125சிசி ஸ்கூட்டர்களை திரும்ப அழைத்த யமஹா! உசுருக்கே ஆபத்து வந்துடும் போல இருக்குதே
யமஹா நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாரித்த 125சிசி ஸ்கூட்டர்களை தற்போது புதிய பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டதால் திரும்ப அழைக்கப்பட்டு அது சரி செய்யப்பட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு ஆண்டுகளாக விற்பனையான ஸ்கூட்டர்களை எல்லாம் திரும்ப அழைத்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
யமஹா நிறுவனம் இந்தியாவில் மிக முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனமாகவும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் தரமானதாக இருக்கும் என்பதால் மக்கள் மத்தியில் இந்த நிறுவனத்திற்கு நல்ல பெயர் இருக்கிறது. தரமான தயாரிப்புகளை விரும்பு மக்கள் பலர் யமஹா நிறுவனத்தின் தயாரிப்புகளை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் யமஹா நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

யமஹா நிறுவனம் 125சிசி செக்மெண்டில் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட 125சிசி ஸ்கூட்டர்களை எல்லாம் யமஹா நிறுவனம் திரும்ப அழைத்துள்ளது. அதன்படி யமஹா ரே இசட்ஆர் 125 எப்ஐ ஹைபிரிட் மற்றும் பேஸினோ 125 எப்ஐ ஹைபிரிட் ஆகிய ஸ்கூட்டர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட இந்த ஸ்கூட்டர்கள் சுமார் மூன்று லட்சம் ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த ஸ்கூட்டர்களில் பிரேக்கிங் லிவர் பங்க்ஷன் குறித்த மிக முக்கியமான பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அனைத்து வாகனங்களிலும் இருக்குமா? இருக்காதா? என்பது தெரியவில்லை. இருந்தாலும் பெரும்பாலான வாகனங்களில் இருக்க வாய்ப்புள்ளதால் எதற்கும் ஒரு முறை அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்காக யமஹா நிறுவனம் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர்களை எல்லாம் மீண்டும் பரிசோதனைக்காக ஷோரூமிற்கு அழைத்துள்ளது. அங்கு குறிப்பிட்ட இந்த சோதனை செய்யப்பட்டு அவர்களது பிரேக் லிவர்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்கிறது.
இந்த காலகட்டத்திற்குள் நீங்கள் யமஹா நிறுவனத்தின் இந்த குறிப்பிட்ட ஸ்கூட்டரை வாங்கி இருந்தால் உடனடியாக நீங்கள் அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு சென்று உங்களது வாகனத்தை சரி செய்து கொள்ளலாம். அல்லது இது குறித்த சந்தேகம் இருந்தால் 1800-420-1600 என்ற டோல் ஃப்ரீ எண்ணிற்கு கால் செய்து உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முடியும்.

நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் யமஹா ஸ்கூட்டர் வாங்கி இருக்கிறீர்கள் ஆனால் உங்கள் ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் ரீகால் செய்துள்ளதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் உடனடியாக யமஹா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.yamaha-motor-india.com/service-recall-sc.html என்ற தளத்திற்கு சென்று அங்கு உங்கள் வாகனத்தின் சேஸிஸ் நம்பரை டைப் செய்தால் போதும் ஆட்டோமேட்டிக்காக உங்கள் வாகனம் ரீகால் செய்யப்பட்டிருந்தால் அது குறித்த தகவல் வரும்.
இப்படியாக மூன்று லட்சம் ஸ்கூட்டர்களையும் யமஹா நிறுவனம் மீண்டும் திரும்ப அழைத்து அதன் பிரேக் லிவர்களை செக் செய்யப் போகிறது. இது மட்டுமல்லாமல் யமஹா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு அவர்களது வாகனத்தை உடனடியாக அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்லும்படியும் கேட்டுக் கொண்டு வருகிறது.
இதனால் நீங்கள் யமஹா நிறுவனத்தின் குறிப்பிட்ட காலத்தை தயாரிக்கப்பட்ட 125சிசி ஸ்கூட்டர்களை வைத்திருந்தால் உடனடியாக சோதனை செய்து கொள்வது நல்லது. அதில் பிரச்சனை இருக்கிறது என்பது கண்டறியப்பட்டதும் நீங்கள் சோதனை செய்தால் தான் நீங்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். யமஹா நிறுவனம் சமீப ஆண்டுகளாக இப்படியான மிகப்பெரிய அளவில் வாகனங்களை திரும்ப அழைத்ததில்லை. இது மிகப் பெரிய விஷயமாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் யமஹா நிறுவனம் தரத்திற்கு பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் தரமாக இருக்கும் என்பதால் மக்கள் நம்பி வாங்கி வரும் நிலையில் இப்படியாக யமஹா நிறுவனம் தனது வாகனங்களை திரும்ப அழைத்துள்ளது. வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும் இதை செக் செய்து விட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்பதால் வாடிக்கையாளர்கள் உடனடியாக அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு செல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









