யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!

இன்றைய இந்தியாவில் புதியது, புதியதாக எத்தனை மோட்டார்சைக்கிள்கள் வந்தாலும், யமஹா ஆர்.எக்ஸ்100 (Yamaha RX100) பைக் அளவிற்கு எந்த பைக்கும் இளைஞர்களை கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் விற்பனையில் இருந்த ஆர்.எக்ஸ்100 பைக்குகளை இப்போதும் பரவலாக நிறைய பேர் பயன்படுத்துகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா... ஆர்.எக்ஸ்100 பைக்கை போல், ஆர்.எக்ஸ்135 பைக்கிற்கும் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

இன்னும் சொல்லப்போனால், இன்றைய காலத்தில் ஆர்.எக்ஸ்100 பைக்கை கூட வாங்கிவிடலாம், ஆனால் ஆர்.எக்ஸ்135 பைக் கிடைப்பது மிகவும் அரிதானதாக உள்ளது. அத்தகைய யமஹா ஆர்.எக்ஸ்135 பைக்கை வைத்துள்ள ஒருவர் தனது பைக்கின் என்ஜின் & கியர்பாக்ஸ் செட்-அப்பில் சில மாடிஃபிகேஷன்களை செய்துள்ளார். அதுகுறித்த கூடுதல் விபரங்களை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.

இந்த மாடிஃபிகேஷன் பணிகள் அனைத்தும் பெங்களூரில் உள்ள என்.எம்.டபிள்யூ ரேசிங் என்ற மெக்கானிக் ஷாப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மெக்கானிக் கடையில் செய்யப்பட்ட பல்வேறு பைக் மாடிஃபிகேஷன்களை பற்றி நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். ஆனால், அவை எல்லாவற்றை விடவும் இந்த பைக் மாடிஃபிகேஷன் சுவாரஸ்யமானதாக உள்ளது. ஏனெனில், யமஹா ஆர்.எக்ஸ் பைக்குகள் நம்மில் பெரும்பாலானோருக்கு பிடித்தமான பைக்குகளாக உள்ளன.

yamaha rx135 close ratio gearbox

இந்த மாடிஃபிகேஷனின் அடிப்படை விஷயம், பைக்கின் ஹார்ஸ் பவரை அதிகரிப்பது ஆகும். பைக்கின் கியர்பாக்ஸில் 2 விதமான செட்-அப் உள்ளன. ஒன்று, அகல விகிதம் (Wide Ratio). மற்றொன்று மூடப்பட்ட விகிதம் (Close Ratio). இதில் வைடு ரேஷியோ தான் பொதுவாக எல்லா பைக்குகளிலும் வழங்கப்படுகின்றன. அதுவே, க்ளோஸ் ரேஷியோவை பயன்படுத்தும்போது, கியரை மாற்றும்போது ஏற்படும் ஆற்றல் இழப்புகள் தவிர்க்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 27, 2024, 11:09 [IST]
English summary
Yamaha rx135 close ratio gearbox set up detailing video in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+