யமஹாவில் எல்லாரும் தேடி, தேடி வாங்கும் ஸ்கூட்டரா இது மாறிடுச்சு... தீபாவளி வந்துச்சுனா நிலைமை இன்னும் மாறிடும்

யமஹா (yamaha), இந்தியாவில் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனம் என்று சொன்னால், அது மிகையில்லை. ஏனெனில், இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் ஆயிரக்கணக்கிலான 2-வீலர்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுள் ஒன்றாக யமஹா விளங்குகிறது. இந்த வகையில், கடந்த 2024 ஜூலை மாதத்திலும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான 2-வீலர்களை யமஹா விற்பனை செய்துள்ளது என்றாலும், வழக்கத்தை காட்டிலும் யமஹா 2-வீலர்களின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. இதன்படி, கடந்த மாதத்தில் எந்தெந்த யமஹா 2-வீலர்களின் விற்பனை குறைந்துள்ளது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கிவரும் சூழலில் இந்தியாவில் வாகன விற்பனை தொடர்ந்து குறைந்துக் கொண்டே வருகிறது. பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எதிர்மறையான விற்பனையை பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில், பிரபலமான ஜப்பானிய 2-வீலர் நிறுவனமான யமஹா இந்தியாவில் கடந்த ஜூலை மாத விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது.

yamaha two-wheelers sales report

கடந்த 2024 ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட யமஹா 2-வீலர்களின் எண்ணிக்கை 55,838 ஆகும். ஆனால், 2023 ஜூலை மாதத்தில் 61,884 இரு சக்கர வாகனங்களை இந்தியாவில் யமஹா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, யமஹா இந்தியா நிறுவனத்தின் விற்பனை ஆனது 9.77%, அதாவது 6,046 யூனிட்கள் குறைந்துள்ளது. அதேபோல், இந்த ஆண்டு ஜூன் மாதத்திலும் 58,471 இரு சக்கர வாகனங்களை யமஹா விற்பனை செய்திருந்தது.

இதன்படி பார்த்தால், 2024 ஜூன் மாதத்தை காட்டிலும் ஜூலை மாதத்தில் 2,633 வாகனங்களை யமஹா குறைவாக விற்பனை செய்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட யமஹா 2-வீலராக முதலிடத்தை ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 14,690 ஆகும்.

yamaha two-wheelers sales report

அதுவே, 2023 ஜூலையில் இதனை காட்டிலும் 1,138 ஸ்கூட்டர்கள் அதிகமாக 15,828 ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களை யமஹா விற்பனை செய்திருந்தது. ரே இசட்.ஆர் ஸ்கூட்டருக்கு அடுத்து, கடந்த மாதத்தில் யமஹா அதிகளவில் விற்பனை செய்த 2-வீலராக 2வது இடத்தை பிடித்து இருப்பது எஃப்.இசட் பைக் ஆகும். மொத்தம் 10,964 யமஹா எஃப்.இசட் பைக்குகள் கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2023 ஜூலையில் 16,651 எஃப்.இசட் பைக்குகளை யமஹா விற்பனை செய்திருந்தது. இதன்படி பார்க்கும்போது, கடந்த ஆண்டு ஜூலையை காட்டிலும் இந்த ஆண்டு ஜூலையில் 5,687 எஃப்.இசட் பைக்குகளை யமஹா குறைவாக விற்பனை செய்துள்ளது. யமஹா ஃபேஸினோ இந்த வரிசையில் 3வது இடத்தை தனதாக்கி உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 10,052 ஃபேஸினோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

yamaha two-wheelers sales report

2023 ஜூலையில் 11,710 ஃபேஸினோ ஸ்கூட்டர்களை யமஹா விற்பனை செய்திருந்தது. இதற்கடுத்து, எம்டி15 பைக் 9,866 யூனிட்களின் விற்பனை உடன் 4வது இடத்தில் உள்ளது. எம்டி15 பைக்கின் விற்பனை சமீப காலமாக கணிசமாக அதிகரித்து வருகிறது. 2023 ஜூலை மாதத்தில் 5,805 எம்டி15 பைக்குகளை மட்டுமே யமஹா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், கடந்த ஜூலை மாதத்தில் சுமார் 4,061 எம்டி15 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இளைஞர்களின் ஃபேவரட் பைக்கான ஆர்15 இந்த வரிசையில் 5வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 8,712 ஆர்15 பைக்குகள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளன. ஆனால், 2023 ஜூலையில் 10,705 ஆர்15 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஏரோக்ஸ் ஸ்கூட்டர் இந்த வரிசையில் 6வது இடத்தை சொந்தமாக்கி உள்ளது. கடந்த மாதத்தில் 1,548 ஏரோக்ஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை இல்லாமல், கடந்த மாதத்தில் 6 ஆர்3/ எம்டி3 பைக்குகளையும் யமஹா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் யமஹா நிறுவனத்திற்கு நீண்ட வருடங்களாக விற்பனையில் நம்பிக்கைக்குரிய 2-வீலராக எஃப்.இசட் விளங்கி வருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற 2-வீலர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருகிறது என்றாலும், இப்போதும் யமஹா நிறுவனத்தின் மிக பெரிய மார்க்கெட்டாக இந்தியா விளங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 21, 2024, 8:00 [IST]
English summary
Yamaha two wheelers sales report 2024 july check all details here
மேலும்... #yamaha #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X