ஓலாவ வேரோடு சாய்க்க திட்டம்.. உலக நாடுகள் கண்டிராத சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிச்சுட்டு இருக்காங்கலாம்

இப்போதைய நிலவரப்படி இந்திய எலெக்ட்ரிக் டூ-வீலர் பிரிவின் அறிவிக்கப்படாத தலைவனாக ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அனைத்து மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்களும் திக்கு-முக்காடிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே யமஹா (Yamaha)-வின் இரண்டு சக்கர வாகன உற்பத்தி குழு ஜப்பானிலும், இந்தியாவிலும் ஓர் தனித்துவமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-ஐ உருவாக்கும் பணியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வெளியாகி இருக்கும் கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

யமஹா உலக அளவில் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே தற்போது எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இதன் ஒரு எலெக்ட்ரிக் டூ-வீலர் மாடல்கூட இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. தற்போது நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை வைத்து பார்க்கையில், விரைவிலேயே யமஹா மின்சாரத்தில் இயங்கும் டூ-வீலர் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துவிடும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

Yamaha electric scooter

யமஹாவின் இந்த எலெக்ட்ரிக் வாகனம் யமஹாவின் வழக்கமான கவர்ச்சியான ஸ்டைலிங்கையும், அதிக செயல்திறனையும் வெளியேற்றக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, பிரீமியம் அம்சங்களையும் அது தாங்கியிருக்கும் என கூறப்படுகின்றது. முன்னதாக யமஹா நிறுவனம் நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதையே இங்கிலாந்து போன்ற உலக நாடுகளில் யமஹா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது ஓர் ரிமூவபிள் பேட்டரி பேக்கைக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். ஆனால், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, இந்தியாவிற்கான யமஹாவின் எலெக்ட்ரிக் டூ-வீலர் வேறு எந்த நாட்டிலும் அறிமுகம் செய்யப்படாத புதுமுக வாகனமாக இருக்கும் என்பதே தெரிய வந்திருக்கின்றது.

ஆனால், இதன் வருகை எப்போது அமையும் என்பது தெரியவில்லை. இன்னும் ஒரு சில ஆண்டுகள் இதன் அறிமுகத்திற்கு எடுத்துக் கொள்ளும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அதேவேளையில், யமஹா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட அவசரப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. ஏனெனில், அதன் இலக்கு இப்போதும் பிரீமியம் பெட்ரோல் டூ-வீலர்களின் பக்கமே உள்ளது.

அதேவேளையில், 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் இரண்டு சக்கர வாகன பிரிவை 20-30 சதவீதம் வரை மின்சார ஸ்கூட்டர்களே கைப்பற்றும் என நம்பப்படுகின்றது. இந்த மாதிரியான தேவை அதிகரிக்கும்போது அது தன்னுடைய எலெக்ட்ரிக் வாகனங்களை மிக தாராளமான எண்ணிக்கையில் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், இந்த காலகட்டத்திலும் உள் எரிப்பு இயந்திரங்கள் (ICE) கொண்ட வாகனங்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தும் நம்பப்படுகின்றது. சுமார் 70-80 சதவீதமமாக அது இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இதனால்தான் யமஹா மற்றும் ஹோண்டா போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் எலெக்ட்ரிக் டூ-வீலர் பிரிவில் ஆர்வம் காட்டாமல் உள்ளன.

அதேவேளையில், இவர்கள் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒன்று அல்லது இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வர் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் சந்தையில் இ-வாகனங்களுக்கான தேவை கணிசமாக உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் பணியிலேயே அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் தற்போது களமிறங்கி இருக்கின்றனர்.

யமஹா நிறுவனம் தன்னுடைய மிகப் பெரிய சந்தையாக விளங்கும் இந்தியாவை எப்போதும் தன் வசம் வைத்திருக்கும் இன்னும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஆர்எக்ஸ் 100 (RX 100) மோட்டார் சைக்கிளைப் புதுப்பிக்கவும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், 2 ஸ்ட்ரோக் எஞ்சினுக்கு பதிலாக 4 ஸ்ட்ரோக் எஞ்சினைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதும் இந்தியர்கள் பலரின் பிரியமான பைக் மாடலாக யமஹா ஆர்எக்ஸ் 100 இருக்கின்றது. எனவே மிகப் பெரிய வரவேற்பையும், தாக்கத்தையும் இந்த பைக் இந்தியால் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எனவேதான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை மையப்படுத்தி தங்களுடைய வருகையைப் பதிவுச் செய்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே யமஹாவும் தன்னுடைய வருகையை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால், இதன் வருகை அமையும் துள்ளியமான நாள் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 12, 2024, 13:30 [IST]
English summary
Yamaha teams in japan and india working on unique electric scooter
மேலும்... #yamaha #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+