ஆர்15 பைக்குக்கு மவுசு குறையுதா? யமஹா இதை எதிர்பார்த்திருக்காது... எஃப்.இசட் கஸ்டமர்களும் குறையுறாங்க!!

யமஹா (Yamaha), இந்தியாவில் 2-வீலர்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று. ஜப்பான் நாட்டை சேர்ந்த இந்த நிறுவனத்தில் இருந்து ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதத்திலும் ஆயிரக்கணக்கிலான இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் யமஹா நிறுவனத்தில் இருந்து கடந்த 2024 ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. வழக்கத்தை காட்டிலும் அவை எவ்வளவு அதிகம் என்பது உள்பட இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

யமஹா நிறுவனத்தில் இருந்து கடந்த 2024 ஜூன் மாதத்தில் மொத்தம் 58,471 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது வெறும் 96 யூனிட்கள் மட்டுமே குறைவாகும். அதாவது, கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் யமஹா 2-வீலர்களின் விற்பனையில் பெரியளவில் மாற்றமில்லை.

yamaha two wheeler sales report

ஆனால், இந்த ஆண்டு மே மாதத்தில் சுமார் 64,222 இருசக்கர வாகனங்களை இந்தியாவில் யமஹா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் சுமார் 5,751 இருசக்கர வாகனங்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2024 ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட யமஹா 2-வீலராக முதலிடத்தில் ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் உள்ளது.

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 15,184 ஆகும். அதுவே 2023 ஜூன் மாதத்தில் 13,441 ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், கடந்த ஜூன் மாதத்தில் 1,743 ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் யமஹா 2-வீலர்களை வாங்கும் 4இல் ஒருவர் ரே இசட்.ஆர் ஸ்கூட்டரை வாங்கியுள்ளனர்.

yamaha two wheeler sales report

பெரும்பாலும், யமஹாவில் இருந்து அதிகம் விற்பனை செய்யப்படும் 2-வீலராக முதலிடத்தை பிடிப்பது எஃப்.இசட் பைக்குகள் ஆகும். ஆனால், கடந்த ஜூன் மாத விற்பனையில் 2வது இடத்திற்கு எஃப்.இசட் சரிந்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள எஃப்.இசட் பைக்குகளின் எண்ணிக்கை 12,041 ஆகும். ஆனால், 2023 ஜூன் மாதத்தில் 16,316 எஃப்.இசட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இதன்படி பார்க்கும்போது, கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஜூனில் 4,275 எஃப்.இசட் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2024 மே மாதத்திலும் 14,359 எஃப்.இசட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. எஃப்.இசட் பைக்குகளுக்கு அடுத்து கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட யமஹா 2-வீலராக 3வது இடத்தில் எம்டி15 உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 11,617 எம்டி15 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

yamaha two wheeler sales report

ஆனால், 2023 ஜூன் மாதத்தில் வெறும் 9,127 எம்டி-15 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதாவது, 2023 ஜூனை விட 2024 ஜூனில் 2490 எம்டி பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. யமஹா ஃபேஸினோ இந்த வரிசையில் 4வது இடத்தை தனதாக்கி உள்ளது. கடந்த ஜூனில் 9,254 ஃபேஸினோ ஸ்கூட்டர்களை யமஹா விற்பனை செய்துள்ளது. 2023 ஜூனில் 9,572 ஃபேஸினோ ஸ்கூட்டர்களை யமஹா விற்பனை செய்திருந்தது.

இந்திய இளைஞர்களின் ஃபேவரட் பைக்காக விளங்கும் யமஹா ஆர்15 இந்த வரிசையில் 5வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 8,776 ஆர்15 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஜூன் மாதத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக 10,111 ஆர்15 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இவை இல்லாமல், கடந்த மாதத்தில் 1,593 ஏரோக்ஸ் ஸ்கூட்டர்களையும், 6 ஆர்3/ எம்டி03 பைக்குகளையும் யமஹா விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போதைக்கு ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் மட்டுமே யமஹாவின் நம்பிக்கைக்குரிய 2-வீலராக விளங்கி வருகிறது. ஏனெனில் மற்றவைகளின் விற்பனை ஆனது மாதத்திற்கு மாதம் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால், ஆர்15, எஃப்.இசட் உள்ளிட்ட பைக்குகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தை யமஹா நெருங்கிக் கொண்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 18, 2024, 22:08 [IST]
English summary
Yamaha two wheeler sales report of june 2024 check all details here
மேலும்... #yamaha #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X