102கிமீ மைலேஜ் தரும் சிஎன்ஜி பைக் முதல் டிவிஎஸ் ஜுபிடர் 110 வரை.. 2024ம் ஆண்டில் அறிமுகமான டூ-வீலர்கள் லிஸ்ட்!

2024 ஆம் ஆண்டின் இறுதியை முன்னிட்டு பல்வேறு சுவாரஷ்யமான தகவல்களை நாம் பார்த்து வருகின்றோம். குறிப்பாக, வாகன உலகம் சார்ந்து அரங்கேறிய முக்கிய தகவல்களை தொடர்ச்சியாக நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் வெளியிட்டு வருகின்றது. அந்தவகையில், இந்த பதிவில் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை இந்தியாவில் நிகழ்ந்த முக்கியமான டூ-வீலர்களின் அறிமுகம் பற்றிய தகவலையே பார்க்க இருக்கின்றோம். ஸ்கூட்டர் மற்றும் பைக் என இந்திய இரண்டு சக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்ட அனைத்து டூ-வீலர்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்த 2024 ஆம் ஆண்டிலும் முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் புதுமுக மற்றும் புதுப்பிக்கப்பட்ட டூ-வீலர்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். தாங்கள் மார்க்கெட்டில் செலுத்தி வரும் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஒவ்வொரு நிறுவனங்களும் கண்ணும் கருத்துமாக இருந்து வாகனங்களை 2024இல் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.

Two wheelers launched in 2024

அந்தவகையில், ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்கச் செய்கின்ற வகையில் பஜாஜ் (Bajaj) நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி (CNG)-யில் இயங்கும் டூ-வீலரை 2024 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஃப்ரீடம் 125 (Freedom 125) பைக் மாடலே அது ஆகும். மிக மிக குறைவான விலையிலேயே இதனை பஜாஜ் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ரூ. 1 லட்சத்துக்கும் குறைவான விலையிலேயே இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரண்டிலும் பயணித்துக் கொள்ள முடியும். ஒரு கிலோ சிஎன்ஜியை நிரப்பினால் 102 கிமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். அதேவேளையில், இதில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 கிமீட்டரில் இருந்து 65 கிமீ தூரம் வரை மைலேஜ் கிடைக்கும்.

இத்தகைய அதிக மைலேஜ் தரும் பைக்காகவே ஃப்ரீடம் 125 இந்த ஆண்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இந்த பைக் மட்டுமில்லைங்க இந்தியாவில் இன்னும் பல்வேறு பைக் மாடல்கள் இந்த ஆண்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றன. அந்தவகையில், ஹீரோ (Hero MotoCorp) நிறுவனம் அதன் ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் (Splendor+ XTEC) மாடலை டிஸ்க் (Disc) பிரேக் வசதியுடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இதற்கு மிக மிக குறைவான விலையாக ரூ. 83,461 நிர்ணயம் செய்யப்பட்டது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த பைக்கிற்கு அடுத்தபடியாக, 2024 ஆம் ஆண்டின் முக்கிய அறிமுகமாக டிவிஎஸ் ஜுபிடர் 110 (TVS Jupiter 110) உள்ளது. புத்தும் புதிய தோற்றத்தில் இந்த ஸ்கூட்டர் மாடலை டிவிஎஸ் நிறுவனம் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, டிவிஎஸ் நிறுவனம் அதன் அப்பாச்சி ஆர்ஆர்310 (Apache RR310) இந்தியாவில் இந்த ஆண்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதேபோல், பஜாஜ் நிறுவனம் பல்சர் என்125 (Pulsar N125), பல்சர் என்எஸ்160 (Pulsar NS160), பல்சர் என்எஸ்200 (Pulsar NS200), பல்சர் என் 250 (Pulsar N250) மற்றும் பல்சர் என்எஸ்400 இசட் (Pulsar NS400 Z) உள்ளிட்ட மாடல்களை 2024ஆம் ஆண்டில் விற்பனைக்குக் கொண்டு வந்தது.

தொடர்ந்து, கவாஸாகி நிறுவனம் அதன் எலிமினேட்டர் (Kawasaki Eliminator) பைக் மாடலையும், பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrod) நிறுவனம் அதன் ஆர் 12 நைன் டி (R 12 nineT) மற்றும் ஆர் 12 (R 12) ஆகிய பைக் மாடல்களையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இதேபோல், ஜாவா 42 எஃப்ஜே (Jawa 42 FJ), டிரையம்ப் ஸ்பீடு டி4 (Triumph Speed T4) ஆகிய பைக் மாடல்களும் இந்த ஆண்டிலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னணி நிறுவனங்களைப் போலவே சில புதுமுக பிராண்டுகளும் இந்தியாவில் இந்த ஆண்டில் அதன் கால் தடத்தைப் பதித்திருக்கின்றன.

அந்தவகையில், பிரிக்ஸ்டன் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக இந்தியாவில் களமிறங்கி இருக்கின்றது. அது, பிரிக்ஸ்டன் 500 கிராஸ்ஃபையர் (Brixton 500 Crossfire) மற்றும் பிரிக்ஸ்டன் குரோம்வெல் 1200 (Brixton Cromwell 1200) ஆகிய பைக் மாடல்களையே இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த டூ-வீலர் மாடல்கள் மட்டுமில்லைங்க இந்தியாவில் 2024 ஆம் ஆண்டை அலங்கரிக்கும் விதமாக இன்னும் பல இரண்டு சக்கர வாகன மாடல்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. ஆகையால், மற்ற ஆண்டுகளைப் போலவே 2024 ஆம் ஆண்டும் இந்திய இரண்டு சக்கர வாகன காதலர்களுக்கு விருந்தளிக்கும் ஆண்டாகவே அமைந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 19, 2024, 19:35 [IST]
English summary
Year ender 2024 special list of two wheelers that launched in india in 2024
மேலும்... #year ender 2024 #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+