டிவிஎஸ் எக்ஸ்எல்போல எல்லாரும் இந்த வண்டிய ஓட்டலாம்.. தெரிஞ்சே லைசென்ஸ வீட்டுல வச்சுட்டு போனாலும் சிக்கல் வராது
இந்தியாவில் டிவிஎஸ் எக்ஸ்எல் (TVS XL) மொபட் ஃபேமஸ் ஆகுவதற்கு அதன் எளிய தோற்றமும், யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிற அதன் அமைப்புமே முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த நிலையிலேயே, டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐப் போல யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற வசதியுடன் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஜீலியோ (Zelio) நிறுவனம், எக்ஸ்-மென் (X-Men) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
இது ஓர் குறைந்த வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். நாட்டில் நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ரூ. 71 ஆயிரத்து 500 என்கிற விலையிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், இது ஆரம்ப நிலை தேர்வின் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.

இரண்டு விதமான திறன் கொண்ட லீட் ஆசிட் பேட்டரி பேக் (Leas Acid) தேர்வுகள் மற்றும் இரண்டு விதமான லித்தியம் அயன் (Lithium Ion) பேட்டரி பேக் தேர்வுகள் என்றே நான்கு விதமான ஆப்ஷன்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் லீட் ஆசிட் பேட்டரி பேக் தேர்வில் 60V 32AH மற்றும் 72V 32AH என்கிற இரண்டு வெவ்வேறு திறன் கொண்ட பேட்டரி பேக் தேர்வுகளும், லித்தியம் அயன் பேட்டரி பேக் தேர்வில் 60V 30AH மற்றும் 74V 32AH என்கிற இரண்டு மாறுபட்ட திறன் கொண்ட பேட்டரி பேக் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

இதற்கு விலைகளும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், ரூ. 71,500 தொடங்கி ரூ. 91,500 என்கிற விலையே இதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எக்ஸ்-மென் 2.0 ஓர் குறைவான வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என கூறியிருந்தோம்.
அதன் டாப் ஸ்பீடே மணிக்கு 25 கிமீ மட்டுமே ஆகும். ஆகையால், இதை ஓட்ட டிரைவிங் லைசென்ஸ், வாகன பதிவு என எதுவும் தேவைப்படாது. ஆகையால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என யார் வேண்டுமானாலும் இதை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
முழு சார்ஜில் இதில் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். எனவே இந்த வாகனம் டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐ போல அதிக பயன்பாட்டு திறன் கொண்டதாக இருக்கும் என தெரிகின்றது. 60/72V BLDC எலெக்ட்ரிக் மோட்டாரே இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
ஒவ்வொரு முறையும் முழுமையாக சார்ஜ் செய்ய 1.5 யூனிட்டுகள் மின்சாரமே இந்த வாகனத்திற்கு தேவைப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், ஒன்றிரண்டு ரூபாய் செலவிலேயே இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். 180 கிலோ வரையில் எடைத் தாங்கும் திறன் கொண்டதாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளது.
இதேபோல், லித்தியம் அயன் பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரமும், லீட் ஆசிட் பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 8 மணி நேரம் முதல் 10 மணி நேரமும் தேவைப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. சிறப்பம்சங்களையும் இந்த வாகனத்தில் ஜீலியோ வாரி வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் கியர், பார்க்கிங் சுவிட்ச், ஆட்டோ ரிப்பேர் ஸ்விட்ச், யுஎஸ்பி சார்ஜர் மற்றும் டிஜிட்டல் திரை உள்ளிட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் பொருட்டு முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பெஷன் மற்றும் பின் பக்கத்தில் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு ஓராண்டு அல்லது 10 ஆயிரம் கிமீ வாரண்டி திட்டத்தையும் ஜீலியோ அறிவித்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது ஓர் குறைந்த வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எக்ஸ்-மேன் 2.0-வை பயன்படுத்தலாம். பள்ளி மாணவர்கள, கல்லூரி மாணவர்கள் மற்றும் முதியவர்களால் கூட இதை இயக்கிக் கொள்ள முடியும். இதன் விலையும் குறைவு என்பதால் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









