2024 ரொம்ப ஸ்பெஷலான ஆண்டு.. எவ்ளோ எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் அறிமுகமாகி இருக்குனு திரும்பி பார்க்கலாமா...

அவ்ளோ தாங்க இந்த வருஷமும் சீக்கிரமே முடிய போகுது. நாம் நினைத்து பார்த்திடாத வேகத்தில் 2024 ஆம் ஆண்டு நம்மை விட்டு கடந்துச் சென்றுக் கொண்டிருக்கின்றது. இன்னும் ஒரு சில நாட்களில் ஒட்டுமொத்தமாக கடந்து போகவும் இருக்கின்றது. இந்த ஆண்டிலும், முந்தைய ஆண்டுகளைப் போலவே புதுமுக வாகனங்கள் பல இந்தியாவை அலங்கரிக்கும் விதமாக விற்பனைக்கு வந்திருக்கின்றன. அந்தவகையில், இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) பிரிவை அலங்கரிக்கும் விதமாக அறிமுகம் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் டூ-வீலர்களின் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

2024 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் சமீபத்திய நாட்கள் வரை விற்பனைக்குக் களமிறக்கப்பட்ட மிக முக்கியமான எலெட்க்ட்ரிக் டூ-வீலர்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். ஆண்டு இறுதியின் சிறப்பாக இந்த தகவலை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தொகுத்து வழங்கி இருக்கின்றது. வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Electric two-wheelers launched in india in 2024

முந்தைய ஆண்டுகளைப் போல 2024 ஆண்டிலும் இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமே ஆக்கிரமிப்பு செய்துக் கொண்டிருக்கின்றது. தன்னுடைய இந்த முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அது மிகுந்த கவனத்துடன் இருக்கின்றது.

இதன் வெளிப்பாடாகவே அது 2024 ஆம் ஆண்டில் சில அசத்தலான மற்றும் விலை குறைவான எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்குக் களமிறக்கியது. எலெக்ட்ரிக் பைக், தனிப்பட்ட பயன்பாட்டுக்கான இ-ஸ்கூட்டர் மற்றும் டெலிவரி சேவைக்கான இ-ஸ்கூட்டர் என பல புதுமுக வாகனங்களை அது அறிமுகம் செய்தது.

ஜிக் (Gig) மற்றும் (S1 Z) ஆகியவையே இந்த ஆண்டில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த மிக முக்கியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் ஆகும். இதில், ஜிக் என்பது முழுக்க முழுக்க டெலிவரி சேவைக்கான வாகனம் ஆகும். அது, ஜிக் (Gig) மற்றும் ஜிக் பிளஸ் (Gig+) என்கிற இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இதேபோல், எஸ்1 இசட் மாடலும் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். டெலிவரி மற்றும் தனிப்பட்ட சேவை இரண்டுக்குமான ஆப்ஷனும் இதில் வழங்கப்படுகிறது. இது எஸ்1 இசட் (S1 Z) மற்றும் எஸ்1 இசட் பிளஸ் (S1 Z+) ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இரண்டு மற்றும் ஒற்றை பேட்டரி பேக் தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். இதற்கு முன்னதாக மிக முக்கியமான வெளியீடாக நிறுவனம் ரோட்ஸ்டர் எனும் எலெக்ட்ரிக் பைக்கை ஓலா அறிமுகம் செய்தது. இதுவே, நிறுவனத்தின் முதல் இ-பைக் ஆகும.

இது மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அவை, ரோட்ஸ்டர் (Roadster), ரோட்ஸ்டர் ப்ரோ (Roadster Pro) மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X) ஆகும். இந்த புதுமுக இ-வாகனங்களின் டெலிவரி பணிகள் நாட்டில் இன்னும் தொடங்கவில்லை. இப்போது ரிசர்வேஷன் பணிகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

ஓலாவிற்கு சவாலாக சந்தையில் விளங்கிக் கொண்டிருக்கும் ஓர் பிராண்டாக ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) உள்ளது. இந்த நிறுவனமும் இந்த ஆண்டில் சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ரிஸ்தா (Ather Rizta), இதுவே அந்த ஸ்கூட்டர் ஆகும். இது ஓர் ஃபேமிலிக்கான இ-ஸ்கூட்டர் ஆகும்.

