எதை வாங்குவது? எதை விடுவது என்றே தெரியல... இந்த 2024 அமோகமான வருடம் என்றுதான் சொல்லணும்!!

எலக்ட்ரிக் வாகனங்களை (Electric Vehicles) வாங்குவோரில் பெரும்பாலானோரின் தேர்வு எலக்ட்ரிக் 2-வீலர்களாகவே உள்ளன. ஏனெனில், எலக்ட்ரிக் வாகனங்களில் அதிக தொகையை செலவு செய்ய இப்போதும் நம்மில் பலருக்கு ஒரு சிறு தயக்கம் உள்ளது. ஏனெனில், நாடு முழுவதும் இன்னும் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதிகள் முழுமையாக கொண்டுவரப்படவில்லை. இதனால், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க விரும்புபவர்கள் விரைவான சார்ஜிங் வசதி பரவலாக இல்லாத காரணத்தினால் எலக்ட்ரிக் 2-வீலர்களின் பக்கம் செல்கின்றனர்.

இதன் எதிரொலியாக, இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர் மார்க்கெட் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே வருகிறது. இந்த 2024ஆம் ஆண்டில் கூட பல தரமான எலக்ட்ரிக் 2-வீலர்கள் மார்க்கெட்டில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமான 5 எலக்ட்ரிக் 2-வீலர்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

top-5 electric 2-wheelers of 2024

ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta): அதுவரையில் பவர்ஃபுல்லான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துவந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ரிஸ்டா என்கிற பெயரில் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. 'ஃபேமலி ஸ்கூட்டர்' என்கிற அடைமொழி உடன்தான் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

top-5 electric 2-wheelers of 2024

பஜாஜ் சேத்தக் 35 (Bajaj Chetak 35): மார்க்கெட்டில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவாகும். வழக்கமான பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் இருந்து சற்று வேறுப்பட்ட தோற்றம் மற்றும் புதிய கலர் ஆப்ஷன்கள் உடன் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. சேத்தக் 35 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் 3501 வேரியண்ட்டில் டச் ஸ்க்ரீன் டேஸ்போர்டு வழங்கப்படுகிறது.

top-5 electric 2-wheelers of 2024

அல்ட்ராவொய்லெட் எஃப்77 மேக் 2 (Ultraviolette F77 MACH 2): இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக்கான அல்ட்ராவொய்லெட் எஃப்77-இன் நியூ-ஜென்ரேஷன் பைக்காக மேக் 2 இந்த 2024ஆம் வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை காட்டிலும் எஃப்77 மேக் 2 எலக்ட்ரிக் பைக்கில் கூடுதல் ஆற்றல், 10 லெவல்களில் பிரேக் செட்-அப் மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் (Traction Control) என பல அட்டகாசமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

top-5 electric 2-wheelers of 2024

டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube): இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றான டிவிஎஸ் ஐக்யூப், இந்த 2024இல் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், நீண்ட மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த 'எஸ்டி' (ST) வேரியண்ட்டும் டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐக்யூப் எஸ்டி வேரியண்ட்டில் 3.2kWh மற்றும் 5.5kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

top-5 electric 2-wheelers of 2024

விடா வி2 (Vida V2): ஹீரோ மோட்டோகார்பின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டான விடா எலக்ட்ரிக் (Vida Electric)-இல் இருந்து இந்த வருடத்தில் வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த 2023இல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வி2 -இன் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.96,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஐந்து மட்டுமின்றி, இந்த 2024ஆம் வருடத்தில் பல எலக்ட்ரிக் 2-வீலர்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றுள் சில 2-வீலர்கள் மார்க்கெட்டிற்கு முற்றிலும் புதியது ஆகும். அதாவது, அவற்றை அறிமுகம் செய்தவை மார்க்கெட்டில் புதியதாக நுழைந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஆகும். இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள 5 எலக்ட்ரிக் 2-வீலர்களில் உங்களுக்கு பிடித்தது எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 26, 2024, 23:59 [IST]
English summary
Year ender 2024 top 5 electric two wheelers of this year
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X