குயிக்-ஷிஃப்டர் உடன் அப்ரில்லா ஆர்எஸ் 457 பைக் கிடைக்குதா..! அதுவும் இந்த விலைக்கேவா..! விழா காலா சலுகை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அப்ரில்லா நிறுவனம் அப்ரில்லா ஆர்எஸ்457 (Aprilia RS457) பைக் மாடலின் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த சிறப்பு குறிப்பிட்ட சில நாட்கள் வரை மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். இன்று (அக்டோபர் 23) தொடங்கி வருகின்றத அக்டோபர் 31 ஆம் தேதி வரை மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், சிறப்பு விலையாக ரூ. 4.17 லட்சம் என்கிற விலையிலேயே இந்த மோட்டார்சைக்கிளை வாங்கிக் கொள்ள முடியும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த விலைக்கே இரண்டு சக்கர வாகன விரும்பிகள் அதிகம் விரும்பும் அம்சமான குயிக்-ஷிஃப்டர் (Quick-shifter) வசதியையும் வழங்க இருப்பதாக அப்ரில்லா அறிவித்து இருக்கின்றது. இதுதவிர இன்னும் பல சிறப்பு சலுகைகளை இந்த பைக்கிற்கு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக அப்ரில்லா நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.

Aprilia ra457 with quick-shifter accessory

அந்தவகையில், ரோடு-சைடு அசிஸ்டன்ஸ், பூஜ்ஜியம் டவுன் பேமென்ட், இஎம்ஐ-இல் வாங்குவோருக்கு 8.99 சதவீதம் குறைவான வட்டி விகிதம், 3 ஆண்டுகள் வாரண்டி உள்ளிட்ட திட்டங்களையே அப்ரில்லா அறிவித்து இருக்கின்றது. அப்ரில்லா நிறுவனம் இந்த பைக்கின் உற்பத்தியை உள்ளூர் மயமாக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதன் வழக்கமான மாடல் இந்தியாவில் ரூ. 4.10 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே கூடுதலாக 7 ஆயிரம் ரூபாய் விலையில் அப்ரில்லா நிறுவனம் ஆர்எஸ் 457 மாடலின் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. சாதாரண நேரங்களில் பை-டைரக்சனல் குயிக்-ஷிஃப்டரை வாகனத்தில் பொருத்த வேண்டும் எனில் அதற்கு ரூ. 27,999 வரை செலவாகும்.

அத்துடன், லேபர் சார்ஜும் தனியாக செலுத்த வேண்டியிருக்கும். இத்தகைய காஸ்ட்லியான அம்சத்தையே அப்ரில்லா ரூ. 7 கூடுதல் கட்டணத்தில் வழங்க முன் வந்திருக்கின்றது. அப்ரில்லா ஓர் 457 சிசி மோட்டார்சைக்கிள் ஆகும். பாரல்லல் ட்வின் டிஓஎச்சி 4வி லிக்யூடு கூல்டு எஞ்சினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிபட்சமாக 9,400 ஆர்பிஎம்-இல் 46.7 பிஎச்பி-யையும், 6,700 ஆர்பிஎம்மில் 43.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த பைக் மாடல் ஆகும். மூன்று விதமான ரைடிங் மோட்கள், மூன்று விதமான லெவல்களைக் கொண்ட டிராக்சன் கன்ட்ரோல், டூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற அம்சங்களையே இந்த பைக்கில் அப்ரில்லா வழங்கி இருக்கின்றது.

மேலும், இந்த பைக்கின் டெலிவரி பணிகள் கடந்த ஜூன் மாதத்திலேயே தொடங்கியது. நடிகர் ஜான் ஆபிரகாம்கூட இந்த காரையே பயன்படுத்தி வருகின்றார். இந்த பைக்கில் சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு முன் பக்கத்தில் 41 மிமீ யுஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

தொடர்ந்து, இந்த பைக்கின் முன் பக்க வீலில் 320 மிமீ டிஸ்க்கும், பின் பக்க வீலில் 220 மிமீ டிஸ்க்கும் சிறந்த பிரேக்கிங்கிற்காக வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, இன்னும் பல்வேறு சிறப்பு மற்றும் கவர்ச்சிகரமான அம்சங்களை அப்ரில்லா வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வரும் விழாக் காலத்தை முன்னிட்டு வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பு சலுகைகளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையிலேயே அப்ரில்லா நிறுவனம் ஆர்எஸ் 457 பைக்கை குயிக் ஷிஃப்டர் அம்சத்துடன் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதற்கு என்ன மாதிரியான வரவேற்புக் கிடைக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 23, 2024, 18:24 [IST]
English summary
You can buy aprilia rs457 bike with quick shifter accessory at just rs 4 17 lakh more details
மேலும்... #aprilia #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+