நீளமான இருக்கை, இருக்கைக்கு அடியில் பெரிய ஸ்டோரேஜ் உள்ளிட்ட அம்சங்களுடன் அது விற்பனைக்கு வந்திருக்கின்றது. மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த வாகனத்தை ஏத்தர் 2024 ஆம் ஆண்டில் விற்பனைக்குக் களமிறக்கியது. ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஏத்தர் எனெர்ஜி போன்ற நிறுவனங்கள் மட்டுமல்ல பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrod)-ம் இந்தியாவின் மின்சார வாகன தேவையை பூர்த்தி செய்யும் விதமாக எலெக்ட்ரிக் டூ-வீலர்களை 2024 ஆம் ஆண்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

அது, பிஎம்டபிள்யூ சிஇ 02 (BMW CE 02) மற்றும் பிஎம்டபிள்யூ சிஇ 04 (BMW CE 04) ஆகிய இரண்டு மாடல்களையே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இரண்டும் மிக மிக அதிக விலைக் கொண்ட மற்றும் முற்றிலும் மாறுபட்ட உருவ அமைப்பைக் கொண்ட எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் ஆகும்.

இந்த நிறுவனங்களைப் போலவே இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் டிவிஎஸ் (TVS) நிறுவனமும், அதன் இருப்பை மிகவும் ஸ்ட்ராங்கானதாக மாற்றும் பொருட்டு ஐக்யூப் ரேஞ்ச் (iQube Range) எனும் புதிய தேர்வை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியது.

இந்த முன்னனி நிறுவனங்களைப் போலவே வளர்ந்து வரும் நிறுவனங்கள் சிலவும் நாட்டில் புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றன. அந்தவகையில், கோமகி (Komaki) நிறுவனம், அதன் பிரைம் (Prime), ஏஸ் (Ace) மற்றும் ஃப்ளோரா (Flora) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையும், ரிவோல்ட் (Revolt) நிறுவனம் அதன் ஆர்வி1 (RV1) மற்றும் ஆர்வி400 பிஆர்இசட் (RV400 BRZ) ஆகிய மாடல்களையும் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றன.

தொடர்ந்து, ஆம்பியர் நெக்சஸ் (Ampere Nexus), ஸ்விட்ச் சிஎஸ்ஆர் 762 (Svitch CSR 762) ஆகிய மின்சார டூ-வீலர்களும் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக விற்பனைக்கு வந்திருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, விஎல்எஃப் (VLF) எனும் புதுமுக வெளிநாட்டு பிராண்டும் இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவை அழகுப்படுத்தும் விதமாக அதன் டென்னிஸ் (Tennis) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை சமீபத்தில் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மேலே பார்த்த நிறுவனங்களே 2024 ஆம் ஆண்டை அலங்கரிக்கும் விதமாக புதிய எலெகட்ரிக் டூ-வீலர்களை அறிமுகம் செய்திருக்கின்றன. இவர்கள் மட்டுமில்லைங்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹோண்டா ஆக்டிவா இ, க்யூசி 1 உள்ளிட்டவையும் இந்த ஆண்டுலேயே அறிமுகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இவர்களின் வரிசையில் கடைசியாக இணைந்த ஆளாக பஜாஜ் உள்ளது. அது சமீபத்தில் சேத்தக் இ-ஸ்கூட்டர் மாடலில் புதிதாக 35 எனும் சீரிஸை இணைத்தது. இதைத்தொடர்ந்த, ஓலாவும் அதன் எஸ்1 ப்ரோ சோனா ஸ்பெஷல் எடிசன் (Ola S1 Pro Sona Special Edition)-ஐ தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த ஆண்டை போலவே வரும் ஆண்டிலும் அதிக எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் இந்தியாவை அலங்கரிககும் விதமாக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 25, 2024, 5:00 [IST]
English summary
Year ender 2024 special electric two wheelers launched in india in 2024
மேலும்... #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+