கார் மாதிரி பைக்கிலும் வந்துவிட்ட ஏஎம்டி கியர் பாக்ஸ்! இனி யமஹா பைக்கை ஈஸியா ஓட்டலாம்!

யமஹா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக முதல் செமி-ஆட்டோமேட்டிக் கியர் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஒய்-ஏஎம்டி என அந்நிறுவனம் பெயர் வைத்துள்ளது. இந்த கியர் சிஸ்டம் யமஹா நிறுவனத்தின் எம்டி 09 பைக்கில் பொருத்தப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் ஜப்பானில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பம் எப்படி வேலை செய்கிறது. பைக்குகளில் எப்படி ஆட்டோமேட்டிக் கியர் பொருத்துகிறார்கள் என்ற விரிவான விவரத்தை காணலாம் வாருங்கள்.

கார்களில் தற்போது ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் கொண்ட கார்கள் பயன்பாட்டிற்கு அதிகம் வந்துவிட்டன. பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலர் வாகனம் ஓட்டும்போது ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனை தேர்வு செய்கிறார்கள். இது அவர்களுக்கு சுலபமாக இருக்கும் என்பதால் இப்படியான வாகனத்தை ஓட்ட மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு இருக்கிறது.

Yamaha Y-AMT

இதுவே டூவீலர் பொறுத்தவரை ஸ்கூட்டர் போன்ற வாகனங்களில் சிவிடி கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது தானியங்கியாக இயங்கும் திறன் கொண்டதால் இதில் கியர் மாற்ற வேண்டிய தேவை இல்லை. இப்படியான அம்சம் கொண்ட வாகனங்களை பெண்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பைக்குகளில் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் யமஹா நிறுவனம் கார்களில் இருப்பது போல பைக்குகளிலும் செமி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்கான புதிய தொழில்நுட்பத்தையும் உருவாக்கி உள்ளது. அதற்கு ஒய்-ஏஎம்டி என பெயர் வைத்துள்ளது. இதன் விரிவாக்கம் யமஹா ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகும். இது கார்களில் இருப்பது போல ஆட்டோமேட் செய்யப்பட்ட மேனுவல் கியர் பாக்ஸ் தான்.

Yamaha Y-AMT

இந்த தொழில்நுட்பம் பொருத்தப்படுவதால் அந்த பைக்கில் கிளட்ச்சும் தேவையில்லை கியர் மாற்றுவதற்கான விவரம் தேவையில்லை. கியர் மாற்றுவதை மேனுவலாக செய்ய முடியும். அதற்கு ஹேண்டில் பாரிலேயே ஸ்விட்ச் வழங்கப்படுகிறது. தொழிற்நுட்பம் பொருத்தப்பட்ட பைக்குகளில் கியர் மாற்றுவது எளிதாக இருக்கும். அதே நேரம் கிளட்ச் குறித்த கவலையும் ரைடர் படவேண்டிய தேவை இல்லை.

இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட பைக்குகளில் இரண்டு விதமான கியர் மோடுகள் இருக்கும். முதல் மோடு மேனுவல் மோட் இது முற்றிலுமாக மேனுவலாக கியரை மாற்ற வேண்டும், மற்றொரு மோடு ஆட்டோமேட்டிக் மோடு இந்த மோடில் எந்த ரைடு கண்டிஷனிலும் கியர் மாற்றவேண்டிய தேவை இல்லை. வாகனத்தின் நிலைமையை புரிந்து தன்னைத்தானே மாற்றிக் கொள்ளும் வகையில் கியரில் ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பம் தொகுக்கப்பட்டுள்ளது.

Yamaha Y-AMT

தற்போது உள்ள சாதாரண பைக்குகளில் இடது கை பக்கம் கிளட்ச் இருக்கும். அதை அழுத்தி கியரை மாற்றி கிளட்சை மெதுவாக ரிலீஸ் செய்து பயணம் செய்வோம். இப்படியாக நாம் வாகனத்தின் நிலையை பொறுத்து கியரை மாற்றி பயன்படுத்த வேண்டும். ஒய்-ஏஎம்டி கியர் தொழிற்நுட்பத்தை பொறுத்தவரை கிளட்ச் மற்றும் கியர் மாற்றுவதற்காக அக்குட்டர்களை பொருத்தியுள்ளது.

இந்த வாகனத்தில் இன்ஜின் கண்ட்ரோல் யூனிடிற்க்கும் இது வாகனத்தின் இன்ஜின் ஸ்டார்ட் செய்வதற்கும் இன்ஜின் உள்ளே ஃப்யூயல் இன்ஜெக்ஷன் செய்வதற்கும் உள்ள கண்ட்ரோலை வழங்குகிறது. இந்த கண்ட்ரோல் யூனிட் கியர் மாற்றப்படும் போது எலெக்ட்ரானிக் முறையில் திராட்டலை குறைத்து கியர் மாற்றத்திற்கு உதவுகிறது.

அடுத்ததாக மோட்டார் கண்ட்ரோல் யூனிட் இருக்கிறது. இது இசியூ உடன் இணைந்து வேலை செய்யும் இது அக்யூட்டருக்கு எந்த நேரத்தில் கியரை மாற்ற வேண்டும் எந்த கியருக்கு மாற வேண்டும் என வாகனத்தின் நிலையை பொறுத்து உத்தரவை பிறப்பிக்கும். அதே நேரத்தில் கிளட்ச் எவ்வளவு அழுத்தம் இருக்க வேண்டும்? எவ்வளவு மெதுவாக ரிலீசாக வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பிக்கும்.

இந்த இரண்டு கண்ட்ரோல் யூனிட்களும் சேர்ந்து தான் இந்த ஏஎம்டி கியர் தொழில்நுட்பத்தை இயக்குகிறது. இதனால் மேனுலாக கியர் மாற்ற வேண்டிய தேவை இருக்காது. அதே நேரத்தில் இந்த கியர் ஆப்ஷனை மேனுவலாகவும் ஆட்டோமேட்டிக்காகவும், பயன்படுத்த முடியும். மேனுலாக பயன்படுத்தினாலும் இது எலெக்ட்ரானிக் முறையில் தான் கியர் மாற்றம் என்பது ஏற்படும்.

யமஹா நிறுவனத்தின் கியர் தொழில்நுட்பத்தை ஒரு வாகனத்தில் பொருத்துவதன் மூலம் அந்த வாகனத்தின் எடை 2.8கிலோ வரை அதிகமாக வாய்ப்பு உள்ளது. ஆனால் ரைடருக்கு ஈஸியான கியர் மாற்றம் மற்றும் நல்ல ரைடிங் அனுபவம் கிடைக்கும். வாகனத்தின் வேகம் மற்றும் திராட்டில் அளவை பொறுத்து ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் தானாக கியர் மாறிக் கொள்ளும். வாகனம் ஓட்டுபவர் திராட்டலை மற்றும் பிரேக் மட்டும் கண்ட்ரோல் செய்தால் போதும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தொழிற்நுட்பத்தில் என்னதான் மேனுவல் கியர் ஆப்ஷனுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தாலும், ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனின் தேவையும் மக்களுக்கு இருக்கிறது. அவர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக இந்த தொழில்நுட்பத்தை யமஹா நிறுவனம் வடிவமைத்துள்ளது. இது நிச்சயம் மிகப்பெரிய அளவில் மார்க்கெட்டில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம். இது போன்று மற்ற நிறுவனங்களும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 27, 2024, 12:40 [IST]
English summary
Yamaha y amt semi automatic transmission mt 09 first 2024 confirmed
மேலும்... #yamaha #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X