ரூ. 82,000க்கு ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! இதோட பேருக்காகவே நிறைய பேரு இந்த டூ-வீலர வாங்குவாங்க போலையே!
ஜீலியோ இ-பைக்ஸ் (Zelio Ebikes) எனும் மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் அதன் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. மிஸ்ட்ரி (Mystery) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓற் ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (High Speed Electric Scooter) மாடல் ஆகும். இந்த மின்சார ஸ்கூட்டருக்கு அறிமுக விலையாக ரூ. 81,999 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏதுவான தயாரிப்பாக இதனை ஜீலியோ நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. தொடர்ந்து, இதன் பயன்பாட்டை மிகுந்த அட்வான்ஸ்டானதாக மாற்றும் பொருட்டும் பல்வேறு சிறப்பு வசதிகளை இந்த வாகனத்தில் ஜீலியோ வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், ரிவர்ஸ் கியர், பார்க்கிங் சுவிட்ச், ஆட்டோ ரிப்பேர் சுவிட்ச், யுஎஸ்பி சார்ஜிங் மற்றும் டிஜிட்டல் திரை உள்ளிட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, மிக முக்கியமான அம்சமாக டிஜிட்டல் திரை, சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் மற்றும் திருட்டை தடுக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்டவையும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. எனவே இந்த வாகனத்தின் உரிமையாளர்கள் அட்வான்ஸ்டு ரைடு அனுபவத்துடன் சேர்த்து திருட்டு பயமில்லாமலும் இருக்க முடியும் என தெரிகின்றது.
தொடர்ந்து ஸ்மூத்தான ரைடு அனுபவத்திற்காக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் முன் மற்றும் பின் பக்கங்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், அட்வான்ஸ்டு காம்பி பிரேக் சிஸ்டம் (Combi Brake System) பாதுகாப்பான ரைடு அனுபவத்திற்காக வழங்கப்பட்டு உள்ளது.

நிற தேர்வை பொருத்த வரை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கருப்பு (Black), கடல் பச்சை (Sea Green), கிரே (Grey) மற்றும் சிவப்பு (Red) ஆகிய வண்ண தேர்வுகளிலேயே மிஸ்ட்ரி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
இதற்காக 72V/29AH லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, பவர்ஃபுல் மோட்டாராக 72V மின்சார மோட்டாரே மிஸ்ட்ரி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும். இந்த அம்சங்கள் வாயிலாக இந்த வாகனம் தினசரி பயன்பாட்டிற்கு உகந்தது என்பது தெரிய வந்திருக்கின்றது.

இதேபோல், இந்த வாகனம் அதிக எடையைத் தாங்கும் திறன் கொண்டதாகவும் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஜீலியோ நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக கிரேஸி, எக்ஸ்-மென் மற்றும் ஈவா உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் உள்ளன. இவற்றின் வரிசையிலேயே தற்போது புதிதாக மிஸ்ட்ரி ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இணைக்கப்பட்டு இருக்கின்றது.
மிஸ்ட்ரி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தொடர்ந்து ஜீலியோ நிறுவனம் விரைவில் மற்றுமொரு புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இம்முறை கார்கோ பயன்பாட்டு வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே அது அறுமுகம் செய்ய உள்ளது. அதுவும், ஹை ஸ்பீடு பிரிவிலேயே அறிமுகம் செய்யப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. 90 கிமீ ரேஞ்ச் மற்றும் 150 கிலோவிற்கும் அதிகமான எடையை தாங்கும் திறன் ஆகிய அம்சங்களுடனேயே அது அறிமுகம் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. இந்த டிமாண்டை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டே ஜீலியோ நிறுவனம் தன்னுடைய மிஸ்ட்ரி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. குறிப்பாக, குறைவான விலையில் அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









