற்றும் உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கிய ஒன்றாகவும் இருக்கும். ஆனால், இதை ஆர்எக்ஸ்100 பைக் காதலர்கள் விரும்புவார்களா என்பது சந்தேகமே. அதேநேரத்தில், இப்போது உள்ள அதே ரெட்ரோ தோற்றம் மற்றும் லுக் ஆகியவற்றை இந்த பைக் பெறுவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்பதும் தெரிய வந்திருக்கின்றது. அதே இலகுரக வாகனமாகவே அது இருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடிகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹா நிறுவனம் ஆர்எக்ஸ் 100 பைக்கை உயிர்ப்பிப்பக்கும் அணுகுமுறையில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. அனைத்து அம்சங்களும், அதாவது, ஒலி, செயல்திறன், ஸ்டைலிங் மற்றும் எடை போன்றவற்றை அப்படியே துல்லியமான சமநிலையில் இருக்க வேண்டும் என்பதில் உறுதி இருக்கின்றது. ஆனால், இதுவே அதற்கு மிகப் பெரிய சவாலாக அமைந்திருக்கின்றது. யமஹா ஆர்எக்ஸ் 100 2026ஆம் ஆண்டு அல்லது 2027ஆம் ஆண்டிற்குள் வெளியீட்டைப் பெற்றுவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 19, 2024, 6:00 [IST]
English summary
Yamaha rx100 launch faces challenges what fans need to know
மேலும்... #yamaha #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+