ராயல் என்பீல்டுக்கு போட்டியளிக்க வேண்டும் என்பதற்காக பல ஆயிரம் ரூபா மதிப்புள்ள கவசங்களை இலவசமாக தரும் யெஸ்டி!
ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்திற்கு போட்டியாக இந்தியாவில் இரண்டு சக்கர வாகன (Two Wheeler) விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் யெஸ்டி (Yezdi)-ம் ஒன்று. இந்த நிறுவனமே தான் தற்போது ராயல் என்பீல்டுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் போட்டியை இருமடங்காக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் யெஸ்டி நிறுவனம் மிக மிக விலை உயர்ந்த அணிகலன்கள் சிலவற்றை தன்னுடைய புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன மாடல் ஒன்றிற்கு இலவசமாக வழங்க இருப்பதாக அது அறிவித்து இருக்கின்றது.
அப்படி என்ன அம்சத்தை அது வழங்க இருக்கின்றது? அதன் மதிப்பு என்ன? அந்த அம்சம் எதற்கு பயன்படும் என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். மேலும், எந்த பைக் மாடலின் விற்பனையை ஊக்குவிக்க அது இலவச திட்டத்தை அறிவித்திருக்கின்றது? அந்த பைக்கின் விலை மற்றும் சிறப்புகள் என்ன என்பது பற்றிய விபரங்களையும் காண உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் அட்வென்சர் ரக பைக்கிற்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைக்கும் பைக் மாடலே யெஸ்டி அட்வென்சர் ஆகும். இந்த பைக்கிற்கே ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தற்போது சிறப்பு இலவச திட்டத்தை அறிவித்து இருக்கின்றது. அதாவது, இந்த பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 'மவுண்டைன் பேக் அக்சரிஸ்' (Mountain Pack Accessory) பேக்கேஜை அது இலவசமாக வழங்க இருக்கின்றது.
இந்த பிரத்யேக அலங்கார அணிகலனின் சந்தை மதிப்பு ரூ. 17 ஆயிரம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதையே வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு, அதாவது, அட்வென்சர் பைக்கின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இலவசமாக வாரி வழங்க முன் வந்திருக்கின்றது யெஸ்டி நிறுவனம். இது ஓர் அணிகலன் மட்டுமே ஆகும். இந்த அணிகலனை பிரத்யேகமாக மலை பகுதிகளில் பயணிக்கும்போது பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மலை பயணங்களுக்கென்ற உருவாக்கப்பட்ட ஓர் ஆக்சரீஸ் பேக்கேஜே 'மவுண்டைன் பேக் ஆக்சரீஸ்' ஆகும். இந்த பேக்கேஜின்கீழ் ஜெர்ரி பாட்டில் தாங்கிகள், 5 லிட்டர் அளவுள்ள ஜெர்ரி கேன், கிராஷ் குவார்டு (கரடு-முரடான மலை பாதையில் பயணிக்கும் போது பைக்கில் ஸ்கிராட்ச் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும்), ஹேண்டில் பாரின் நுனியில் பொருத்தும் வெயிட்டுடன் சேர்த்து ஹேண்ட் குவார்டுகள் (கைளுக்கு பாதுகாப்பளிக்கும்) போன்றவை இந்த பேக்கேஜில் வழங்கப்படுகின்றன.
இதுதவிர இந்த பேக்கேஜில் ஹெட்லைட்டிற்கான கிரில்லும் வழங்கப்படுகின்றது. இவற்றையே முற்றிலுமாக இலவசமாக வழங்க யெஸ்டி முன் வந்திருக்கின்றது. இதன் வாயிலாக யெஸ்டி அட்வென்சர் பைக்கின் விற்பனை லேசாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலவசம் என கூறிவிட்டு மறைமுகமாக பைக்கின் விலையை யெஸ்டி ஏற்றிவிட்டதோ என நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், அதே பழைய விலையிலேயே அது விற்கப்படுகின்றது. யெஸ்டி அட்வென்சர் மோட்டார்சைக்கிள் ரூ. 2.16 லட்சம் தொடங்கி ரூ. 2.20 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இந்த பைக் ராயல் என்பீல்டு ஹிமாலயனுக்கு மிக சிறந்த போட்டியாளனாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
ஆனால், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் சற்று பின் தங்கியே இருக்கின்றது. இந்த நிலையிலேயே இலவச திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. யெஸ்டி அட்வென்சர் பைக்கில் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளாக பல வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் கன்சோல் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இது திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும். அத்துடன், செல்போனை சார்ஜ் செய்துக் கொள்ள ஏதுவாக சி டைப் சார்ஜிங் பாயிண்டும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. நீண்ட தூர பயணங்களின்போது உறவினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க இந்த பாயிண்டை பயன்படுத்தி செல்போனை சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.
இத்துடன், பாதுகாப்பான பயணத்தை வழங்கும் விதமாக இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், மூன்று மோட்களுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 334 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு மோட்டார் ஆகும்.
இது அதிகபட்சமாக 29.89 பிஎச்பி பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 29.84 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸை ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் இந்த பைக் கொண்டுள்ளது. இது ஈசியான மற்றும் ஸ்மூத்தான கியர் மாற்றத்தை வழங்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அம்சங்களுடன் சேர்த்து சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், மோனோஷாக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவையே ஆஃப்-ரோடு பயணத்தையும் மிகவும் ரம்மியமானதாக மாற்றுகின்றன. இந்த பைக் வழக்கமான சாலைகளுக்கு மட்டுமல்ல மலை பாதைக்கும் ஏற்ற பைக் மாடல் ஆகும்.


Click it and Unblock the Notifications








