இந்தியர்களுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா! ரூ.59,273க்கு சூப்பரான இ-ஸ்கூட்டர் அறிமுகம்! நகரங்களுக்கு ஏற்ற டூவீலர்!
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்டார்ட்-அப் மின் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஜீலியோ இ-பைக்ஸ் (Zelio Ebikes)-ம் ஒன்று. இந்த நிறுவனமே முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் சவால் விடும் வகையில் மிகவும் குறைவான விலையில் அதன் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. கிரேசி எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே அது நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஒட்டுமொத்தமாக மூன்று வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். மூன்று விதமான வேரியண்டுகளிலும் வெவ்வேறு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அந்த பேட்டரி பேக் ஆப்ஷன் பற்றியும், கிரேசி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள் மற்றும் விலை விபரங்கள் பற்றியும்தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, கிரேசி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகையால் எந்தெந்த நிறுவனங்களுக்கு போட்டி அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

கிரேசி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வேரியண்ட் விபரம்: கிரேசி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். கிரேசி ஐ (GRACYi), கிரேசி ப்ரோ (GRACY Pro) மற்றும் கிரேசி பிளஸ் (GRACY+) ஆகியவையே அந்த மூன்று விதமான வேரியண்டுகள் ஆகும்.
கிரேசி ஐ: இந்த வேரியண்டை ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். இதில், 60/72V திறன்மிக்க டைனமிக் பிஎல்டிசி (BLDC) மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மொத்த எடையே 60 கிலோ மட்டுமே ஆகும். ஆனால், இதில் 150 கிலோ வரையில் ஏற்ற முடியும். மேம்பட்ட பாதுகாப்பிற்காக ஸ்கூட்டரில் முன் வீலில் டிஸ்க் பிரேக்கும், பின் வீலில் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

கிரேசி ஐ வேரியண்டின் பேட்டரி பேக் ஆப்ஷன்கள்: 60V/32AH லெட் ஆசிட் ரூ. 59,273-க்கு விற்கப்படுகின்றது. இதில் ஓர் முழுசார்ஜில் 55-60 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதை முழுமையாக சார்ஜ் செய்ய 7-8 மணி நேரம் தேவைப்படும். 72V/32AH லெட் ஆசிட் ஆப்ஷனே கிரேசி ஐ வேரியண்டில் வழங்கப்படும் இரண்டாவது ஆப்ஷன்.
இதன் விலை ரூ. 61,773 ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 70 கிமீ முதல் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதை முழுமையாக சார்ஜ் செய்ய 7-8 மணி நேரம் வரை தேவைப்படும். மூன்றாவது ஆப்ஷனாக 60V/38AH லெட் ஆசிட் பேட்டரி பேக் இருக்கின்றது.

