கிளட்ச், கியர் இரண்டுமில்லா பைக்கை உருவாக்கி வரும் யமஹா!.. ஹீரோ கூட இப்படி ஒரு முயற்சியை செய்யல!
இரண்டு சக்கர வாகனங்களை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் டூ-வீலர் உற்பத்தி நிறுவனங்கள் களமிறங்கி இருக்கின்றன. கடந்த காலங்களில் மோட்டார்சைக்கிள்களை அதிக செயல்திறன்மிக்கதாக உருவாக்குவதிலேயே உற்பத்தியாளர்கள் அதிகம் முக்கியத்துவம் வழங்கி வந்தனர். ஆனால், இப்போதோ அவற்றை அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையிலேயே பிரீமியம் மோட்டார்சைக்கிள்களுக்கான ஆட்டோமேட்டிக் மற்றும் செமி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களை தயாரிக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது, யமாஹ (Yamaha) நிறுவனம். யமஹா இப்போது அதன் ஒய்-ஏஎம்டி (Y-AMT) கியர்பாக்ஸையே தயாரித்து உள்ளது.
வரும் காலத்தில் இந்த கியர்பாக்ஸை அது அதன் முக்கிய தயாரிப்புகளில் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு சக்கர வாகனங்களில் தானியங்கி கியர்பாக்ஸ் என்பது ஓர் புதிய விஷயமல்ல. சுமார் 95 சதவீத ஸ்கூட்டர்களில் சிவிடி (CVT) டிரான்ஸ்மிஷனே பயன்படுத்தப்படுகின்றன. ஹோண்டா நிறுவனம் அதன் பெரிய அட்வென்சர் டூ-வீலர்கள் மற்றும் பேக்கர் வகை பைக்குகளில் டிசிடி (DCT) கியர்பாக்ஸை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதேபோல், பிஎம்டபில்யூ மோட்டாராட் (BMW) சமீபத்தில் ஆட்டோமேட்டட் ஷிஃப்ட் அசிஸ்டன்ட் (Automated Shift Assistant) தொழில்நுட்பத்தை அதன் ஆர் 1300 ஜிஎஸ் ஏடிவி (R 1300 GS ADV) பைக் மாடலில் அறிமுகப்படுத்தியது. இதேபோல், கேடிஎம் (KTM)-ம் உலக சந்தையில் உள்ள சில பைக் மாடல்களில் ஏஎம்டி (AMT) கியர்பாக்ஸை வழங்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே யமஹாவும் தன்னுடைய பைக்குகளில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை வழங்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இந்நிறுவனம் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே எஃப்ஜேஆர் 1300 (FJR1300) பைக் மாடலுக்காக ஒய்சிசிஎஸ் (Yamaha Chip Controlled Shift) கியர்பாக்ஸை உருவாக்கியது என்பது கவனிக்கத்தகுந்தது.
ஹைட்ராலிக் மற்றும் விரல்களால் கியர் லிவரை கன்ட்ரோல் செய்யும் அமைப்பைக் கொண்டதே இந்த கியர்பாக்ஸ் ஆகும். ஆனால், தற்போது வடிவமைக்கப்பட்டு இருக்கும். புதிய ஒய்-ஏஎம்டி மின்னணு சுவிட்சுகளைப் பயன்படுத்துகிறது. டிராஃபிக்கிற்கு ஏற்ப கியரை மாற்ற வேண்டும் என்கிற டென்ஷன் இல்லாமல் ரைடர்கள் பைக்கை இயக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே தன்னுடைய யமஹா இந்த சூப்பரான முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.
இந்த கியரின் மொத்த எடையே 2.8 கிலோ மட்டுமே என கூறப்படுகின்றது. இது பயன்பாட்டிற்கு வருவதால் பைக்கின் அகலம் கூடுமோ என எண்ண வேண்டாம். பெரிய அளவில் அது அதிகரிக்காது என கூறப்படுகின்றது. முழு-எலக்ட்ரானிக் அமைப்பாக, ஒய்-ஏஎம்டி ஆனது பைக்கின் ரைடு-பை-ஒயர் த்ரோட்டலுடன் இணைந்து செயல்படும்.

இது எப்படி செயல்படும் என்கிற டீசர் வீடியோவையே அது வெளியிட்டு உள்ளது. அந்த வீடியோவில் வரும் யமஹா பைக்கில் கிளட்ச் லிவர் அல்லது காலால் இயக்கப்படும் கியர் அமைப்புகள் இல்லை. அதற்கு பதிலாக கை முறையாக சுவிட்ச் செய்வதற்கான அமைப்பே உள்ளது. இடது பக்க ஹேண்டில்பாரில் ஓர் சுவிட்ச் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதை கூட்ட, குறைக்க செய்தால் கியரின் தன்மையும் அதற்கேற்ப மாறுமாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமேட்டிக் முறையில் கியர் மாற்றங்கள் ஒய்-ஏஎம்டி அமைப்பால் நிர்வகிக்கப்படும். இதை சுலபமாக்கும் பொருட்டே வலதுபுற சுவிட்ச் வழங்கப்பட்டு உள்ளது. அது கியர் மோடை மாற்றும். யமஹாவின் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும் எனில் இரண்டு சக்கர வாகன காதலர்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளையில், இந்தியாவில் இதற்கு முன்னதாகவும் கிளட்ச் மற்றும் கியர் இல்லாத பைக்குகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. அந்தவகையில், டிவிஎஸ் ஜைவ் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதுவே இந்தியாவின் முதல் மலிவு விலை கிளட்ச் இல்லா பைக் மாடல் ஆகும். ஆனால், இது இந்தியர்களின் மனதை கவர தொடங்கிவிட்டது. இதன் விளைவாக தற்போது டிவிஎஸ் ஜைவ் விற்பனையில் இல்லை.


Click it and Unblock the Notifications








