ரூ.16,000 மதிப்புள்ள பொருள்களை இலவசமா தூக்கி கொடுக்கும் யெஸ்டி! எந்த பைக்குக்கு தெரிஞ்சா ஆளுக்கு 2வாங்குவீங்க!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட பைக் மாடல்களில் யெஸ்டி ரோட்ஸ்டர் (Yezdi Roadster)-ம் ஒன்றாகும். இந்த பைக்கிற்கு தற்போது சந்தையில் போட்டி பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் காரணத்தினாலேயே விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டும், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு யெஸ்டி நிறுவனம் தற்போது சிறப்பு சலுகை ஒன்றை இந்த ரோட்ஸ்டர் பைக் மாடலுக்கு அறிவித்து இருக்கின்றது. அதாவது, ரூ. 16 ஆயிரம் மதிப்புள்ள பைக் அலங்கார அணிகலன்கள் சிலவற்றையே அது இலவசமாக வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிரையல் பேக் (Trail Pack) எனும் பெயரின்கீழ் விற்கப்படும் இரண்டு சக்கர வாகன அலங்காரப் பொருட்களையே அது இலவசமாக வழங்க இருக்கின்றது. இலவசம் என கூறிவிட்டு பைக்கின் விலையை யெஸ்டி ஏத்தியிருக்குமோ என சந்தேகிக்க வேண்டாம். பைக்கின் விலையில் எந்த மாற்றத்தையும் அது செய்யவில்லை.

Yezdi announced free accessory package

ரூ. 2.10 லட்சம் என்கிற பழைய விலையிலேயே அது விற்கப்படுகின்றது. ஆனால், இந்த இலவசமானது குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில், இந்த சலுகையின் துள்ளியமான காலாவதி நாள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி இந்த மாத இறுதி வரை மட்டுமே இந்த இலவசம் கிடைக்கலாம் என தெரிகின்றது. ஆனால், இது அதிகாரப்பூர்வமானது அல்ல.

டிரையல் பேக்கின்கீழ் பலதரப்பட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், கூடுதல் பொருட்களை எடுத்துச் செல்ல ஏதுவாக சேடில் பேக் (saddle bag), காற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக சிறந்த வைசர் கிட் (visor kit), ஹெட்லேம்ப் கிரில், பின் பக்க பயணிக்கான பேக்-ரெஸ்ட் (backrest), கிராஷ் குவார்டு மற்றும் பைக் கவர் ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன.

Yezdi announced trail pack free

இந்த அம்சங்கள் வாயிலாக பைக் கவர்ச்சியாகுவதோடு, பாதுகாப்பானதாகவும் மற்றும் சுவாரஷ்யமான பயண அனுபவத்தையும் வழங்கும். இதேபோல், இந்த சிறப்பு அம்சங்களை வழங்கியதற்காக வேறு எந்த சிறப்பம்சங்களையும் இந்த பைக்கில் இருந்து யெஸ்டி நீக்கவில்லை. முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மட்டுமே மேலே பார்த்த அனைத்து பொருட்களையும் அது இலவசமாக வழங்க முன் வந்திருக்கின்றது.

இந்த பைக்கை அலங்கரிக்கும் விதமாக ஏற்கனவே யெஸ்டி நிறுவனம் எல்இடி லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், அலாய் வீல்கள் ஆகியவற்றை வழங்கி இருக்கின்றது. மேலும், எஞ்ஜினை பொருத்த யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கில் 334 சிசி திறன் கொண்ட, லிக்யூடு கூல்டு சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 29.1 பிஎஸ் மற்றும் 29 என்எம் டார்க் ஆற்றலையும் வெளியேற்றும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்குடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர சிறந்த ரைடு அனுபவம் வழங்கும் நோக்கில் இந்த பைக்கின் முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

தொடர்ந்து, மிக சிறந்த பிரேக்கிங் சிஸ்டத்தை வழங்கும் நோக்கில் இந்த பைக்கில் இரண்டு வீல்களிலும் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது வழுவழுப்பான சாலைகளிலும் மிக சிறந்த பிரேக்கிங்கை வழங்க உதவும். இந்த பைக்கை நான்கு விதமான நிற தேர்வுகளில் நம்மால் வாங்கிக் கொள்ள முடியும்.

ரஷ் ஹவர் ரெட் (Rush Hour Red), ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green), லூனார் ஒயிட் (Lunar White) மற்றும் ஷேடோ கிரே (Shadow Grey) ஆகியவையே அவை ஆகும். இத்தகைய அதிக சிறப்புகள் கொண்ட பைக்கின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டே ரூ. 16 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை யெஸ்டி இலவசமாக அறிவித்து இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரோட்ஸ்டர் வகை பைக்குகளுக்கு கணிசமான அளவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலை சாதகமாக்கிக் கொள்ளும் பொருட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதே யெஸ்டி ரோட்ஸ்டர் ஆகும். இது ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு மிக சிறந்த போட்டியாளனாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இலவச அறிவிப்பின் காரணமாக கூடுதல் போட்டியை அந்த பைக்கை ரோட்ஸ்டர் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 17, 2024, 17:25 [IST]
English summary
Yezdi roadster now includes the trail pack as standard for a limited time
மேலும்... #yezdi #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+