அதன் விலை ரூ. 65,073 ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 80-90 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதை முழுமையாக சார்ஜ் செய்ய 8-9 மணி நேரம் வரை தேவைப்படும். 72V/38AH லெட் ஆசிட் கிரேசி ஐ தேர்வில் வழங்கப்படும் நான்காவது பேட்டரி பேக் தேர்வாகும். இதன் விலை ரூ. 68,773 ஆகும். இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
மேலும், இதை ஃபுல் சார்ஜ் செய்ய 9-10 மணி நேரம் வரை தேவைப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கிரேசி ஐ-இல் வழங்கப்படும் கடைசி பேட்டரி பேக் ஆப்ஷனாக 60V/30AH லித்தியம் அயன் இருக்கின்றது. இதற்கு ரூ. 82,273 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் தேவைப்படும். ஃபுல் சார்ஜில் 80 கிமீ தூரம் டிராவல் பண்ணலாம்.
கிரேசி ப்ரோ: இந்த தேர்விலும் 60/72V திறன் கொண்ட பிஎல்டிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தேர்வின் மொத்த எடை 70 கிலோ ஆகும். இதனாலும் 150 கிலோ வரை ஏற்றிச் செல்ல முடியும். மேலும், இதிலும் பயணிகளின் பாதுகாப்பான ரைடு..
..அனுபவத்திற்காக முன் வீலில் டிஸ்க் பிரேக்கும் பின் வீலில் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த வேரியண்டில் நான்கு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இப்போது இரண்டு பேட்டரி பேக் தேர்வுகள் பற்றிய விபரத்தையே ஜீலியோ வெளியிட்டு இருக்கின்றது.
கிரேசி ப்ரோ பேட்டரி பேக் விபரம்: முதல் பேட்டரி பேக் தேர்வாக 72V/42AH லெட் ஆசிட் இருக்கின்றது. இதற்கு அதிகபட்சமாக ரூ. 79,999-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் ஓர் முழு சார்ஜில் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதை முழுமையாக சார்ஜ் செய்ய 7-9 மணி நேரம் வரை தேவைப்படும்.
கிரேசி ப்ரோவில் வழங்கப்படும் இரண்டாவது பேட்டரி பேக் தேர்வாக 60V/30AH லித்தியம் அயன் இருக்கின்றது. இதற்கும் அதே ரூ. 79,999 மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இந்த பேட்டரி பேக்கை ஃபுல்லாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் வரை தேவைப்படும்.
கிரேசி பிளஸ்: இந்த வேரியண்டிலும் ஐந்து விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மேலும், 60/72V திறன் கொண்ட அதே பிஎல்டிசி மோட்டாரே இந்த வேரியண்டிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் மொத்த எடை 60 கிலோ மற்றும் 150 கிலோ வரை இதில் ஏற்றிச் செல்ல முடியும். சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் வீலில் டிஸ்க் பிரேக்கும், பின் வீலில் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது.
கிரேசி பிளஸ் பேட்டரி பேக் தேர்வு பற்றிய விபரம்: முதல் பேட்டரி பேக் தேர்வாக 60V/30AH லெட் ஆசிட் உள்ளது. இதற்கு ரூ. 60,073 எனும் மலிவு விலையே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஓர் முழு சார்ஜில் 55-60 கிமீ தூரம் வரை டிராவல் பண்ணலாம்.
இதை ஃபுல்லாக சார்ஜ் செய்ய 7-8 மணி நேரம் வரை தேவைப்படும். இரண்டாவது பேட்டரி பேக் தேர்வாக 72V/30AH லெட் ஆசிட் இருக்கின்றது. இதற்கு ரூ. 62,573 விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் ஃபுல் சார்ஜில் 70 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
7-9 மணி நேரமே இதை முழுமையாக சார்ஜ் செய்ய போதுமானது ஆகும். மூன்றாவது பேட்டரி பேக் தேர்வாக 60V/38AH லெட் ஆசிட் இருக்கின்றது. இதற்கு ரூ. 65,873 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓர் ஃபுல் சார்ஜில் 70-75 கிமீ வரை பயணிக்க முடியும். 8-9 மணி நேரத்திலேயே இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்.
72V/38AH லெட் ஆசிட் இதுவே நான்காவது பேட்டரி பேக் தேர்வாகும். இதன் விலை 69,573 ரூபாயும். 100 கிமீ தூரம் வரை ஓர் முழு சார்ஜில் இதில் பயணிக்க முடியும். ஆனால், இதை ஃபுல்லாக சார்ஜ் செய்ய 9-10 மணி நேரம் வரை தேவைப்படும்.
கடைசி மற்றும் மிக சிறந்த பேட்டரி பேக் தேர்வாக 60V/30AH லித்தியம் அயன் உள்ளது. இதன் விலை ரூ. 83,073 ஆகும். இதை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் தேவைப்படும். அதேவேளையில், ஓர் ஃபுல் சார்ஜில் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
ஜீலியோ இ-பைக்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மலிவு விலைக் கொண்டவை மட்டுமல்ல. அவை அதிக சிறப்புகளைத் தாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும்கூட. அந்தவகையில் புதிய கிரேசி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் திருட்டைத் தவிர்க்கும் அலாரம், ரிவர்ஸ் கியர், ஆட்டோ ரிப்பேர் சுவிட்ச், டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் தாராளமான பூட் ஸ்பேஸ் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், லெட் ஆசிட் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி பேக் தேர்வுகள் இரண்டிற்கும் இரண்டு ஆண்டுகள் அல்லது வரம்பற்ற கிலோமீட்டர்கள் உத்தரவாதத்தையும் ஜீலியோ இ-பைக்ஸ் வழங்குகின்றது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டே இந்த சிறப்பான திட்டத்தை அது வழங்குகின்றது. எனவே இவற்றின் வருகை முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களான ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனெர்ஜி மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் ஆகியவற்றிற்கு கடுமையான போட்டி சூழலை உருவாக்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அனைத்தும் குறைவான வேகத்தில் இயங்கும் திறன் கொண்டவை என்பதால் அவற்றை பதிவு செய்ய வேண்டாம் என தெரிகின்றது. இவற்றின் துள்ளியமான வேகம் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், குறைந்த வேகம் கொண்ட இ-ஸ்கூட்டர்கள் என்றே அவை குறிப்பிடப்படுகின்றன.
இதற்கு மணிக்கு 25 கிமீட்டருக்கும் குறைவான வேகத்தில் கிரேசி இ-ஸ்கூட்டர் பயணிக்கும் என்பதே பொருள் ஆகும். இதுதான் அதன் உண்மையான வேகம் என்றால் கிரேசி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பதிவு செய்யவோ அல்லது அதை ஓட்ட டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்றோ எந்தவொரு அவசியமும் இல்லை என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









